இரண்டாவது திருமணத்துக்கு நடிகை ரெடி? இவரா மாப்ளை? சமத்தானவர் அமைந்துவிட்டால் மகிழ்ச்சிதான்: பிரபலம்
சென்னை: சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற போவதாக மீண்டும் செய்திகள் பரவ துவங்கியிருக்கும் நிலையில், "சமந்தாவுக்கு அமைபவர் சமத்தானவராக அமைந்துவிட்டால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்" என்று மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநருடன், சமந்தாவுக்கு 2வது திருமணம் என்ற வதந்தி, சோஷியல் மீடியாவில் வட்டமடித்தவாறே உள்ளது.. இதுகுறித்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவுக்கு 2வது திருமணம் குறித்து, King 24X7 சேனலில் பேசியிருந்தார்.

சித்தார்த் - லிவிங் டூகெதர்
அதில், " நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்த சமந்தா, அதனை பிரேக் அப் செய்துவிட்டார்.. பிறகு, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். பிறகு நடிகை சோபிதாவை 2வது திருமணம் செய்தார் நாக சைதன்யா.. சோபிதாவும் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
ஃபேமிலிமேன் என்ற வெப்சீரிஸ் டைரக்டர், ராஜூ நிடுமூடு என்பவரை சமந்தா, திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிகைகளில் செய்திகள் கசிந்தன.. அதுமட்டுமல்ல, "பாதுகாப்பான வாழ்க்கை துணை, கைக்குழந்தையோடு இருந்தாலும் பரவாயில்லை" என்று சமந்தா போஸ்ட் போட்டிருந்தது, ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.
ஏற்கனவே திருமணம்
அதாவது, டைரக்டர் ராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்களாம். எனினும், பாதுகாப்பாக கணவன் இருந்தால் போதும், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று சமந்தா நம்புவதாக தெரிகிறது. அதனால்தான், இப்படியொரு போஸ்ட் போட்டிருக்கலாம் என்கிறார்கள்.
மேலும், திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாமா? என்ற யோசனையில் சமந்தா இருக்கிறார்.. அதற்கேற்றவாறு, ராஜூ நிடுமூடு டைரக்டருடன் கைகோர்த்து வலம் வந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. இயக்குனருடன் இரண்டாவது திருமணம் செய்ய போவதாக, தெலுங்கு மீடியாக்களிலும் பெரிசு பெரிசாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன" என்றெல்லாம் பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.
தனிமை பயங்கரமானது
இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.. அதில், "நான் 3 நாட்கள் தொலைபேசியை பயன்படுத்தாமல் அதை விட்டு விலகி இருந்தேன். 3 நாட்களும் மவுனமாக இருந்தேன். தொலைபேசியை தொடவே இல்லை. யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன்.
நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷ்டமானது. பயங்கரமானது. ஆனால் இப்படி மவுனமாக இருப்பதை நான் விரும்புகிறேன். பல மில்லியன் தடவைகள் இப்படி தனியாக இருக்க சொன்னாலும் இருப்பேன். நீங்களும் இப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு மிகப்பெரிய கவனம் பெற்றிருந்தது.
உண்மையா பொய்யா தெரியவில்லை
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் சமந்தாவுக்கு மீண்டும் திருமணமா? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பரமேஸ்வரன், "சில விஷயங்களை கவனமாக பேசவேண்டியிருக்கிறது.. ஃபேமிலிமேன் டைரக்டர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஒருவேளை இந்த செய்தி உண்மையில்லை என்றால், இது அவரது குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
எப்போதுமே சில விஷயங்களை தாமதமாக பேசினாலும், திடமாக பேசணும். எந்த விஷயத்திலும் அவதூறுகளை அள்ளிவீசக்கூடாது. நாகசைதன்யாவும், சமந்தாவும் ஆழமாக காதலித்துதான் திருமணம் செய்தனர்..
விரிசலுக்கு காரணம் விரசமா
ஆனால், திருமணத்துக்கு பிறகு நடிக்க ஓகே சொல்லிவிட்ட நிலையில், சமந்தா படங்களில் நடித்தது, குறிப்பாக, சில காட்சிகளில் எல்லை மீறி நடித்திருந்தார்.. இது ஆபாசமாகவும், அருவெறுப்பாகவும் போய்விட்டது. இதை நாகசைதன்யாவால் ஏற்க முடியவில்லை.. கணவருக்கும் இதனால் சங்கடம் இருக்கத்தானே செய்யும்? இதுதான் அவர்களுக்குள் விரிசல் வர முதல் காரணம்.
அதேபோல, சமந்தாவுக்கு வேறொரு தெலுங்கு இயக்குனருடன் நெருக்கம் இருப்பதாக சலசலக்கப்பட்டது. இதுவும் தம்பதிக்குள் விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. அந்த தெலுங்கு டைரக்டருடன் இணக்கமாக இருப்பதாக நம்பப்பட்டதன் அடிப்படையில்தான் விவாகரத்தும் நடந்ததாக தெரிகிறது.
சொத்துக்கள், கையிருப்புகள்
சமீபகாலமாக சமந்தா படங்களில் கமிட் ஆகவில்லை.. படங்களில் நடிப்பதைவிட, வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கான நேரங்கள் குறைவு என்பதால், அதில் நடித்து வருகிறார்.. ஆனால், இதற்கு பிறகுதான், ஃபேமிலிமேன் இயக்குனருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சமந்தாவுக்கும் ஒரு வாழ்க்கை தேவையாக உள்ளது.. வயதான தாய் உள்ள நிலையில், சமந்தாவின் சொத்துக்கள், கையிருப்புகளையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. இந்நிலைமையில்தான், தனிமை பயங்கரமானது என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.. 2வது திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெருந்தன்மையாக இருப்பதில்லை..
சமந்தாவுக்கு சமத்தான மாப்பிள்ளை
நடிகை என்ற கிரேஸ் உள்ளதாலும், மோகம் காரணமாகவும், தொழிலதிபர்கள் என்ற போர்வையில், டாக்டர் என்ற போர்வையிலும் பலரும் நடிகைகளை திருமணம் செய்து கொள்கிறார்கள். நடிகைகளின் உடலுக்காகவும், பணத்துக்காகவும், எத்தனையோ வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிடுகிறார்கள். ஆனால், அவைகளை நம்பி திருமணம் செய்த எத்தனையோ நடிகைகள், அத்தனை சொத்துக்களையும் இழந்து நிர்க்கதியாக நின்ற கண்ணீர் கதைகள் இங்கு நிறைய உண்டு..
அதுபோல் எதுவும் இல்லாமல், சமந்தாவுக்கு அமைபவர் சமத்தான நபராக அமைந்துவிட்டால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.. சமந்தாவுக்கு சந்தோஷமான வாழ்வு கிடைத்தால், அது நமக்கும் சந்தோஷம்தான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications