மருதாணியை வைத்துக் கொண்டால் 6 நாட்களுக்கு மரணம் நெருங்காது தெரியுமா?
சென்னை : கையில் மருதாணி வைத்திருந்தால் மரணம் நெருங்கவே நெருங்காதாம். அந்த அளவுக்கு மருதாணிக்கு மகத்துவம் இருக்கிறதாம்.
மருதாணி இட்டு கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மருதாணி வைத்தால் கை மட்டும் சிவக்கும் என்பதில்லை. பெண்களின் முகமும் தான். வெற்றிலை போட்டால் வாய் சிவக்கும். அது போல் மருதாணியால் கை சிவக்கும். இரண்டுமே சுபம் தான்.

அந்த காலங்களில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும், பண்டிகையாக இருந்தாலும் பெண்கள் வீட்டில் இருக்கும் மருதாணி இலைகளை பறித்து அதனுடன் கொட்டை பாக்கு, போட்டு அரைத்து அந்த விழுதில் எலுமிச்சை சாறுகளை இட்டு கையில் வைத்துக் கொள்வார்கள்.
மருதாணி வைப்பது என்பது தற்போது கிடைக்கும் கோன்கள் மூலம் வைக்கப்படும் டிசைன் போல் அல்லாமல் வட்ட வடிவில் அழகாக வைப்பார்கள். எத்தனை டிசைன் போட்டாலும் இதுதான் கைகளுக்கு அழகை கொடுக்கும். செக்கச் செவேல் என இருக்கும் இந்த மருதாணி 6 நாட்களானாலும் போகவே போகாது.
பிறகு படிப்படியாக கலர் குறையும். கைகளில் கலர் இல்லாவிட்டாலும் நகங்களில் படிந்த கறை அப்படியே இருந்து அது போவதற்கு நாட்களாகும். இப்படிப்பட்ட மருதாணி நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். இதய படபடப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம் குறையும்.
சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருக்கும். மன அழுத்தம் இருக்கும். இவர்கள் அடிக்கடி மருதாணி இட்டுக் கொண்டால் தலைவலி சரியாகிவிடும். மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் உடல் சூடு குறையும். இதனால் சரும நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
மருதாணி வைத்துக் கொள்வதால் நகத்தின் இடுக்குகளில் சேரும் அழுக்கு மற்றும் அதில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படாமல் இருக்க பெண்கள் மருதாணி வைத்துக் கொள்வது நல்லது. அது போல் வெள்ளைப்படுதலுக்கு மருதாணி நல்ல தீர்வாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் மருதாணியை அரைத்து கால்களில் பூசிக் கொண்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால் எரிச்சல் பிரச்சினையும் சீராகும். மருதாணிச் செடி துளசியை போல் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் முன் மருதாணி செடி இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம்.
இந்த மருதாணியை கைகளில் வைத்துக் கொண்டால் துஷ்ட சக்திகள் நெருங்காது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். செல்வம் சேரும். எடுத்த காரியம் எல்லாம் வெற்றியாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இந்த மருதாணியை கையில் வைத்துக் கொண்டால் 6 நாட்களுக்கு கையை விட்டு போகாது. இதனால் 6 நாட்கள் அவர்களை மரணம் நெருங்காது என்கிறார்கள்.
அது போல் மருதாணி இட்டுக் கொண்டவர்களின் கைகளால் கொடுக்கப்படும் பணம் மீண்டும் திரும்ப கிடைக்கும். மருதாணி இட்டவரின் கைகளால் பெரும் பணம் செல்வ செழிப்பை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்த மருதாணி நகசுத்தியும் வராமல் தடுக்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். எனவே மருதாணியை மாதம் ஒரு முறையாவது வைத்துக் கொள்ளுங்கள்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications