அஞ்சலி அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டாளாம்.. அதனால கல்யாணமாமே!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் நேரம் மாத்தின ஹிஸ்டரி நமக்கு நல்லாவே தெரியும்..சீரியலில் அப்படி ஒண்ணும் பெரிய கதை இல்லை.
அந்த கதையிலயும் சுறுசுறுப்பு...விறுவிறுப்புன்னு எதுவும் இல்லாதது பெரிய மைனஸ். சந்திரா கிடைச்சுட்ட நிலையிலயும், சீரியலில் பெரிசா நிகழ்வுகள் நடந்த மாதிரியும் இல்லை.
நேரம் மாத்தினதும், கிரியேட்டிவ் டீம் ரொம்ப அசால்ட்டா வேலை செய்யறாங்க போலும். இருந்தாலும், இப்படியே போனா நிறுவனத்துக்கு நல்லதில்லை.

அப்பா ஏற்பாடு
சந்திராவை காப்பாத்தினவரோட பொண்ணுங்க ரெண்டையும் ஆபத்திலிருந்து காப்பாத்தி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க சந்திரா அம்மா. அந்த இரண்டு பொண்ணுங்களில் ஒரு பொண்ணுக்கு ரவுடி பசங்க தொல்லை குடுக்க, சந்திரா புருஷன் அதாவது அஞ்சலியோட அப்பாதான் இந்த பொண்ணை காப்பாத்தி வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றார்.

பார்க்கிறார் அப்பா
இதை அஞ்சலியும், சந்திராவும் நம்பாம டிராமா பண்ணி ஏதோ நம்மகிட்ட நெருங்கி சதி செய்ய பார்க்கிறார்னு திட்டி அனுப்பிடறாங்க. அஞ்சலி அப்பா நம்ம வீட்டுல இருக்க பொண்ணாச்சேன்னு காப்பாத்தி அழைச்சுட்டு வந்தேன்னு சொல்லியும் நம்பலை. அஞ்சலிகிட்ட சீதா உண்மையை சொன்னாலும் நம்பலை.

அதே ரவுடிகள்
மறுபடியும் அதே ரவுடிகள் இடைமறித்து, கலாட்டா பண்ணும்போது, அந்த பொண்ணை காப்பாத்த நீ யாருன்னு கேட்கறாங்க. இதை சீதாவும், அஞ்சலியும் பார்த்துடறாங்க.மறுநாள் அப்பா தங்கி இருக்கும் ருத்ரா வீட்டுக்கு அஞ்சலி போயி மன்னிப்பு கேட்கறா.

ஹேப்பி
இதுல சந்தோசம் ஆகிடறார் அஞ்சலியின் அப்பா. கூடவே அப்பான்னும் ஒரு வார்த்தை தன்னையறியாம சொல்லிடறா. அதுல ரொம்ப மகிழ்ச்சியாகிடறார் அப்பா. வீட்டுல வந்து சீதாகிட்ட, நீ சொன்னப்போ நம்பலை சீதா.ஆனா, உண்மையை கண்ணால பார்த்த உடனேதான் நம்பிக்கை வந்துச்சு. தப்பு செய்துட்டோமோன்னு எண்ணம் வந்துச்சு.அதான் நேர்ல போயி சாரிப்பான்னு சொல்லிட்டேன். என்னை அறியாமலே அப்பான்னு வந்துருச்சு சீதான்னு அஞ்சலி சொல்றா.

பந்தம்
இதுதான் அஞ்சலி ரத்த .பந்தம் என்க அப்பாவுக்கு நாங்க திதி கொடுத்தோம். உங்க அப்பா பேரு என்னம்மான்னு ஐயர் உங்களை பார்த்து கேட்டப்போ உங்களுக்கு மனசு எப்படி துடிச்சுது. இதுதான் தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்னு சொல்றதுன்னு சீதா சொல்றா.

தெரிய வேணாம்
இது அம்மாவுக்கு தெரிய வேணாம் சீதா. எனக்கு அப்பா மேல பாசம் எல்லாம் இல்லை. அவர் என்னை அம்போன்னு விட்டுட்டு போனதுன்னு எல்லாமே எனக்கு மறக்கலை.. இருந்தாலும் இந்த சமயத்துல என் மேலதான் தப்பு.. அதனாலதான் சாரி கேட்க போனேன்.. இது அம்மாவுக்கு தெரிய வேணாம் சீதான்னு சொல்றா அஞ்சலி.

மறைந்து
இதை மறைந்து இருந்து கேட்டுடறாங்க சந்திரா அம்மா. உடனே வேலைக்கார பெரியவரிடம் புலம்பறாங்க. அவர் ருத்ரா கூட வாழணும்னு டைவர்ஸ் மட்டும்தான் கேட்டுகிட்டு இருந்தார். இப்போ அது கிடைச்சுரும்னு நம்பிக்கையில பொண்ணை என்னைவிட்டு பிரிச்சு, அவ வாழ்க்கை நாசமாகிருமோன்னு பயமாருக்குன்னு சொல்றாங்க.

ஆபத்து
அஞ்சலிக்கு அவங்க அப்பாவால் ஆபத்து ஏதும் வர்றதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் செய்து வச்சுடணும்னு வேலைக்கார பெரியவரிடம் சொல்றாங்க சந்திரா அம்மா. பெத்தவங்களில் ஒருத்தங்க கிட்ட பிள்ளைங்க இருந்தா இப்படித்தான் பயம் வரும் போல...
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications