கூடை கூடையாய் ஆணுறை.. கோடி கோடியாய் புரளும் பணம்.. மிஸ் கூவாகம் நிகழ்ச்சி பற்றி இவர் சொல்றது நிஜமா?
சென்னை: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள், சித்திரை திருவிழாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில், பெரும் பரபரப்பும் ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், மிஸ் கூவாகம் நிகழ்ச்சி எப்படி நடத்தப்படுகிறது என்பது குறித்து சமூக ஆர்வலர் முகில் விளக்கமாக கூறியிருக்கிறார். அத்துடன் தமிழக அரசுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு சமூக ஆர்வலர் முகில் அளித்த பேட்டியில், "விழுப்புரத்தில் நடந்த கூவாகம் விழாவில், விஷால் கலந்து கொண்டார்.. மேடையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.. இதற்கு காரணம், அந்த மேடையை முழுவதுமே திருநங்கைகள் ஆக்கிரமித்திருந்தனர்.

இங்கே காற்று இல்லை
தற்போது கோடை காலம் என்பதால் போதுமான காற்று இல்லை.. ஏற்கனவே விஷாலுக்கு உடம்பில் பாதிப்பும் இருக்கிறது. அந்த மேடையிலேயே ஒரு திருநங்கை, "இங்கே காற்று இல்லை, எல்லாரும் கீழே இறங்குங்க" என்று கத்துகிறார்.. அப்போதுகூட யாருமே மேடையை விட்டு கீழே இறங்கவில்லை என்பதை வீடியோக்களில் காண முடிகிறது..
இந்த நிகழ்ச்சிக்காக வசூல் செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதாகவும் கூறப்படுகிறது.. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்காக நிறைய லட்சங்களை தருகிறது.. ஸ்பான்சர்கள் செய்துதான் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
விவசாய நிலங்களில் அட்டூழியம்
கடந்த வருடம், வலைஒளித்தளம் நிகழ்ச்சிக்காக, கூவாகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நான் நேரடியாகவே அங்கு சென்றிருந்தேன்., அப்போது அங்கு நடந்த செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.. கூவாகம் கோயிலை சுற்றி, விவசாய நிலங்கள்.. நிறைந்திருக்கின்றன.. கரும்பு வெட்டிவிட்டு, முழங்கால் அளவுக்கு கீற்றுகள் வளர்ந்து நின்றிருந்தன.. சில இடங்களில் வேர்க்கடலை பிடுங்கப்பட்டிருந்தன..
அங்கிருந்த ஒரு பெரியவர், கூவாகம் நிகழ்ச்சி பற்றி என்னிடம் சொல்லும்போது, "இந்த நிகழ்ச்சி நடக்கும் நேரங்களில், எங்கள் வீட்டு பையன்களை, உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுவோம்..
காரணம், 15 நாட்கள் நிகழ்ச்சியாக நடக்கும்போது, சில திருநங்கைகள் படாதபாடு படுத்துகிறார்கள்., முன்பெல்லாம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து, பக்தியுடன் தங்கள் வழிபாட்டினை முடித்து செல்வார்கள். இப்போது, நிலங்களில் கிடக்கிற ஆணுறைகளை எங்களால் கூடைகளில் கூட்டி அள்ள முடிவதில்லை" என்றார்.
சாதனை படைக்கும் திருநங்கைகள்
இதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. கோவிலின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறப்படுகிறது.. ஆனால் எல்லா திருநங்கைகளையும் இப்படி சொல்லிவிட முடியாது.. எத்தனையோ திருநங்கைகள் இன்று பல துறைகளில் முன்னுக்கு வந்துள்ளார்கள்.. படித்து பெரிய பெரிய வேலைகளில் இருக்கிறார்கள்.. யாருமே பெற முடியாத பட்டங்களை பெறுகிறார்கள்.. காவல்துறையில் எஸ்பி உள்ளிட்ட அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்கள்.. ஆனால், ஒருசிலர் இப்படியும் நடந்து கொள்வது வேதனையானது.
அதேபோல இந்த மிஸ் கூவாகம் அழகி போட்டியில், முன்கூட்டியே பரிசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுவிடுகின்றன.. இதற்காக கோடிகளில், லட்சங்களில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது..
திட்டமிட்டு மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுருக்கமாக சொன்னால், பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்கள்.. இதனை போட்டியில் பங்கேற்று தோல்வியுற்றவர்களே கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
வசூல் வேட்டை - அரசுக்கு கோரிக்கை
சினிமா துறையிலிருந்து ஒருவரை நிகழ்ச்சிக்கு அழைக்க விரும்பியே, விஷாலுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளனர்.. பிறகு, விழாவுக்கு விஷால் வருகை தருகிறார் என்று விளம்பரப்படுத்தியே வசூல் வேட்டை நடந்துள்ளது.. அதாவது 15 கோடியில் இருந்து 20 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே, கூவாகம் நிகழ்ச்சி வருங்காலத்தில் குதர்க்கமில்லாமல் நடக்க வேண்டும். கூவாகம் நிகழ்ச்சிக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது.. இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடைய அரசுக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications