விபச்சாரத்தில் பிரபல தமிழ் நடிகை? ஷாப்பிங் மாலில் இந்தி நடிகையை சுற்றி வளைத்த போலீஸ்.. யார் தெரியுமா
சென்னை: தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தி நடிகை மூன் தாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்... பிரபல நடிகை மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது. என்ன நடந்தது மும்பையில்?
மும்பையை அடுத்த தானேயில் உள்ளது காஷிமிரா என்ற பகுதி.. இங்கு சில நடிகைகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று ரகசியமாகவே விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான் பிரபல நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ், இந்த விபச்சார தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது.41 வயதான அனுஷ்கா, முன்னாள் மாடல் அழகியாவார்.. இந்தி, பெங்காலி சினிமா படங்களில் நடித்துள்ளார்.. மோனிமோகன் தாஸ் என்பதை சுருக்கி, மூன் தாஸ் என்று ரசிகர்கள் இவரை சொல்வார்கள்..

போலி கஸ்டமர்கள் 2 பேர்
எனினும் போலீசார் வந்திருப்பது தெரிந்தால், நடிகை உஷாராகிவிடுவார் என்பதால், போலி கஸ்டமரை வைத்து, நடிகையிடம் ரேட் பேச வைத்தனர்.. அதற்கு நடிகை, மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோட்டிலுள்ள, ஒரு பிரபல மாலுக்கு வந்து தன்னை சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார்.
உடனே போலி கஸ்டமர்கள் 2 பேரும் நடிகை அனுஷ்கா சொன்ன மாலுக்குள் நுழைந்தனர்.. அங்கு தயாராக காத்திருந்த நடிகையிடம் பேச்சு தந்தனர்.. அதற்கு அனுஷ்கா, உல்லாசம் அனுபவிக்க பிரபலமான நடிகைகளை அனுப்பி வைப்பதாக சொல்லி, அவர்களிடம் இருந்து அட்வான்ஸ் பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதையெல்லாம் அதே மாலில், போலீசார் மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர்.. நடிகை பணத்தை பெற்றதுமே, அவரை போலீசார் கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
தமிழ், தெலுங்கு நடிகைகள்
இதுகுறித்து கேட்டதற்கு, நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதை அனுஷ்கா ஒப்புக்கொண்டார். பெங்காலி, தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாமல், சீரியல் நடிகைகளையும் இந்த விபச்சாரத்துக்கு இத்தனை காலமும் பயன்படுத்தியது தெரியவந்தது.
அதாவது, ஒவ்வொரு மொழியிலும் எந்த நடிகைகளுக்கு, பணக்காரர்களிடம் அதிக கிரேஸ் உள்ளதோ, அந்த பணக்காரர்களையே அனுஷ்கா குறி வைத்துள்ளார்.. சம்பந்தப்பட்ட செல்வந்தர்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகையை விபச்சாரத்துக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்று அனுஷ்கா சம்பாதித்து வந்துள்ளதும் அம்பலமானது.
2 நடிகைகள் பத்திரமாக மீட்பு
இதையடுத்து, அனுஷ்காவால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 2 நடிகைகளை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, அரசு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்..
மீட்கப்பட்ட 2 நடிகைகளும் பெங்காலி சினிமா, சீரியல்களில் நடித்து வருபவர்களாம்.. எனினும் அனுஷ்காவால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட தமிழ், மற்றும் ஆந்திர நடிகைகள் யார் யார்? எத்தனை செல்வந்தர்களிடம் அனுஷ்கா பணம் பறித்துள்ளார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது..
அதேபோல சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் இளம் பெண்களை அணுகி அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி விபச்சாரத்தில் அனுஷ்கா ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.. இவர்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்ததும் கண்டறியப்பட்டது.அதேபோல, வளர்ந்து வரும் நடிகைகளை ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளி
சம்பாதித்தும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது..அனுஷ்கா யார் தெரியுமா?கடந்த 2007ல் அவினாஷ் பூபன் பட்நாயக் என்பவரை காதலித்தார் அனுஷ்கா.. அப்போது அவருக்கு வெறும் 23தான்..மும்பை அந்தேரி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் அனுஷ்கா தங்கியிருந்தார். ஒருநாள் திடீரென அனுஷ்காவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த அப்பார்ட்மென்ட் வீட்டுக்குள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்தார் அவினாஷ்.. ஆனால், அனுஷ்கா அங்கு இல்லாததால், அவரது அம்மாவை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்..கடந்த 2007ல் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பிறகு இந்த சம்பவத்திலிருந்து மீண்டு மாடலிங் மற்றும் சினிமாவில் பல படங்களில் நடித்தார் அனுஷ்கா.. இப்போது நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி, கைதாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications