அபியோட சேட்டைக்கார பாட்டி செத்துப் போய்ட்டாங்க.. சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: இனிய இரு மலர்கள் சீரியலில் அபியின் பாட்டியாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த ஜரினா ரோஷன் கான் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த சீரியலின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இனிய இருமலர்கள். இந்த சீரியல் கும்கும் பாக்யா என்ற தெலுங்கு சீரியலில் டப்பிங் தான். இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெருமளவில் இருக்கின்றனர் .
தமிழ் சீரியல்களை போலவே டப்பிங் செய்யும் சீரியலுக்கும் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு இருக்கின்றது .ஏ னென்றால் அந்த சீரியலில் நடிகைகள் போடும் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை எல்லாமே தமிழ் ரசிகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருப்பதும் ஒரு காரணமாக தான் இருக்கிறது.

அபி பாட்டி
அதனால்தான் பல சீரியல்களில் இருந்தபின் தமிழில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரிதான் இந்த சீரியலும் இருமலர்கள் மற்றும் இனிய இருமலர்கள் என்ற இரண்டு பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகர் சபீர் அபி என்ற கேரக்டரிலும் ஸ்ரிதி ஜா பிரக்யா என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார்கள். அதில் அபியின் பாட்டியாக ஜரினா ரோஷன் நடித்து வருகிறார்.

ரொம்ப சேட்டை
இந்த சீரியல் மூலமாக ஜரினா ரோஷனுக்கு தமிழக ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். ஏனென்றால் இந்த சீரியலில் என்டர்டைன்மென்ட் இவர்தான் . இவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் தான் இருக்கின்றது . பாட்டியாக இருந்தாலும் இவர் போடும் கலக்கல் ஆட்டங்களும் பிரக்யா அபி இருவரும் சேருவதற்காக இவர் எடுக்கும் நடவடிக்கைகளும் வேற லெவலில் இருக்கும். இதனால் இவர் அபிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் செல்லமான பாட்டியாக தான் நடித்துக்கொண்டிருந்தார்.

ஆக்ஷன் ராணி
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இவர் பல படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் தமிழக ரசிகர்களுக்கு இவர் இனிய இரு மலர்கள் என்னும் சீரியல் மூலமாக தான் மனதில் நல்ல இடத்தைப் பெற்றிருக்கிறார் . பலருக்கு இந்த மாதிரி ஒரு ஜாலியான பாட்டி வீட்டில் இருந்தா ரொம்பவே நல்லா இருக்கும் என்று எண்ணும் அளவிற்கு தான் இவர் இந்த சீரியலில் கேரக்டர் அமைந்திருந்தது .

நடிக்கவில்லை.. வாழ்ந்தார்
இவர் இந்த சீரியலில் நடித்திருந்தார் என்று சொல்வதை விடவும் இந்த சீரியலில் பாட்டி கதாபாத்திரத்தில் வாழ்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்த சீரியல் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இவர் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். இது அந்த சீரியலில் நடிகர்களையும் ரசிகர்களையும் ரொம்பவே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .கொஞ்ச காலமாகவே பிரபலங்களின் இறப்பு அதிகமாகிக் கொண்டே வருவது போல திடீரென்று இவருடைய இறப்பும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது .

சோகத்தில் ரசிகர்கள்
இவருடைய இறப்பிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினரும் சின்னத்திரை நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி இந்த சீரியலில் அவருடன் அபி கேரக்டரில் நடிக்கும் சபீர் ஜரினாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற செல்பி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் .அவர் மட்டுமல்லாமல் அந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகர்களும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இவருக்கு போட்டோ போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications