Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாசி மகத்தில் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும்.. ஒளிமயமான எதிர்காலம் தரும் திருக்கோஷ்டியூர்

திருக்கோஷ்டியூர் திருத்தலத்தின் மகிமை அற்புதமானது. திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பிரவகித்து வந்தது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கு வந்து, மாசி மக நன்னாளில், தெப்பக்குளத்தில் இருந்து விளக்கெடுத்துச் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி என்பது ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் மாசி மகத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பிரவகித்து வந்தது என விவரிக்கிறது திருக்கோஷ்டியூர் ஸ்தல புராணம்.

Masi Magam festival on Tirukoshtiyur, If you light a lamp in Masi magam your wish will come true

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது இந்த ஆலயம். கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்த போது தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டார். இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் இங்கு ஆலோசனை செய்ததாகவும் இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.

Masi Magam festival on Tirukoshtiyur, If you light a lamp in Masi magam your wish will come true

பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு ஸ்ரீசௌமிய நாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு.

நவகிரகங்களில் ஒருவர் புதன் பகவான். நமக்கு புத்தியில் தெளிவையும் திடத்தையும் வீரியத்தையும் கொடுப்பவர் இவர். இவரின் மைந்தன் புரூரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஒருமுறை புரூரவச் சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் புண்ணிய பூமிக்கு வந்தார். அப்போது, அவர் வந்த நாள் மாசி மகாமகம்.

மகா மகம் எனும் நன்னாளில், மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரவச் சக்கரவர்த்தி. ஆனால் காசியம்பதி அருகில் இல்லையே என்று கலங்கினார். மனமுருகி பெருமாளைப் பிரார்த்தித்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பிரவகித்து வந்தது என விவரிக்கிறது திருக்கோஷ்டியூர் ஸ்தல புராணம்.

கிணற்றில் இருந்து வந்த கங்கை நீரில், நடுவே ஸ்ரீமகாவிஷ்ணு திருக்காட்சி தந்தார். தற்போது ஆலய பிராகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, 'மகாமக கிணறு' என்றும் மாசி மகக் கிணறு என்றும் போற்றி அழைக்கப்படுகிறது.

அதேபோல், இன்னொரு புராணச் சிறப்பும் திருக்கோஷ்டியூருக்கு உண்டு. இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து கூடிப் பேசினார்கள். புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த அவதாரமே நரசிம்ம அவதாரம் என்கிறது புராணம். அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து, கூடிப் பேசிய திருவிடம்... திருக்கோஷ்டியூர். கோஷ்டியாக எல்லோரும் கூடிப் பேசிய ஊர் என்பதால், திருக்கோஷ்டியூர் என்றானது. .

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்பெருமக்கள் இந்தத் தலத்துப் பெருமாளை கண் குளிரத் தரிசித்துள்ளனர். மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்தத் தலம் திவ்விய க்ஷேத்திரங்களில் மிக முக்கியமான தலம் என்று திருமால் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இத்தனை பெருமைகள் கொண்ட திருக்கோஷ்டியூர் திருத்தலத்தின் இன்னொரு அற்புதம் கோயிலின் திருக்குளம்.
மாசி மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய அம்சம் திருத்தேரோட்டம். அதேபோல் மற்றுமொரு சிறப்பு திருக்குளத்தில், பக்தர்களால் ஏற்றப்படும் விளக்கு. திருக்குளத்தில் விளக்கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் தங்களின் குறைகள் நிறைவேறுவதற்காக, குளக்கரையில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த விளக்குகளை எடுத்து வந்து, வீட்டில் தினமும் தீபாராதனை காட்டி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை

சௌமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர். இன்று கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். மாசிமக தினத்தை முன்னிட்டு இன்று காலையில் பெருமாள் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. நாளைய தினம் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+