வாழ்நாளில் மறக்க முடியாது! 10 நாள் முன்பு முதல்வரை மகனோடு சந்தித்தேன்! ஆனால் இன்று!நெப்போலியன் பதிவு
சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகனோடு பத்து நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரடியாக சந்தித்து தன்னுடைய மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து இருந்த நிலையில் அது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் நெப்போலியன் 16 வயதில் இருந்து அரசியலில் இறங்கி 27 வயதில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தொடர்ந்து சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிரமான தொண்டராகவும், ரசிகராகவும் அவரை பின்பற்றி வந்த நெப்போலியன் சினிமாவில் அறிமுகமான ஒரு சில ஆண்டுகள் முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

பிறகு சில வருடங்கள் கழித்து எம்எல்ஏவாக போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று அதற்கு பிறகு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். திமுக பிரமுகரான கே என் நேருவின் மருமகனான நெப்போலியன் ஆரம்பத்தில் கேஎம் நேருவிற்கு உதவியாளராக இருந்து அதற்கு பிறகு தான் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதே நேரத்தில் ஜெயசுதா என்பவரை நெப்போலியன் திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு 4 வயது இருக்கும்போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி தன்னுடைய மகனுக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்க வேண்டும் என்று தன்னுடைய மகன் சொன்ன ஒரே வார்த்தைக்காக தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதோடு அங்கு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு 25 வயதாகும் போது திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த நெப்போலியன் அவருக்காக பெண் தேடி இருக்கிறார். அப்போது தன்னுடைய மருமகள் தமிழ்நாட்டில் இருந்து வரவேண்டும் என்று வரன் தேடிய போது திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு எங்கேஜ்மென்ட் செய்திருக்கிறார்.
இரு வீட்டாரின் சம்மதத்தோடு என்கேஜ்மென்ட் வீடியோ காலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருமணம் ஜப்பானில் நடைபெற இருக்கிறது. நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக கப்பலில் தான் வர முடியும். அப்படி கப்பல் வழியாக வந்தால் ஒரு வருடம் பயணம் நடக்கும் என்பதால் ஜப்பானில் திருமணமத்தை நடத்துவதற்கு நெப்போலியன் திட்டமிட்டதாக கூறி இருக்கிறார்.

அமெரிக்காவில் தான் வசித்து வரும் நிலையில் அங்கு தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்தினால் சட்ட சிக்கல்கள் வரும் என்பதால் மணப்பெண்ணின் குடும்பத்தினரை ஜப்பானுக்கு வரவைத்து திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். இதற்காக கடந்த மாதம் மூன்றாம் தேதியே நெப்போலியன் குடும்பத்தினர் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு பயணம் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நெப்போலியன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் தான் முதல்வரை சந்தித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். "முதல்வரோடு சந்திப்பு... அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே.. செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று அண்ணாவின் பிறந்தநாள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகாகோவில் நாங்கள் குடும்பத்தோடு முதல்வரை சந்தித்தோம்.

எனது மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமண அழைப்பிதழை வழங்கிய அந்த மகிழ்வான தருணத்தை இந்த நாளில் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் தலைவர் அவர்கள் இருந்த இடத்தில் இன்றைக்கு தளபதி அவர்கள் இருந்து கொண்டு கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டு இருந்தாலும் அதே பழைய பழக்க வழக்கங்களை மாறாமல் நட்பு பாராட்டி அன்போடும் பாசத்தோடும் பேசியது எல்லாம் எங்கள் வாழ்வில் மகிழ்வான தருணங்கள். வாழ்வில் மறக்க முடியாதது... மிக்க நன்றி! என்று அந்த பதிவில் நெப்போலியன் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு பலரும் நெப்போலியனின் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications