ஆடிப்பூரம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் பரிசாக அளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
திருச்சி: ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்பட்டன. நாளைய தினம் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்ட 12 ஆழ்வார்களின் ஒருவரான ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. பூமாதேவியின் அம்சமாக துளசி செடியில் அவதரித்த ஆண்டாளை வளர்த்தவர் பெரியாழ்வார். இறைவனுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து பின்னர் இறைவனுக்கு கொடுத்த ஆண்டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாக போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஆடிப்பூரம் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளைய தினம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ரங்க மன்னர் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
ஆண்டாளுக்கு பிறந்தநாள் பரிசாக ஆண்டுதோறும் பட்டு வஸ்திரம் பரிசளிப்பார் ஸ்ரீரங்கநாதர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள் பெருமாள் திருவடியில் ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்படும்.
இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் ஊழியர் யானை மீது அமர்ந்து பட்டு வஸ்திரங்களை எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கள பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கநாதர் அளித்த பட்டு வஸ்திரத்தையும் மங்கள பொருட்களையும் அணிந்து ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருளுவார். தேரோட்டத்தை காண ஏராளமானோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் திருவிழா கோலம் பூண்டுள்ளது நாளைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications