Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொய்யோடு 1 ரூபாய் சேர்ப்பது ஏன்? மொய் வைப்பதில் சீக்ரெட் இதுதான்.. மொய்யில் சேர்ந்து வழியும் அன்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொய்யோடு 1 ரூபாய் சேர்த்து எழுதுவது ஏன் தெரியுமா? கல்யாணம், காதுகுத்து, விசேஷங்களில் மொய்ப்பணம் கட்டாயமாக்கப்பட்டிருப்பது ஏன் தெரியுமா? எவ்வளவு பணம் மொய்யில் வைக்கலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில்,100, 500, 1000 என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைத்து மொய் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Spirituality moi panam 1 rupee

அதிர்ஷ்டம் - ஒற்றைப்படை

கூட்டத்தில், மொய் எழுதும்போது பணம் தருபவரின் பெயர்களை அவசர அவசரமாக குறித்து கொண்டு, மொய்ப்பணத்தையும் அங்கிருப்பவர்கள் குறித்து கொள்வார்கள்.. 100, 1000 என்று இரட்டை இலக்க நோட்டுகளே அதிகமாக இருந்தால், மொய்ப்பணத்தில் பிழை ஏற்பட்டுவிடும்.. காரணம், எல்லா இரட்டை இலக்க எண்களின் முடிவும் ஜீரோவில் தான் முடியும். இந்த குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், மொய்த்தொகை மாறிவிடக்கூடாது என்பதற்காகவும் இப்படி 51, 101, 501 என்று மாறியதாம்.

ஆனால், இதற்கு வேறு ஒரு காரணம் சொல்கிறார்கள்.. எப்போதுமே ஒற்றைபடை எண்கள் சற்று விசேஷமான எண்களாகும்.. பெரும்பாலானோர் இதில் சென்ட்டிமென்ட் பார்ப்பார்கள். அதிர்ஷ்டம் கருதியே, இரட்டை இலக்கம் இல்லாமல், ஒற்றை இலக்கத்தில் மொய் செய்யப்படுகிறதாம்.

கணக்கு தீர்ந்தது, உறவு முடிந்தது

அதேபோல, இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் இரட்டைப்படையில் மொய் வைத்தால், இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்று அர்த்தமாகி விடுமாம்... "கணக்கு தீர்ந்தது, உறவு முடிந்தது" என்றாகிவிடுமாம்.

நீங்கள் இரட்டைப்படை எண்ணை, இரண்டாக பிரித்து விடலாம். அதில் மீதம் எதுவுமே வராது. ஆனால், ஒற்றைப்படை என்னை வகுத்தால் கண்டிப்பாக பூஜ்ஜியம் என்று முழுமை பெறாது... நிச்சயம் அதில் மீதம் இருக்கும்.. இப்படி மீதமிருந்தால், உறவு முடிந்துவிடாமல் பந்தம் என்றுமே தொடரும் என்று அர்த்தமாம்..

நாணயமானவர்கள் - நாணயம்

ஆனால், வேறு ஒரு காரணமும் உள்ளது.. அந்த காலத்தில் பணம் என்பது வெள்ளி, தங்கம் போன்றவற்றில் செய்யப்பட்ட நாணயங்களாகவே இருந்தது. "தர்மம் தவறாமல் நாணயத்துடன் சம்பாதித்ததை, உங்களுக்கு நான் மொய்யாக வைக்கிறேன்... நீங்களும் இதை தர்ம நெறி தவறாமல் செலவிடுங்கள்" என்பதை குறிக்கவே நாணயத்தை மொய்யாக வைத்தார்களாம். நேர்மையானவர்களுக்கு நாணயமானவர்கள் என்று பெயர் வந்ததும் இப்படித்தான.

உறவுகளுக்குள் பகிரப்படும் அன்பு

இதற்கு பிறகுதான், நாணயங்கள் பயன்பாடு குறைந்து, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்தன.. எனினும் நாணயங்களை வைத்து மொய் செய்யாதது ஒரு மனக்குறையாகவே இருந்ததாம். எனவே, அந்த மனக்குறையை போக்கும்வகையில், ஒரு வெள்ளி நாணயத்தை மொய் பணத்தோடு சேர்த்து வைத்துள்ளனர். இப்படி வெள்ளி நாணயம் வைப்பதுதான், நாளடைவில் 1 ரூபாய் நாணயம் வைக்கும் அளவுக்கு வந்துள்ளது

மொய்ப்பணத்தில் 1 ரூபாய் சேர்த்து வைப்பதற்கு இன்னும் எத்தனை காரணங்கள் இருக்கிறதோ தெரியாது.. ஆனால், இது வெறும் பணம் மட்டுமே கிடையாது.. சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித்தேவைக்கு உதவும் ஈகை மட்டுமே கிடையாது.. வட்டியில்லா முதலீடு மட்டுமே கிடையாது.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் உறவுகளுக்குள் பகிரும் அன்பு..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+