ரூ 100 கோடி வீட்டை விட்டு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றோம்.. நடிகை சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்
சென்னை: சென்னை கே.கே.நகரில் ரூ 100 கோடி மதிப்பிலான வீட்டை இழந்து குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றோம் என சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் உருக்கமாக கூறியுள்ளார்.
சீரியல்களில் நாயகிகளை காட்டிலும் வில்லிகளுக்குத்தான் மவுசு அதிகம். சிலருக்கு நெகட்டிவ் ரோலும் பொருந்தும், பாசிட்டிவ் ரோலும் பொருந்தும். அந்த வகையில் நடிகை சாந்தி வில்லியம்ஸிற்கு பாசக்கார தாய் வேடமும் வில்லியான மாமியார் வேடமும் கனகச்சிதமாக பொருந்தும்.

வில்லி வேடமாக சாந்தி வில்லியம்ஸை கூப்பிடுங்க என அழைக்கும் அளவுக்கு இருந்தது. அவரது உடல், கண்கள் என அனைத்துமே நடிப்பில் ஊறி திளைத்திருப்பதை போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அசைவை தரும். இவர் குழந்தை நட்சத்திரமாக தனது 12 வயதில் வியத்நாம் வீடு படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த சீரியல் மெட்டி ஒலி. இதில் சேத்தனின் தாயாக நடித்திருந்தார். அந்த காலங்களில் மகனிடம், மருமகளிடம், சம்பந்தியிடம் ஒரு தாய் எப்படி நடந்து கொள்வாரோ அதை கண் முன் காட்டினார். இவர் அடுத்தபடியாக தென்றல் சீரியலில் நடித்திருந்தார்.
இந்த சீரியலிலும் மாமியார் கேரக்டரில் வில்லி. அதாவது மகள் செய்தால் சரி, மருமகள் செய்தால் தவறு என இருக்கும் ஒரு கேரக்டர். ஹீரோயின் ஸ்ருதி ராஜை கொடுமைப்படுத்துவார். இதை பார்க்கும் பொதுமக்கள் சாந்தி வில்லியம்ஸை திட்டாத நாட்களே இருக்காது. இந்த சீரியலுக்காக இயக்குநர் கே பாலசந்தரிடம் இருந்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இவர் சித்தி, அண்ணாமலை, அன்னியன், பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சாந்தி வில்லியம்ஸ் கோவையை சேர்ந்தவர். இவர் மலையாளிக்கு பிறந்தவர். 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை மணந்தார். இவருக்கு 4 பிள்ளைகள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடன் நடித்த சித்ரா தற்கொலை சம்பவம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். மிகவும் நல்ல பெண், கடைசியாக செட்டில் நடித்த போது கூட அந்த பெண்ணின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எதற்காக இப்படி செய்தார் என தெரியவில்லை என கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சாந்தி வில்லியம்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் எங்கள் வீட்டை சுற்றி அத்தனை கார்கள் இருக்கும். என் கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அதை அவர் குழந்தைகளாகவே பாவித்தார். அந்த கார்கள் ஒவ்வொரு திசையில் நிற்கும். இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார்.
ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு காருடன் சென்றால் அப்போது நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் இவருடைய காரை வாங்கி கொண்டு சுற்றி பார்க்க கிளம்புவார்கள். அந்த அளவுக்கு காரை நன்றாக வைத்திருப்பார். 1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது. இதனால் கே.கே.நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நிற்கிறோம்.
அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி. எப்போதும் ஒரு மனிதன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவது எளிது. ஆனால் மீண்டும் பழைய நிலையை அடைய கஷ்டப்பட வேண்டும். அப்படித்தான் நானும் அன்று என் கணவர், குழந்தைகளுக்காக சீரியலில் நடித்து முன்னுக்கு வந்தேன். இன்று எனது பேரன் பேத்திகளுக்காக நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications