வேல ராமமூர்த்தி பால்கனியிலேயே உட்கார்ந்துட்டாரு.. மதுரை அவனியாபுரம் வீட்டு வாசலிலேயே துள்ளிய காளைகள்
மதுரை: பிரபல நடிகர் வேல ராமமூர்த்தியின் மனைவி தந்த பரபரப்புக்கு பிறகு, மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோவை பார்த்த, ஒட்டுமொத்த மதுரைவாசிகளும் படுகுஷியில் இருக்கிறார்களாம்.
ஒவ்வொரு முறை ஜல்லிக்கட்டு நடக்கும்போதும், எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான வேல. ராமமூர்த்தி, தன் மீதான கவனத்தை குவித்துவிடுவது வழக்கமாகும்.. இப்படித்தான் 3 வருடங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இது சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், வேல ராமமூர்த்திக்கும் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது. அப்போது வேலராமமூர்த்தி, யாருக்காக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துறீங்க?
தமிழக அரசு: ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார அடையாளத்தின் ஒன்றாகும்.. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு பதிலாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியையே தடை செய்திருக்கலாமே? 150 பேருக்கு மட்டும் அனுமதியா? அந்த 150 பேர் யாரு? என்றெல்லாம் கொந்தளித்திருந்தது அப்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போதுகூட, மற்றொரு பரபரப்பு நடந்தது.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தபோது, வாடிவாசல் தடுப்புகளை அமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது, வேல ராமமூர்த்தியின் வீட்டுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்புகளை அவர் மனைவி அரிவாளால் வெட்டினார்..
வாக்குவாதம்: "வீட்டுக்கு முன்னாடி தடுப்பு கொண்டுவந்தால், வீட்டை விட்டு எப்படி வெளியே வருவது?" என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே அங்கிருந்த போலீசார், இப்படி செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தும்கூட, அவர் எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லையாம். அப்போது, வீட்டில் இருந்த வேல ராமமூர்த்தியும், வெளியே வந்து பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாராம்.
இந்த பரபரப்புகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், நேற்று தன்னுடைய வீட்டு வாசற்படியிலேயே உட்கார்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேல.ராமமூர்த்தி கண்டு ரசித்தார்..
வீடியோ: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு, தங்கள் பலத்தை காட்டி கொண்டிருந்தனர். அப்போது, அவனியாபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் உட்கார்ந்தபடியே, வேல ராமமூர்த்தி போட்டியை நேரில் பார்த்து ரசித்தார். வீட்டு பால்கனியில், வேட்டி கட்டி ஹாயாக உட்கார்ந்து, இந்த போட்டிகளை தன்னந்தனி நபராகவே ரசித்து பார்த்து கொண்டிருந்தார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications