மணி பிளாண்ட் மகத்துவம்.. வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும் வாஸ்து செடி.. மணி பிளான்ட்டை பரிசாக தரலாமா? ஓஹோ
சென்னை: மணி பிளான்ட்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்? மணி பிளான்ட் செடி தரையில் படரலாமா? இந்த மணிபிளான்ட்டை பிறருக்கு பரிசாக தரலாமா? வாஸ்து சாஸ்திரத்தில் இதுகுறித்து சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன?
வாஸ்து சாஸ்திரத்தில் மணி பிளாண்ட் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மணி பிளான்ட் வீட்டில் வைப்பதால், கடன் பிரச்சனைகள் தீரும், செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.

மணிபிளான்ட்: எத்தனையோ செடிகள் அழகுக்காக வீட்டில் வைக்கப்பட்டாலும், செல்வம் பெருகி, பணம் தங்கியிருக்க வேண்டுமானால், மணி பிளான்ட்தான் பெரும்பாலும் வைக்கப்படுகிறது.. அதனால்தான், "மணி பிளான்ட்" என்று பெயரிலேயே இந்த செடியை அழைக்கிறார்கள்.
வீட்டிற்குள் மட்டுமல்ல, வீட்டிற்கு வெளியிலும் வைக்கலாம். கிச்சன்களிலும் இந்த வாஸ்து செடிகள் வைக்கப்படுகின்றன.. பூஜையில் வைத்து வளர்ப்பது பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்குமாம். எந்த அளவுக்கு இந்த செடியை சுத்தாக பராமரிக்கிறோமோ, அந்த அளவுக்கு பணவரவு பெருகும் என்பார்கள்.
பாசிடிவ் எனர்ஜி: பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. அதனால்தான், இந்த திசையில் இந்த செடியை வைக்க சொல்கிறார்கள். எனவே, வடகிழக்கு, அதாவது வடகிழக்கு மூலையில் இந்த செடியை ஒருபோதும் நடக்கூடாது. இந்த திசையில் வைப்பதன் மூலம், நேர்மறை ஆற்றல் தங்காது.
இந்த செடியில், பழுத்த இலைகள் இல்லாமல் அதனை அடிக்கடி பராமரிக்க வேண்டும்.. பழுத்த இலைகள் இருந்தால், அது வீட்டில் உள்ளவர்களின் உடல்நலத்தை பாதித்துவிடுமாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணச்செடியின் கொடி தரையில் படர கூடாது.. அப்படி படர்ந்தால், அதுவும் அசுபமாக கருதப்படுகிறது. ஒருவேளை தரையில் தடர நேரும்போது, இதன் கொடியை ஒரு நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏற்றி வைக்க வேண்டும்.
திருட்டு செடி: மணிபிளான்ட்டை வீட்டில் வைப்பதாக இருந்தால், வெள்ளிக்கிழமைகளை தேர்ந்தெடுக்கலாம்.. மங்களகரமான நாள் என்பதால், வெள்ளிக்கிழமையில் இந்த செடியை வெட்டவும் கூடாது. அதேபோல, மணி பிளான்ட்டை யாருக்கும் தானமாக, அன்பளிப்பாக தரக்கூடாதாம்.. அப்படி தந்தால், தன் வீட்டு அதிர்ஷ்டத்தையும் சேர்த்து தந்துவிடுவது போலாகிவிடுமாம். அதேபோல, இந்த மணி பிளான்ட் செடியை, திருடி வைத்தால், அதிக அளவு நல்லது நடக்குமாம்..
மணி பிளான்ட்டை செடியை காய்ந்து கருக விடக்கூடாது.. அடிக்கடி மண்ணை மாற்ற வேண்டும்.. மண்ணின் தரம் சரியாக இல்லை என்றாலும் கூட செடி காய்ந்துவிடும். அதனால், மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.. அந்த தொட்டியில் இயற்கையான உரம் லேசான அளவில் சேர்க்கலாம்.. மணி பிளாண்ட் மீது நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது.. இதனாலும், செடி கருகிவிடும். எனவே, நிழல் தென்படும் இடத்தில் இந்த செடிகளை வளர்க்கலாம். அதேபோல, மூடிய அறைகளுக்குள் இந்த செடி வைக்கப்பட்டிருந்தாலும் செடி வளராது.. எனவே போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications