சவுந்தர்யா போட்டோவை காட்டியதுமே திகைத்த மீனா! இரு நடிகைகளுக்குள் இப்படியொரு நட்பா? அசந்த ஜெகபதி பாபு
சென்னை: கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகை சவுந்தர்யாவின் உயிரை காவு வாங்கிய அதே ஹெலிகாப்டரில் தானும் செல்ல வேண்டியிருந்ததாகவும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த பயணத்தை தான் தவிர்த்ததாகவும் நடிகை மீனா பகீர் தகவலை அளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை சவுந்தர்யா 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சவுமியா சத்தியநாராயணா. இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் நந்தி விருது, கர்நாடகா அரசின் இரு மாநில விருதுகள், 6 பிலிமிபேர் விருதுகளையும் பெற்றிருந்தார்.

தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சூர்யவன்ஷம் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தார். இவரது கடைசி படம் ஆப்தமித்ரா. விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்துடன் நடித்திருந்தார்.
நடிகை சௌந்தர்யா, ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார். அவர் தனது 31வது வயதில் உயிரிழந்தார்.
விபத்தின் விவரங்கள்
சௌந்தர்யா, அவரது சகோதரர் அமர்நாத், மற்றும் மேலும் இருவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் தெலங்கானாவில் உள்ள கரீம்நகருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, பெங்களூருவில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தென்னிந்தியத் திரையுலகிற்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. இறக்கும்போது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது, இது அவரது ரசிகர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சமீபத்திய சர்ச்சை
சமீபத்தில், சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகின. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.
இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும், தனது குடும்பத்திற்கும் மோகன்பாபுவுக்கும் எந்த விதமான சொத்து விவகாரங்களும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த முழுமையான விசாரணை இன்னும் நடைபெறவில்லை.
சவுந்தர்யா பயணித்த ஹெலிகாப்டர்
இந்த நிலையில் நடிகை சவுந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பகீர் தகவல் அளித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து மீனா 40 என விழா கொண்டாடப்பட்டது.
ஜெகபதி பாபு நிகழ்ச்சி
இந்த நிலையில் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயம்முறா நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சவுந்தர்யாவுடன் மீனா இருக்கும் புகைப்படத்தை காட்டி அதுகுறித்த நினைவலைகளை பகிர்ந்து கொள்ளுமாறு ஜெகபதி பாபு கேட்டார்.
மீனா பகீர் பேட்டி
அப்போதுதான் மீனா, "எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறும் என்னையும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு அரசியல், பிரச்சாரம் இதெல்லாம் பிடிக்காது என்பதால் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லிவிட்டு மறுத்துவிட்டேன்" இவ்வாறு மீனா தெரிவித்தார். மேலும் தனது கணவர் இறப்பு குறித்தும் மறுமணம் வதந்தி குறித்தும் மீனா பதிலளித்துள்ளார். மீனா கூறிய விமான விபத்து தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications