ஆயர்பாடி மாளிகையில் கிருஷ்ணன்.. வெண்ணெய் திருடுவான்.. மண்ணை உண்டு மாட்டிக்கொண்டது ஏன் தெரியுமா?
சென்னை: கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் அங்கு மண்ணையும் தின்று யசோதா அன்னையிடம் அடி வாங்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமன், கிருஷ்ணர் மண்ணை உண்ணுகிறார் என தன் தாய் யசோதாவிடம் புகார் கூறினான். மிகுந்த கோபமடைந்த யசோதா, கிருஷ்ணரின் வாயை திறக்க சொன்னாள். அங்கே அவள் கண்ட காட்சி அதிசயத்தை ஏற்படுத்தியது. தான் பார்த்த காட்சியை கண்டு யாசோதா வியந்தே போனாள். கிருஷ்ணரின் வாயில் அவள் மொத்த அண்டத்தையே கண்டாள். சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்கள், வானம், மலைகள், ஆறுகள், தீவுகள், பெருங்கடல்கள், அனைத்து உயிர் வாழும் ஜீவராசிகள் மற்றும் உயிர் வாழாத பொருட்களைக் கண்டாள் யசோதா.

ஆயர்பாடியில் கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. பால் கார பெண்கள் வயலை கடக்கையில், கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் கற்களை அவர்களின் பானையின் மீது எரிந்து பானையை உடைத்து விடுவார்கள்.
யசோதா வீட்டில் அதிகமான அளவில் பாலும், வெண்ணெய்யும் இருக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து கிருஷ்ணரும், பலராமனும் பாலையும் வெண்ணெயையும் திருடி சாப்பிட்டு வந்தனர். இதனால் பெண்கள் அனைவரும் யசோதாவிடம் புகார் அளித்தனர். அதுவே யாசோதாவிற்கு கவலையை ஏற்படுத்தியது. கிருஷ்ணருக்கு பால் பொருட்களின் மீதிருந்த ஆசையால் அதை திருடி சாப்பிடுகிறார் என்று தெரிந்து வெண்ணெய் ஜாடிகளை ஒன்றாக கட்டி, உத்திரத்தில் தொங்க விட்டிருந்தாள் யசோதா. அதனால் அவை கிருஷ்ணரின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது.
கிருஷ்ணர் தூங்கியதால், அருகில் இருந்த கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் இரைக்க சென்றால் அவள். படுக்கையில் இருந்து எழுந்த கிருஷ்ணர் விசில் அடித்தார். சிறுவர்கள் சிலரும், குரங்குகளும் அவரின் வீட்டை நோக்கி வந்தனர். அங்கே வந்த அவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கிருஷ்ணரை தங்களின் தோள் மீது ஏற வைத்து, வெண்ணெய் ஜாடிகளை இறக்கினர். பின் அனைவரும் வெண்ணெய்யை உண்ண ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் மூழ்கி போன அவர்கள் வீட்டிற்குள் யசோதா நுழைவதை கவனிக்க தவறினர். வீட்டிற்குள் வந்த யசோதா, இதனை கண்டு கலங்கினாள். பின் கிருஷ்ணரை கண்டித்தாள்.
மிகவும் கோபமடைந்த அவள் கிருஷ்ணரை ஒரு குச்சியை கொண்டு துரத்தினார். குரங்குகளும் நண்பர்களும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கிருஷ்ணரோ தன் தாயிடம் இருந்து நன்றாக அடி வாங்கினார். கிருஷ்ணரை ஒரு கயிற்றில் கட்ட முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முடிச்சை போடும் போதும், அந்த கயிறு மிகவும் குட்டையாவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர் தானே முடிச்சுகளை போட்டார். கண்ணனை ஒரு உரலில் கட்டி வைத்தார் யசோதா.
தவழ முயற்சித்த கிருஷ்ணர், முற்றத்தில் இருந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கு இடையே மாட்டி கொண்டார். கீழே விழுந்த அந்த மரங்கள் தேவர்களாக உருமாறி, கிருஷ்ணரை வணங்கினார்கள். நாரதரின் சாபத்தால் 100 வருடங்கள் இப்படி மரமாக நின்றிருந்த அவர்களை கிருஷ்ணர் விடுவித்தார். மரங்களாக மாறியவர்களுக்கு சாப விமோசனம் தருவதற்காகவே கண்ணன் மண்ணையும் வெண்ணெயும் உண்டு மாட்டிக்கொண்டு யசோதா அன்னையிடம் தண்டனை பெற்று மாட்டிக்கொண்டார்.
கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும் என்பதற்காகவே இன்றைக்கும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் படைத்து வழிபடுகின்றனர். நம் வீட்டு குட்டிக்கண்ணன்களும் வெண்ணெய் சாப்பிடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படும் நாளில் நாமும் வெண்ணெய் படைத்து வழிபட்டு கண்ணனின் அருளை பெறுவோம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications