Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை அமாவாசை.. வசந்த பஞ்சமி.. மாசி மகம்.. பிப்ரவரி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பனிக்காலம் மெல்ல விலகும் மாதம் பிப்ரவரி மாதம். தை மாதமும், மாசி மாதமும் இணைந்த இந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் உள்ளன. தை அமாவாசை, வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம் என மகத்துவம் நிறைந்த திருவிழாக்கள் உள்ளன.

பிப்ரவரி மாதம் தை 18ம் தேதி துவங்கி, மாசி 17ம் தேதி வரை உள்ளது. 2024 ம் ஆண்டு லீப் இயர் என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. இந்த மாதத்தில் எந்தெந்த திருவிழாக்கள் எந்த நாட்களில் நடைபெறுகிறது என்று உங்களின் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Thai Amavasai, Vasantha Panchami, Ratha Sapthami important days the month of February

பிப்ரவரி 01 தேய்பிறை சஷ்டி விரதம்
பிப்ரவரி 02 தேய்பிறை அஷ்டமி தேவ தேவாஷ்டமி
பிப்ரவரி 06 ஸபலா ஏகாதசி
பிப்ரவரி 08 திரயோதசி
பிப்ரவரி 09 தை அமாவாசை
பிப்ரவரி 13 மாசி மாத பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம்
பிப்ரவரி 14 வஸந்த பஞ்சமி
பிப்ரவரி 16) வெள்ளி - ரதசப்தமி சூரிய ஜெயந்தி
பிப்ரவரி 20 ஜெய ஏகாதசி
பிப்ரவரி 22 குரு புஷ்யம்
பிப்ரவரி 24 சனி - மாசி மகம், லலிதா திரிபுர சுந்தரி ஜெயந்தி
பிப்ரவரி 28 சங்கடஹர சதுர்த்தி விரதம்

தை அமாவாசை: பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த ஆண்டு தை அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

வசந்த பஞ்சமி: தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்கினால் அற்புதங்கள் பல நடக்கும்.

ரத சப்தமி: சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தைநோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்தும் நாள் 'ரத சப்தமி' நாளாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி காலையில் ஆறு குளங்களில் குளித்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

மாசி மகம்: மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். மாசி மகம் நாளில் புனித நீராட முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+