பவா செல்லதுரையால் 5 நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் உட்கார முடியாது.. ரேகா நாயர் சொன்ன சீக்ரெட்
சென்னை: எழுத்தாளர் பவா செல்லதுரையால் ஒரு 5 நிமிடம் கூட உட்கார்ந்து பேச முடியாது என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
பவா செல்லதுரை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை அதிகாரியாக பணியாற்றியவர். இவர் கதை சொல்லும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்தார்.

இவர் ஜெய்பீம் படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் ஜோக்கர், குடிமகன், சைக்கோ, வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட! இவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வீட்டிலேயே விசித்ரா, யுகேந்திரன் வரிசையில் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர் பவா செல்லதுரைதான். மேலும் அந்த வீட்டில் எல்லாரையும் விட பவா செல்லதுரைக்குத்தான் ஊதியம் அதிகமாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. பவா சிறந்த கதை சொல்லி என கமல்ஹாசன் இவரை புகழ்ந்தார். இந்த நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேறிவிட்டார்.
அவருக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என கூறிவிட்டார். அவர் தினம் வீட்டில் ஒவ்வொரு கதைகளையும் கூறும் போது அவை போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னுடைய டார்க் சைடு என்ன என்பதை தெரிந்து கொள்ளவே பவா செல்லதுரை பிக்பாஸ் வந்தார். ஆனால் அவரால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.
ஆளை விடுங்க சாமி என கூறிவிட்டு கிளம்பிவிட்டார், அவருக்கு ஒரு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை ஊதியம் கொடுக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் பவா செல்லதுரை குறித்து சில சீக்ரெட்டுகளை நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில் ரேகா நாயர் கூறியிருப்பதாவது: பவா செல்லதுரை முதல்வருடன் மட்டுமல்ல பல அமைச்சர்களுடனும் உட்கார்ந்து பேசி இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் 5 நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்காரக் கூடியவர் கிடையாது. 5 நிமிடத்திற்கு ஒரு முறை அவர் வெளியே வரவேண்டும் என நினைப்பார்.
அவருடன் நண்பர்கள் வந்திருந்தால் அவர்களுடன் பேச வேண்டும் என நினைப்பார். ஒரு நிகழ்ச்சிக்கு போனால் கூட அந்த நிகழ்ச்சி எப்போது முடியும் என பரபரன்னு இருக்கக் கூடியவர். அது மட்டுமல்ல ஒரு மணி நேரம் மட்டும் கதை சொல்லுங்கள் என ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்தாலும் கதை சொல்வதை விட்டுவிட்டு ஒரு 5 நிமிடம் எப்போது வெளியே செல்வது என்றுதான் நினைப்பார்.
ஒரு வேளை பிரதமருடன் உட்கார்ந்து பேச பவா செல்லதுரைக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் உட்கார முடியாது. இப்படி அவரால் ஒரு இடத்தில் கூட உருப்படியாக இருக்கவே முடியாது. அப்படிப்பட்டவருக்கு எப்படி பிக்பாஸ் வீடு செட்டு ஆகும்? என ரேகா நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications