இட்லி வேகாவிட்டாலும் தனுஷ் காரணம்.. ஆர்த்தியை கூடவா? போகிற போக்கில் சுசித்ரா கிளப்பிய புயல்: பிரபலம்
சென்னை: "தனுஷை எல்லாவற்றுக்கும் இழுத்து விடுவதே வேலையா போச்சு.. ஆர்த்தி மீது புகார் சொல்வதற்கான வாய்ப்பும், முகாந்திரமும் இல்லை.. அதனால், இப்படியெல்லாம் இட்டுக்கட்டி பரப்புகிறார்கள். இதெல்லாம் இங்கே எடுபடாது" என்று பத்திரிகையாளர்கள் கொந்தளித்து பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பின்னணி பாடகி சுசித்ரா சொன்ன குற்றச்சாட்டுகளை மறுத்து, கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "பாடகி சுசித்ரா, முழுக்க முழுக்க ஜெயம்ரவிக்கு சப்போர்ட்டாக பேசி வருகிறார்... "சந்தோஷமா இருக்கட்டுமே" என்று சுசித்ரா சொன்ன வீடியோ வைரலாக பரவியது.. அதேசமயம் போற போக்கில் இந்த பிரச்சனைக்கு காரணமே தனுஷ்தான் என்றும் சொல்லிவிட்டு போனார்..

ஆர்த்தி - தனுஷ் போட்டோ
ஒரு பார்ட்டியில் பங்கேற்றபோது, தனுஷ், ஆர்த்தி போட்டோ எடுத்திருந்தனர்.. இந்த போட்டோ ரொம்ப வருடத்துக்கு முன்பு எடுத்தது.. எந்தவிதமான உண்மையும் இலலாமல் இப்படி பலர் சொல்லி வருகிறார்கள். அதுபோல சுசித்ராவும் சொல்கிறார்..
திடீரென சுசித்ரா எப்போதாவது வருவார், ஏதாவது கருத்து சொல்வார், பிறகு கிளம்பி போயிடுவார். தனுஷை பொறுத்தவரை தூங்கறதுக்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். "எங்க வீட்டில் இட்லி வேகலைன்னாலும், அதுக்கு தனுஷ்தான் காரணம்" என்று ஒருவர் சோஷியல் மீடியாவில் கிண்டலாக கூறியிருந்தார்.
அதுபோல, யாருக்கு பிரச்சனை வந்தாலும் தனுஷ்தான் என்று சொல்லக்கூடியவர் சுசித்ரா. இவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்.. நண்பர்களுக்குள் ஏற்பட்ட சின்ன பகை, இப்போதுவரை தொடர்கிறது.
கார்த்திக் குமார் - சுசித்ரா
அந்த காலத்தில் இளமை பருவத்தில் செய்த சேட்டைகளை, பார்ட்டிகளில் கலந்து கொண்டதையெல்லாம் இப்போது பேசி கொண்டிருக்கிறார் சுசித்ரா.. இவர்கள் எல்லாம் விளையாட்டாக செய்த செயல்களால்தான், தன்னுடைய வாழ்க்கையே போய்விட்டது, இவர்கள் மட்டும் சந்தோஷமாக இருக்கிறார்களே? தனுஷூடன் கார்த்திக் குமார் நெருங்கிய நட்பில் இருந்ததால்தான் தன்னை கழட்டிவிட்டுவிட்டதாக சுசித்ராவுக்கு கோபம் உள்ளது..
அதனால், எப்போதெல்லாம் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கே வந்து ஒரு கலவரத்தை உண்டுபண்ணிவிட்டு, மீண்டும் ஆஃப்லைன் சென்றுவிடுகிறார். அந்தவகையில்தான், இப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்திலும் தனுஷை இழுத்துவிட்டு, ரவிக்கு சப்போர்ட்டும் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் போட்டோ
2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய பேட்டி ஒன்றில், "ஆர்த்தி - ஜெயம் ரவி குடும்பம் அழகானது.. ஒரு விழாவில் ஆர்த்தியின் அம்மா ரவியை புகழ்ந்து பேசியது, ரவியின் அம்மா ஆர்த்தி பற்றி புகழ்ந்து சொன்னது, பார்க்கவே வியப்பாக இருந்தது.. இதுதான் கண் பட்டுவிட்டது. யார் கண்ணு பட்டாலும், சினிமாவில் மட்டும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.
தனுஷூடன் ஆர்த்தி சாதாரணமாக நின்று எடுத்துக் கொண்ட போட்டோவைகூட வைத்து, கொச்சைப்படுத்தி பேசுகிறவர்கள், சினிமாவில் உள்ள சிலர் செய்யும் வேலைதான்.. இப்படி ஆர்த்தியை அசிங்கப்படுத்தி கொண்டிருப்பது ஜெயம் ரவிக்கு பெருமையாக இருக்கிறதா? இதெல்லாம் கூடவா கண்ணுக்கு தெரியல? இதனால் ஒட்டுமொத்த குடும்ப மானமும்தானே போகும்?
சுசித்ரா ஆஜர்
தனுஷை எல்லாவற்றுக்கும் இழுத்து விடுவதே வேலையா போச்சு.. ஆர்த்தி மீது புகார் சொல்வதற்கான வாய்ப்பும், முகாந்திரமும் இல்லை.. அதனால, இப்படியெல்லாம் இட்டுக்கட்டி பரப்புகிறார்கள். இதெல்லாம் இங்கே எடுபடாது.
எப்போதுமே சுசித்ரா பேசுவதை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. .எந்த சர்ச்சை, யாரை பற்றி வந்தாலும் உடனே சுசித்ரா ஆஜராகிவிடுவார்.. தனக்கு பிடித்தவர்களுக்கு சாதகமாக பேசுவார்.. இதுவே கெனிஷாவை பற்றி சுசித்ரா பேச வேண்டியதுதானே? " என்றெல்லாம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications