மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யப்போறீங்களா?.. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ரிலீஸ்
திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதத்தில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மாதம்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்து வருகிறது.

நாள்தோறும் இலவச தரிசனம், இலவச டைம் ஸ்லாட், விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், சுபதம் தரிசனம் என பல்வேறு தரிசனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தும் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 19ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணுவாசம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பத்மாவதி விருந்தினர் மாளிகை, வெங்கடேஸ்வரா விருந்தினர் மாளிகை, ராம் பகீச்சா வராஹஸ்வாமி ஓய்வு இல்லம், டிராவலர்ஸ் பங்களா, நாராயணகிரி விருந்தினர் மாளிகை, நந்தகம், பாஞ்சஜன்யம், கௌஸ்துபம், வகுல்மாதா, சப்தகிரி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவையும் திருமலையில் உள்ளன.
மே மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications