2024ல் ஜெயிக்கப்போகும் ராசிகள்.. தோல்விகளை துரத்த இந்த பரிகாரம் பண்ணுங்க.. ஆன்மீகம் டிப்ஸ்
சென்னை: சிலர் தொட்டதெல்லாம் வெற்றியாகும். சிலர் எதை செய்தாலும் தடைகளாக வரும். காரிய வெற்றிக்காகவும் செல்வ வளம் வேண்டியும் சில பரிகாரங்களை செய்யலாம். நமது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தாலோ, ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணி சரியில்லாமல் இருந்தாலோ, பாதிப்பிற்குரிய தசாபுத்தி நடந்தாலோ சில பரிகாரங்களை செய்ய வேண்டும். எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் உங்கள் வேலை அல்லது தொழிலுக்காக வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு துளி அளவு வெல்லத்தை எடுத்து, உங்கள் வீட்டின் தென் பகுதியில் வைத்து விட்டு செல்லுங்கள். அன்றைய தினம் உங்கள் தொழிலும், வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறும் லாபம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் சிவபெருமானுக்கு துவரம் பருப்பை நைவேத்தியமாக வைத்து, அவரை வழிபட வேண்டும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் தினமும் காலையில் ஒரு பசுமாட்டிற்கு அகத்திக்கீரையையோ அல்லது வாழைப்பழங்களையோ கொடுக்க வேண்டும். அந்த பசுவின் உடலில் தங்கியிருக்கும் தேவர்களின் ஆசிகளை பெற்று உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்நாள் முழுதும் அதை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் வெற்றிகள் உங்களை தேடி வரும்.
மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்கள் உங்கள் வாழ்வில் நல்ல செல்வ நிலையை பெற ஒவ்வொரு புதன் கிழமையன்றும் புதன் பகவானுக்கு பச்சை பயிரை நிவேதனமாக வைத்து அவரை வழிபட வேண்டும். புதிதாக திருமணமான ஏழை சுமங்கலிப்பெண்களுக்கு வளையல்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, புது சேலை போன்ற சீர்வரிசை பொருட்களை தானமாக கொடுக்க, உங்கள் வாழ்நாளில் எப்போதும் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படாது.
கடகம்: கடக ராசியினர் ஒவ்வொரு திங்களன்றும் கோவிலில் சிவலிங்க அபிஷேகத்திற்கு சுத்தமான பசுப்பாலை தானமாக அளிக்கவேண்டும். தங்கள் பொருளாதார நிலை மேம்பட புறாக்கள், குருவிகள் மற்றும் ஏனைய பறவைகள் உண்ண உணவும், குடிக்க குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர, உங்களின் வாழ்வில் இருக்கும் வறுமை அந்த பறவைகளின் ரூபத்திலிருக்கும் இறைவனின் ஆசியால் நீங்கும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் பொருளாதார தடைகள் நீங்க வேண்டும் என்றால் உங்களின் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட தினமும் நீங்கள் தூங்கப் செல்லும் முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி வையுங்கள். மறுநாள் காலை எழுந்து, அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்கு பகுதியில் தெளித்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் நுழைவதற்கு இருந்த சூட்சமத் தடைகள் நீங்கும். இதை தொடர்ந்து செய்து வர, உங்கள் பொருளாதார நிலை உயரும்.
கன்னி: கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். எப்போதும் ஒரு பச்சை நிற கைகுட்டையாவது வைத்திருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்க மாதத்திற்கு ஒரு முறை புதன் கிழமைகளில் ஏதாவது நெல், கோதுமை போன்ற தானியங்கள், வெல்லம் ஆகியவற்றை ஒரு திருநங்கைக்கோ அல்லது ஒரு பிச்சைக்காரருக்கோ தானம் அளிக்கவேண்டும்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியினர் உங்கள் வாழ்வில் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலும், ஒரு படி அரிசியையும் தானமாக வழங்கவேண்டும். ஏழைக்குழந்தைகள் அருந்துவதற்கும் பாலை தானம் அளிக்க, அந்த சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் எவ்வித கஷ்டங்களும் ஏற்படாது.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினர் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாக ஒரு சிகப்பு துணியில் சிறிது பார்லி அரிசியை வைத்து முடிந்து உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் யாரும் பார்க்காத படி வைத்து விட வேண்டும். இது உங்கள் வீட்டிலிருக்கும் தீய அதிர்வுகளை நீக்கும். செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில் சென்று, துவரம்பருப்பு நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், உங்களுடன் எப்போதும் ஒரு மஞ்சள் நிற கர்ச்சீப் உங்களிடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் வாழ்வில் நிறைய பொருட்செல்வம் பெறுவதற்கு உங்கள் வீட்டின் பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர வேண்டும். உங்கள் வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி உங்களிடமும் உங்கள் வீட்டிலும் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
மகரம்: மகர ராசியில் பிறந்தவர்கள் வாழ்வின் பொருளாதார நிலை மேம்பட வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் துளசி மாடத்திலுள்ள துளசி செடிக்கு தூபங்கள் காட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பூஜைகள் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடைகளை தானமாக அளிக்க வேண்டும்.
கும்பம்: உங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான செல்வ வளங்களை பெற சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, எண்ணையினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரத்தைக் படையலிட்டு சனி பகவானை வழிபட வேண்டும். உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மீனம்: மீன ராசியினர் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட உங்க ராசி அதிபதி குரு பகவானின் அருளை பெற, அன்றைய தினம் மஞ்சளையும், இனிப்பான லட்டுகளையும் அவருக்கு நிவேதனமாக அளிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் ஸ்ரீ குரு பகவானை வழிபட வேண்டும். இந்த வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
விரைய செலவு கட்டுப்படும்: இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கு மக்கள் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு என்ன தான் அவர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், ஒரு வழியில் வரும் பணம் வேறொரு வழியில் விரைய செலவாகிறது. சம்பாதிக்கப்படும் பணம் வீண் விரையமாகாமல் இருக்கவும் பணம் வீட்டில் சேரவும் 12 ராசியினருக்கும் சில பரிகார முறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் அந்த பரிகாரங்களை செய்தால் வீண் விரைய செலவுகள் கட்டுப்படும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications