சொத்து, நிலம் பிரச்சனை தீர வாழைத்தண்டு திரி தீபம்.. வாழை நார் திரியில் விளக்கேற்றினால் கோடி பலன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது, திரிகளை உபயோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. வீட்டில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம், செல்வம், சாந்தி, ஆரோக்கியம் கிடைக்கும். அதிலும் தினமும் 2 வேளை விளக்கேற்றினால், சீரான வாழ்வு அமையும்.. எனவே, விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை போலவே திரிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். திரிகள் பல வகைகளாக இருந்தாலும், வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
விளக்கிற்கு திரிகளை பயன்படுத்தும்போது, இரு திரியை சேர்த்து வைத்து தீபம் ஏற்ற வேண்டும். கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் இருக்க வேண்டுமே தவிர, தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றக்கூடாது.

திரிகளின் வகைகள்
திரிகளில் பலவகைகள் உள்ளன.. அதன் பலன்களும் உள்ளன.. குறிப்பாக, பஞ்சு திரியினால் விளக்கேற்றினால், வீட்டில் மங்கலம் நிலைத்து நிற்கும்.. தெய்வ குற்றம், பித்ரு சாபத்திலிருந்து விடுபட, இந்த பஞ்சு திரி தீபம் உதவும் என்பார்கள்.. தாமரைத்தண்டு திரியில் விளக்கை ஏற்றினால் பூர்வ ஜென்ம பாவமும், தெய்வக்குற்றமும், செய்வினை கோளாறுகளும் விலகும்.. இப்படி ஏற்றினால் குலதெய்வ அருளுடன், மகாலட்சுமியின் அருளையும் சேர்த்து பெறலாம்.
வெள்ளெருக்கு திரி
வெள்ளை எருக்கில் திரியுடன் தீபம் ஏற்றினால் பிள்ளையாரின் அருள் கிடைக்கும்.. பொருளாதார சிக்கல் சரியாகும்.. அந்தவகையில், வாழைத்தண்டு திரி பற்றி பார்ப்போம். வாழைத்தண்டு திரி என்பது, வாழைத்தண்டின் நாரை எடுத்து, அதை பஞ்சு போல செய்து திரியாக மாற்றி, விளக்கேற்றுவதாகும்..
முன்னோர்களின் சாபம் நீங்கவும், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், நிலம் சம்பந்தப்பட்ட சொத்து விவகாரங்களிலும், திருமணத்தடை போன்றவற்றுக்கும், நல்ல பலன் கிடைக்க, இந்த் வாழைத்தண்டு திரியில் தீபம் ஏற்ற சொல்வார்கள்.. வாழைத்தண்டு திரியை நல்லெண்ணெய் அல்லது பசு நெய்யில் ஏற்றி விளக்கேற்றலாம்.
பயன்கள் என்னென்ன
இந்த திரியை பெற வேண்டுமானால், வாழைத்தண்டினை நன்றாக காய வைத்து, அதன் நாரை தனியாக பிரித்து, பஞ்சு போல மாற்ற வேண்டும்.. பிறகு இதனை திரியாக மாற்றி, விளக்கேற்ற பயன்படுத்தலாம். வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் விளக்கேற்றினால், முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
குடும்பத்தில் இருக்கும் குலதெய்வ சாபங்கள் நீங்கும், பித்ரு சாபம் நீங்கும், குழந்தை வரம் கிட்டும். நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications