தொட்டதெல்லாம் துலங்கணுமா? வீட்டின் 4 மூலையிலும் இந்த 1 முடிச்சு வெச்சு பாருங்க.. சூப்பரான பரிகாரம்
சென்னை: ஒரே ஒரு பொருள்கூட, நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்துவிடும்.. நாம் செய்யும் காரியங்களிலும் வெற்றியை தேடித்தந்துவிடும்.. இதற்காகவே எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி உள்ளனர். அதில் 2 வகையான பரிகாரத்தை இங்கே பார்ப்போம்.
பெரும்பாலான குடும்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ சில செயல்களை செய்துவிடக்கூடும். இவைகளில் ஒருசில செயல்கள், நமக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது அறியாமல் செய்யும் பிழைகளால், இப்படியான கஷ்டங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இதற்காகவே எளிய பரிகாரங்கள் நமக்கு உதவுகின்றன.

கல் உப்புகள்: கல் உப்புகள் இதற்கு பிரதானமாக பயன்படுகின்றன.. கல் உப்புகள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவர செய்யும் அற்புத சக்தி இந்த உப்புக்கு உள்ளது. அதனால்தான் வீட்டில் எப்போதுமே கல் உப்பு இருக்க வேண்டும் என்பார்கள்.
அதுமட்டுமல்ல, கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது.. எனவே, நேர்மறை ஆற்றலை அள்ளி தந்து, சகல செல்வங்களையும் வழங்கும் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது.
தரித்திரங்கள்: ஒரு பாத்திரத்தில் கல் உப்பு, மஞ்சள் இரண்டையும் சம அளவில் கலந்து, அதை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஓடுகின்ற நீரில் குளித்து விட வேண்டும். இதனால், உடம்பில் துர்சக்தி, தரித்திரங்கள் விலகிவிடும். அதேபோல, குளிக்கும் நீரில் கல் உப்பை மட்டுமே கலந்து குளிப்பதால், உடலிலுள்ள நெகடிவ் எனர்ஜி அனைத்தும் விலகி ஓடிவிடும். மேலும், வீட்டிலுள்ள 4 மூலைகளிலும் கல் உப்பை சிறு முடிச்சாக கட்டி வைப்பதால் தீய சக்திகள் அண்டாமல் இருக்கும்.
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் கழிவறைகளில் உப்பு வைப்பது நல்லது.. ஆனால், இதனை 2 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். இதனால், துர்சக்திகள், கிருமிகள், தொற்றுகள், அனைத்துமே விலகிவிடும். பெண்கள் வெள்ளிக்கிழமையன்று உப்பு கலந்த நீரிலும், ஆண்கள், சனிக்கிழமைகளில் உப்பு கலந்த நீரிலும் தலைமுழுகி, இறுதியில் சாதாரண தண்ணீரில் குளித்துவிடலாம். இதனால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அத்தனையும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்.
வெற்றிலைகள்: அதேபோல வெற்றிலைகளை வைத்தும் வீட்டிலுள்ள துர்சக்திகளை விரட்டலாம்.. வெற்றிலைகளை வீட்டின் வாசலிலேயே விடுவதால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும்.. ஆனால், வெற்றிலைகள் பசுமை மாறிவிடக்கூடாது, காய்ந்துவிட நேர்ந்தால் உடனே புதிய இலைகளை தொங்கவிட வேண்டும்.
ஒரு தாம்பூல தட்டில் ஒரு வெற்றிலை, பச்சை கற்பூரம் இரண்டையும் வைக்க வேண்டும். பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது, மனதார வேண்டி, உங்களுடையை குறைகளை சொல்லலாம்.
புதன்கிழமை: அதேபோல, புதன்கிழமைகளில், பிள்ளையார் கோவிலுக்கு சென்று, வெற்றிலை, ஏலக்காய் சேர்த்து தர்ப்பணம் செய்யலாம். இப்படி செய்து வந்தால், உங்களுக்கிருக்கும் தடைகள் நீங்கி, தொட்டதெல்லாம் துலங்கும்.












Click it and Unblock the Notifications