செய்வினை செய்துவிடுவதாக பெண் மிரட்டல்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்குமார் புகார்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமாருக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. அதில் நடித்து வருபவர் சதீஷ்குமார் (40). இவர் அந்த சீரியலில் கோபி எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் அவர் ரசிகர்களிடையே பிரபலம்.

இவர் அப்பாவித்தனம் கலந்த நடிப்பிற்காகவே இவரது சீரியலை பலர் பார்த்து வருகிறார்கள். இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது காலை நேரங்களில் நல்ல வார்த்தைகளை கூறி எல்லாரும் நன்றாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதாக கூறி எல்லாருக்கும் அந்த நாளை இனிய நாளாக்குவார்.
மேலும் நிறைய மோட்டிவேஷனல் ஸ்பீச்செல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துவிடுவார். இவரது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் பாக்கியா, ராதிகா ஆகிய இரு மனைவிகளுடன் படாதபாடுபடுகிறார். சீரியலில்தான் இரு பெண்களால் பிரச்சினை என்றால் இவருக்கு நிஜ வாழ்விலும் ஒரு பெண்ணால் சூனியம் வைக்கும் அளவுக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு அறுபடை முருகன் கோயிலுக்கு நான் சுவாமி தரிசனம் செய்ய சென்றேன். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார்.
இதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அத்துடன் சில நாட்கள் கழித்து அந்த பெண், எனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். செல்பி எடுக்க வேண்டும் என்றும் தொந்தரவு தரும் வகையிலும் அடிக்கடி எனக்கு போன் செய்தார், இதனால் நான் அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எனது அடையார் வீட்டுக்கே வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நன்றாக நடிக்கிறார் என ஒரு சாரார் பாராட்டினாலும் , ஒரு சிலர் அவரை திட்டி வருவதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு வருத்தமாக ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் சீரியல் என்பது நடிப்பு, இதில் நல்லா நடித்தாலும் திட்டுறாங்க, இல்லாவிட்டாலும் திட்டுறாங்க, நான் என்ன செய்யுறதுனு புரியலை.
கடவுள் எனக்கு ஒரு திறமை கொடுத்திருக்கிறார். அதை வெளிப்படுத்தித்தான் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். சத்தியமாக எனக்கு இந்த வாழ்க்கை குறித்து ஒன்றுமே புரியலை, டைரக்டர் கொடுக்கும் பணியை நான் செய்கிறேன். அதை மனதிருப்தியுடன் செய்து வருகிறேன். இவ்வாறு ஒரு பதிவை அவர் போட்டிருந்தார். சதீஷ்குமாரே வருத்தப்படும் அளவுக்கு அவருக்கு இந்த சீரியல் பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது என்பது இந்த பதிவின் மூலமே அறியலாம்.
இந்த சீரியலில் மலையாள நடிகை சுசித்ரா, ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித், உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இது விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. டிஆர்பியில் டாப் சீரியலாக இது இருக்கிறது. சதீஷின் அப்பாவி முகம், பிளே பாய் கேரக்டரில் ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் சிக்கி திணறுகிறார் கோபி!
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications