Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி 2023: திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவிற்கு போறீங்களா? மிஸ் பண்ணக்கூடாத விசயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பெயர்ச்சிக்காக பலரும் பரிகார தலங்களுக்கு சென்று வருகின்றனர். திருநள்ளாறு சென்று வணங்கினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. காரணம் அங்கு சனிபகவான் அனுக்கிரக சனிபகவானாக காட்சி அளிக்கிறார். இங்கு வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. திருநள்ளாறு கோவிலுக்கு சென்றால் எப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி: சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் கடக ராசிக்கு அஷ்டம சனி, சிம்ம ராசிக்கு கண்டச்சனியாக உள்ளது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி, மகர ராசிக்கு பாத சனி, கும்ப ராசிக்கு ஜென்ம சனி, மீன ராசிக்கு விரைய சனி என பயணம் செய்கிறார் சனி பகவான். சனிபகவானால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Sani peyarchi 2023: Tirunallar temple Sani Peyarchi from Makaram to Kumbam Dont miss this

திருநள்ளாறு தரிசனம்: ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, என சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து அங்குள்ள நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாற்றி சனீஸ்வரனை வணங்கினால் பாதிப்புகள் குறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆலயத்திற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அந்த ஆலயத்திற்கு சென்றால் நேராக சனி பகவானை மட்டுமே தரிசனம் செய்யக்கூடாது சில சன்னதிகளை தரிசித்து விட்டுதான் சனிபகவானை தரிசனம் செய்ய வேண்டும் என்று திருநள்ளாறு தலத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

Sani peyarchi 2023: Tirunallar temple Sani Peyarchi from Makaram to Kumbam Dont miss this

நள தீர்த்தம்: திருநள்ளாறு சென்ற உடனே நேராக நள தீர்த்தம் சென்று நீராட வேண்டும். அங்குள்ள நளன் கலி தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். வீட்டில் இருந்து அணிந்து சென்ற உடையுடன் நள தீர்த்தத்தில் குளிக்க வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்யும் நல்லெண்ணெய் தேய்த்து, மகாவிஷ்ணு வாசம் செய்யும் சீயக்காய்ப் பொடி தேய்த்து குளிப்பது ஐதீகம். நீராடிய பின், காய்ந்த உடை உடுத்தி, ஈரத் துணியை குளக்கரையில் ஓரமாகப் போட்டுவிட வேண்டும்.

நளன் தமயந்தி: நள மகாராஜாவின் கதையை படிப்பவர்களுக்கு சனி பகவானின் பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை. நிடத நாட்டு மன்னன் நளனை காதலித்து கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. தமயந்தி மீது கோபம் கொண்ட தேவர்கள் நளன் மீதும் பொறாமை கொண்டனர். நளனுக்கு ஏழரை சனி பிடித்தது. இதனால் எல்லா செல்வத்தையும் இழந்தான். நாடு இழந்து வனத்தில் தன்னுடன் வந்த தமயந்தியையும் பிரிந்து சேவகனாக,சமையல் செய்பவராக மாறினான் நளன்.

Sani peyarchi 2023: Tirunallar temple Sani Peyarchi from Makaram to Kumbam Dont miss this

ஏழரை சனி: ஏழரை சனி விடும் காலம் வந்தது. ஈசன் அருளால் திருநள்ளாறு தலம் வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான். நளன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே அவரது பெயரால் வழங்கப்படுகிறது. குளித்து விட்டு ஆடை மாற்றிய பின்னர் குளக்கரையில் நள விநாயகருக்குச் சிதறுகாய் உடைக்க வேண்டும். அப்போது பரிகாரம் நல்ல முறையில் நிறைவேற பிரார்த்தனை கொள்ள வேண்டும்.

தர்ப்பாரண்யேஸ்வரர்: தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பிடியிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.

Sani peyarchi 2023: Tirunallar temple Sani Peyarchi from Makaram to Kumbam Dont miss this

பிராணாம்பிகை: இங்கு மூலவராக தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் அருள்புரிகிறார். சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. அம்பாளின் பெயர் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் என்ற பெயரோடு அருள்பாலிக்கிறார். தியாகவிடங்கர், மரகத லிங்கம் ஆகியவற்றை வணங்கிய பின் சனி பகவானை வணங்க வேண்டும்.

அனுக்கிரக மூர்த்தி: சனிபகவான் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நளன் இந்த ஆலயத்திற்குள் நுழைந்து தர்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்ய போன போது அங்கிருந்த சுவற்றில் ஒளிந்து கொண்டாராம் சனிபகவான். அந்த இடத்தில் சனி பகவானின் சிறிய சிற்பம் உள்ளது அந்த இடத்திற்கு நேர் மேலே சனிபகவானின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த இடத்தை கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டும். பலருக்கும் இந்த இடம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மரகத லிங்கம்: சனியால் ஏற்படும் பாதிப்பு நீங்க மட்டுமல்லாது புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெற இத்திருத்தலத்துக்குப் பக்தர்களாக வருகை தருகிறார்கள். தியாகவிடங்கருக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்குப் பாலும் பழமும் நிவேதனம் செய்கிறார்கள். இந்தப் பிரசாதத்தை உண்டால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. மரகத லிங்கத்திற்கு ஒரு நாளைக்கு 5 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அபிஷேகத்தை தரிசனம் செய்வதே புண்ணியம்.

Sani peyarchi 2023: Tirunallar temple Sani Peyarchi from Makaram to Kumbam Dont miss this

அனுக்கிரக சனிபகவான்: தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். எனவே சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதங்களை நாம் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம் தவறில்லை. அனைவரும் அந்த பிரசாதத்தை சாப்பிடலாம்.

எள் தீபம் ஏற்றுவோம்: தரிசனம் முடிந்து வெளியே வரும் போது அந்த ஆலயத்தில் எள் தீபம் ஏற்ற வேண்டும். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் சங்கடங்கள் நீங்க எள் தீபம் ஏற்றி சனிபகவானை மனதார வேண்டினால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். இந்த முறை நாங்கள் திருநள்ளாறு சென்ற போது அந்த ஊரில் வசிக்கும் நண்பர் சு.கோவிந்தராஜன் சாந்தி குடும்பத்தினர் ஒவ்வொரு சன்னதியின் சிறப்புகளையும் எடுத்துக்கூறி தரிசனம் செய்ய வைத்தனர். நீங்களும் இனி திருநள்ளாறு சென்றால் இதை போல தரிசனம் செய்யுங்கள். சனிபகவானின் அனுக் கிரகம் கூடவே வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+