உங்கள் ஜாதகத்தில் 5, 9ஆவது கட்டங்களை பாருங்கள்! நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் சொல்கிறோம்!
சென்னை: உங்கள் ஜாதகத்தில் இந்த கட்டங்களில் மாந்தி இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை பார்க்கலாம். மாந்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: குளிகன் என்ற மாந்தி ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்கள்? எதனால் மாந்தி தோஷம் ஏற்படுகிறது ?
தங்கள் முன்னோர்கள் கோவில் நிலத்தில் வீடு, கோவில் நிலத்தை அபகரித்தவர், கோவில் பணத்தை செலவு செய்தவர்கள் போன்ற காரணங்களால் மாந்தி தோஷம் ஏற்படும்.

இதனால் பிற்காலத்தில் பிறக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு பூர்வீக சொத்தால் ஒரு ரூபாய் கூட உதவாத நிலை, உறவுகள் பகை போன்ற ஜாதகத்தில் மாந்தி நின்றவர்கள் மேற்கூறிய பலன்களை அடையாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
லக்கினத்தில் மாந்தி: லக்கினத்தில் அதாவது முதல் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் மறைமுக உடல் நோய்கள் கொண்ட குண்டான உடலமைப்பைப் பெற்றிருப்பார். அடக்கமில்லாத, வெட்கமில்லாதவராக, குறும்புத்தனமிக்கவராக இருப்பார். சுப கிரக சேர்க்கை இருப்பின் அவருக்கு பொன், பொருள் சேரும். இருப்பினும் மனக்கவலை அதிகம் கொண்டவராக இருப்பார்.
2வது இடத்தில் மாந்தி: 2வது இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அவரின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும், பேச்சு, செயலில் தடுமாற்றம், வீண் செலவு, மட்டமான புத்தியுடன், கண் நோயுடன், தீய பழக்கம் கொண்டவராக இருப்பார்.
3ம் இடத்தில் மாந்தி: 3ம் இடத்தில் மாந்தி இருப்பின் பல நல்ல பலன்கள் கிடைக்கும். அதாவது அனைவரையும் கவரக் கூடிய உடலமைப்பு, தைரியமானவராகவும், துணிவு மிக்கவராகப் பலரை வழிநடத்தக் கூடிய திறனை பெற்றிருப்பார். புதிய முயற்சிகள் செய்து வெற்றிகளைக் குவிக்கக் கூடிய சூழல் அவருக்கு உண்டாகும்.
4ம் இடத்தில் மாந்தி: 4ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அவருக்கு ,கெடுபலன் உண்டாகக் கூடும். அதாவது அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதித்தல். நிம்மதியற்ற நிலையும், வீடு, மனை சேர்க்கை அமையாத நிலை, தாயின் சுமூக உறவு இல்லாமை என பல பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்.
5ம் இடத்தில் மாந்தி: 5ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் புத்திர தோஷம் ஏற்படக்கூடும். குறைந்த வயதில் கண்டம் ஏற்படலாம். மன நிலை பாதிப்பு ஏற்படுவதோடு, செல்வ வரவு இல்லாமல், செல்வாக்கும் இழக்கக் கூடிய நிலை ஏற்படும். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக, சுய இன்பத்திற்கும், தகாத உறவுக்கும் ஆசைப்படக் கூடிய மட்டமானவராக இருக்கக்கூடும்.
6ம் இடத்தில் மாந்தி: 6ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் மிக சிறப்பான பலன் ஏற்படும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய நல்ல மனம் படைத்தவராக, ஆரோக்கியம் மேன்மையுடன் கூடிய நீண்ட ஆயுள் உடையவராக, எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடிய அல்லது எதிரிகளை வெல்லக் கூடியவராக, நன்றாக படித்து உயரக் கூடிய அமைப்பும் இருக்கும்.
7ம் இடத்தில் மாந்தி: 7ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின், மோசமான பலன்கள் கிடைக்கும். அதாவது தேராத உடல், நிம்மதியற்ற இல்லற வாழ்க்கை, நல்ல நண்பர்கள் அமையாத நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்துக்களை அழிக்கக் கூடியவராக, சிலரை நம்பி ஏமாறக்கூடிய நிலை ஏற்படும்.
8ம் இடத்தில் மாந்தி: 8ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் எதையும் அரைத்துத் தள்ளக் கூடிய அதீத பசி கொண்டவராகவும், மறைமுக உடல் நல பிரச்சினையுடன் இருப்பார். அதோடு மன கவலை கொண்டவராக, வீண் செலவுகளும், எந்த செயலிலும் தோல்வி ஏற்படக் கூடிய நிலை உடையவராக இருப்பார்.
9ம் இடத்தில் மாந்தி: 9ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் மோசமான பலன்களைப் பெறுவார். அதாவது மெலிந்த உடல் அமைப்புடன் இருப்பார். தந்தைக்கு பாதகத்தை தரக் கூடிய தோஷம் உடைவராக, தவறான பாதையில் செல்லக் கூடியவராக, அதனால் ஏற்படக் கூடிய தவறான பழக்கங்கள், தவறான பெண்களுடன் இன்பம் கொள்ளுதல் என இருப்பார். எப்போதும் பிரச்னைகளுடன் வாழக்கூடிய, பணக்கஷ்டத்துடன் இருப்பவராக வாழ்வார்.
10ம் இடத்தில் மாந்தி: 10ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் நன்மை, தீமை கலந்ததாக இருக்கும். அவரின் வாழ்க்கை முழுவதும் சுயநலத்துடன் இருப்பார். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவராக இருப்பார்.
11ம் இடத்தில் மாந்தி: 11ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் சிறப்பான பலன்களைப் பெறுவார். தன் வாழ்வில் நல்ல செல்வமும், செல்வாக்கும் கொண்டிருப்பார்கள். நல்ல துணை, மிகுந்த புகழ் மிக்கவராக திகழ்வார். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கும், ஆன்மிக சிந்தனை கொண்டவராக இருப்பார்.
12ம் இடத்தில் மாந்தி: 12ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் வீண் செலவுகள் ஏற்படக் கூடிய சூழல் தான் அமையும். சிந்தனை, செயல் இழிவானதாக இருக்கும் இதனால் அவரின் இல்லற வாழ்க்கை பெரிய அளவில் சந்தோசமில்லாத, சோகமும், சோதனையும் கொண்டதாக இருக்கும்.
மாந்தி தோஷம் பரிகார கோயில் : மாந்தி தோஷம் உள்ளவர்கள் திருவள்ளூரில் அருகே இருக்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் . இங்கு மாந்தி பகவான் சிவனை வழிபட்டு தன்னுடைய தோஷங்களை போக்கிக்கொண்டார் என்பது ஐதீகம். திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம் .
சனிக்கிழமை காலை, 6:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை நடைபெறும்.
எப்படிப் போவது?: சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications