மதுரை சித்திரை திருவிழா 3வது நாள்..ஆணவத்தை அடக்கும் சுந்தரேஸ்வரர்..கேட்ட வரம் தந்தருளும் மீனாட்சி
மதுரை: ஆணவத்தால் ஆடக்கூடாது அப்படி தலைக்கனத்தோடு ஆடினால் ஆண்டவன் தலையில் தட்டி உட்கார வைத்து விடுவார் அதை உணர்த்தும் வகையில் சித்திரை திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று சுந்தரேஸ்வரர் கைலாய பர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும். அன்னை மீனாட்சியோ கேட்டதை கொடுக்கும் காமதேனு வாகனத்தில் பவனி வருகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் கோயிலுக்குள் முத்துராமையர் மண்டகப்படியில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெற்றது.

மாலையில் பூத வாகனத்தில் சுந்தரேஸ்வரரும் அன்னம் வாகனத்தில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். பெரிய உருவமும், அச்சுறுத்தும் கண்ணும், பற்களுமாக பார்ப்பவரை பயமுறுத்துவது பூதம். பிறவிப்பிணியும் பூதம் போல உயிர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இறைவனைச் சரணடைந்தால், அந்த பூதத்தை அடக்கி நம்மைக் கரை சேர்ப்பார். பூத வாகனத்தில் சிவனைத் தரிசித்தால் காரணம் இல்லாத பயம் நீங்கி மனதில் துணிவு உண்டாகும்.
வெண்ணிற அன்னம் துாய்மையின் அடையாளம். பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் அருந்தும் தன்மை இதற்கு உண்டு. பாலும், நீருமாக உலகத்தில் நன்மை, தீமை கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும் நல்லதை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். இதன் அடிப்படையில் இன்றிரவு மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசிப்போம்.
நேற்றைய தினம் சுவாமி அம்மன் ஊர்வலத்தின் போது பலத்த மழை பெய்ததால் வாகன வீதி உலா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேற்கு கோபுரம் வழியாக சித்திரை வீதியில் புறப்பாடு நடைபெற்றது. சுவாமியின் திருமேனியில் மழை நீர் பட்ட காரணத்தினால் திருக்கோவிலுக்குச் சென்று பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவில் இன்று காலை 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் கோயிலுக்குள் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் கைலாச பர்வதம் காமதேனு வாகனங்களில் திருவீதியுலா வருகின்றனர். துன்பம் தருபவர்களுக்கும் இன்பம் அளிக்கும் சுந்தரேஸ்வரர் இன்று பவனி வரும் போது, நாம் பிறருக்கு துன்பம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்பை வேண்டலாம். அந்தக் கருணைக்கடல் நம்மை ஆட்கொள்வார்.
இலங்கை அரசன் ராவணன் ஆணவத்தால் சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான். அவன் செருக்கை அடக்க எண்ணிய சிவன், கால் கட்டை விரலால் அழுத்த மலையின் அடியில் சிக்கினான். எவ்வளவு முயன்றும் தப்ப முடியவில்லை. பின்னர் தவறை உணர்ந்து, 'இறைவா! என் பிழையைப் பொறுத்தருள்க" என வேண்ட சிவன் மனமிரங்கி விடுவித்தார்.
உடல் பலம், செல்வ வளம் இவற்றின் காரணமாக மனிதன் ஆணவம் கொள்கிறான். அதைப் போக்க சிவன் கைலாய பர்வத வாகனத்தில் பவனி வருகிறார். இவரைத் தரிசித்தால் ஆணவம் விலகி நல்ல புத்தி உண்டாகும்.
அன்னை மீனாட்சியோ கருணைக் கடல். தன் பிள்ளைகள் தவறு செய்பவர்களாயினும், அவர்களையும் மன்னித்து ஏதேனும் ஒரு வகையில் படியளக்கும்படி சுந்தரேஸ்வரரை துாண்டுபவள். தேவலோகத்திலுள்ள பசு காமதேனு. கேட்டதை வழங்கும் தன்மை கொண்டது. பால் சுரந்து பசி தீர்க்கும் பசு போல, மீனாட்சியும் நமக்கு வேண்டும் வரம் அளிக்க காமதேனுவில் பவனி வருகிறாள். அவளிடம் அருளும், பொருளும் வேண்ட மாசி வீதிகளுக்கு இரவு 7 மணிக்கு சென்று அம்மை அப்பனை தரிசனம் செய்வோம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications