பாக்கியலட்சுமி: ராதிகாவிடம் கோபி சொன்ன வார்த்தை! நறுக்குன்னு பாக்யா கேட்ட கேள்வி! மனம் மாறிய ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா, கோபிக்கு போன் செய்யும்போது கோபி சொன்ன வார்த்தையை கேட்டு ராதிகா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் கோபிக்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் புது சமையல் செய்ய வேண்டும் என்பதால் எப்படி செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தபோது டெம்பரரியா ஒரு செஃப் அரேஞ்ச் பண்ணனும் என்று கோபி ஐடியா கொடுக்கிறார். அதற்கு ஜெனி அது எப்படி டெம்பரேரியா ஒரு செஃப் அரேஞ்ச் பண்ண முடியும் என்று கேட்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதற்கு கோபி ஆர்டர் வரும்போது அதற்கு தகுந்த மாதிரி செஃப் அரேஞ்ச் பண்ணுவது எளிமை தான். என்னதான் திறமை இருந்தாலும் அதை ஸ்மார்ட்டா எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிஞ்சுக்கணும் என்று பாக்யாவுக்கு ஐடியா கொடுக்கிறார். அதைக் கேட்டு செழியன் நமக்கு இந்த ஐடியா தோணலையே அப்பா தான் கிரேட் என்று பெருமையாக பேசுகிறார்.

அப்போது ஈஸ்வரி படிச்சா மட்டும் போதாது அறிவு வேணும்.. அது உங்களுக்கு எல்லாம் இல்லைன்னு நான் சொல்லல.. ஆனா கோபிக்கு நிறைய இருக்கு. அவனுக்கு எல்லாமே தெரியும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி இவங்க பேசுறதை விடுங்க ஆன்ட்டி ஆனால் அங்கிள் சொன்ன மாதிரி நாம ஒரு செஃப் போட்டுக்கலாம் என்று சொன்னதும் பாக்கியா அதெல்லாம் தேவையில்லை பாக்கலாம் என்று சொல்லவும் கோபியின் முகம் மாறுகிறது.

பிறகு ராதிகா சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது ராதிகாவின் அம்மா வந்து நீ இப்படியே இருந்தா மாப்பிள்ளை அப்படியே போய்விடுவாரு அவருக்கு போன் பண்ணி பேசு என்று போனை எடுத்துக் கொடுக்கிறார். பிறகு ராதிகா போன் செய்ததும் கோபி போனை எடுத்து பேசுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது நான் இங்கே ரொம்ப சந்தோசமா இருக்கிறேன். அம்மா என்னை நல்லா கவனிச்சுக்கிறாங்க‌. எனக்கு பார்த்து பார்த்து சமைச்சு தராங்க. அவங்க நல்லா பாத்துக்குறதுனால நான் நல்லா தூங்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, நான் உங்கள பார்க்க வந்தேன். நீங்க அப்போ தூங்கிட்டு இருந்தீங்க என்று ராதிகாவும் செல்கிறார்.

நீ வந்தியா என்று கோபி கேட்க, நான் வந்ததை யாரும் சொல்லலையா என்று ராதிகா கேட்கிறார். அப்போது கோபி சமாளித்து விடுகிறார். அதோடு பாக்கியா பற்றியும் ஈஸ்வரி பற்றியும் பெருமையாக பேச, ராதிகா சரி என்று போனை வைத்து விடுகிறார். பிறகு ராதிகா தன்னுடைய அம்மாவிடம் அவர் என்னை பற்றியோ மயூ பற்றியோ கொஞ்சம் கூட கேட்கல.

baakiyalakshmi serial vijay tv

அந்த வீட்டில் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று வருத்தப்படுகிறார். அடுத்த கட்டத்தில் கோபி தூங்கிக் கொண்டிருக்கிறார். திடீரென்று எழுந்து ஏதோ சத்தம் கேட்கிறது என்று ஈஸ்வரியிடம் கேட்க, பாக்கியா தான் கிச்சனில் ஏதாவது வேலை செஞ்சுட்டு இருப்பா என்று ஈஸ்வரி சொல்கிறார்.

அதோடு இப்படித்தான் பாக்யா தினமும் வேலை செஞ்சிட்டே இருப்பா என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க கோபி நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன் என்று கிச்சனுக்கு வந்து பார்க்க அங்கு பாக்கியா வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவிடம் தான் இதுவரைக்கும் செய்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பாக்கியா அதை கண்டுகொள்ளவில்லை.

baakiyalakshmi serial vijay tv

அடுத்த நாள் காலையில் பாக்கியா வாக்கிங் போகிறார். அங்கு கோபியும் ஈஸ்வரியும் வருகின்றனர். கோபி பாக்கியாவிடம் தனியாக பேசப்போகிறார். அப்போது மீண்டும் தான் இதுவரைக்கும் செய்ததற்கெல்லாம் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ராதிகா வருகிறார். ராதிகா இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+