Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manikandan: குடிப்பழக்கம் என் குடும்பத்தையே நாசம் செய்திருக்கு! "குடும்பஸ்தன்" மணிகண்டன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிப்பழக்கத்தை அளவாக வைத்துக் கொண்டால் நல்லது என நினைக்கிறேன். அது என் குடும்பத்தையே பாதித்துவிட்டது என நடிகர், இயக்குநர், டப்பிங் ஆர்டிஸ்ட் மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மணிகண்டன் கூறியிருப்பதாவது: மது வாழ்க்கையில் அளவாக வைத்துக் கொண்டால் நல்லது என நினைக்கிறேன். என் குடும்பத்திலேயே நிறைய பேர் குடியால் அழிந்து போயிருக்காங்க.

television Manikandan

அது அந்த குடும்பத்தையே பாதித்திருக்கு. அந்த பழக்கம் இல்லாமல் இருந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். முடிஞ்ச அளவுக்கு இல்லாமல் இருக்கணும். இல்லையென்றால் லிமிட்டா இருக்கணும். விவேக் சார் சொல்ற மாதிரி, "குடி, அந்த குடி உன்னை குடிக்காமல் பார்த்துக் கொள்" என மணிகண்டன் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தனது பணியை தொடங்கி தற்போது வளர்ந்து வரும் நடிகராக நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் மணிகண்டன். இவர் நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் கூட! மேலும் டெல்லி கணேஷ் போல் அருமையாக பேசுவார்.

வேட்டையன் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மணிகண்டன்தான் டப்பிங் பேசியிருந்தார் (நேரடியாக பேசவில்லை). அவர் பேசிய டப்பிங் அப்படியே செயற்கை நுண்ணறிவிற்கு மாற்றப்பட்டுவிட்டது.

ஜெய்பீம் படத்தில் இவர் ராஜாகண்ணுவாகவே வாழ்ந்திருந்தார். அத்தனை நேர்த்தியான நடிப்பு, நல்ல காமெடி சென்ஸ், இயக்கும் திறமை என அவரிடம் ஏராளமான திறமை இருக்கிறது.

ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் மணிகண்டன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு டப்பிங் கலைஞராக வாய்ப்பு கிடைத்தது. அப்போது குறைந்த சம்பளத்தில் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் வெளிப்படுத்தியிருந்தார்.

ஒரு முறை நடிக்க ஒரு செட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த உதவி இயக்குநர்கள் மணிகண்டனுக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து அதற்கான காஸ்ட்யூமும் கொடுத்துள்ளார்கள். இப்படியான நிலையில் அங்கு வந்த மற்றொரு சீனியர் உதவி இயக்குநர், மணிகண்டனைப் பார்த்து, யாருடா இவன், இவனுக்கு யாருடா இந்த காஸ்ட்யூம் கொடுத்தது?

இவன் மூஞ்சியை பார்த்தியா எனக் கூறி மிகவும் கேவலமாக மணிகண்டனின் தோற்றம் குறித்து பேசியுள்ளார். இதனால், மணிகண்டன் தான் அணிந்திருந்த காஸ்ட்யூமை கழற்றிக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அங்கு இருந்து வெளியே வந்த மணிகண்டன், தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீரோடு அங்கிருந்து வெளியே வந்தவரை, பார்த்த சிலர் என்ன ஆச்சு? ஏன் அழுகுற தம்பி என கேட்டுள்ளனர். ஆனால் மணிகண்டன் அவர்கள் யாருக்குமே பதில் அளிக்கவில்லை என மணிகண்டன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+