பாக்கியலட்சுமி: கோவிலில் சத்தியம் கேட்ட ஈஸ்வரி.. கோபி எடுத்த முடிவு! ராதிகா பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி எப்போதும் என்னை விட்டு போகவே கூடாது என்று ஈஸ்வரி குலதெய்வம் முன்பு சத்தியம் கேட்கிறார். அதற்கு கோபி என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி, இனியா, செழியன் மூன்று பேருக்கும் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா கல்யாணத்தை கிராண்டா பண்ணிடு கோபி, நான் அதுவரைக்கும் இருக்க மாட்டேன் என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு கோபி நீங்க இனியா கூட குழந்தையின் கல்யாணத்தையும் பார்ப்பீங்க என்று சொல்கிறார்.

பிறகு அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஜெனி செல்வி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியாவின் ஸ்டேட்டஸை பாத்தீங்களா என்று கேட்க, இல்லையே போன் தூரமா இருக்கு என்று பாக்யா சொன்னதும் ஜெனி போனில் ஸ்டேட்டஸ் காட்டுகிறார்.
அதில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு ஊட்டும் போட்டோ இருக்கிறது. அதை பார்த்ததும் பாக்யா டென்ஷன் ஆகி இவங்க பண்ற அலம்பல் தாங்க முடியல. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே பையனே இல்லைன்னு தலை முழுங்குறாங்க. இந்த இனியாவும் செழியணும் அவர் பண்ணுனதெல்லாம் தப்புன்னு சொன்னாங்க ஆனா இப்ப அப்படியே தலைகீழா மாறி இருக்கு.
இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்த பசங்க மாதிரி இவரும் பண்ணிக்கிட்டு இருக்காரு. ராதிகாவை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல. அவங்க இவரை பார்க்கிறதுக்காக இந்த வீட்டுக்கு வந்து ஒவ்வொரு முறையும் அசிங்கப்பட்டு தான் போறாங்க. அவங்கள பார்க்க கூட இங்கு இருக்கிறவங்க விடமாட்டுக்காங்க.

அது போல அந்த மயூவும் பாவம் ஹாஸ்பிடலில் இருந்து அவரை பாக்குறதுக்காக உள்ள வரவே பயப்படுற என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செல்வி எதுக்குக்கா இப்போ நீ ராதிகாவுக்கு சப்போர்ட் பண்ற, அவங்க உன் வாழ்க்கையை பறிச்சிட்டு போனவங்க தானே என்று கேட்க, அதற்கு யாரும் யாரோட வாழ்க்கையை பறிக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ராதிகா வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது ராதிகாவின் அம்மா நீ எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா என்று கேட்கிறார். அதோடு கண்டிப்பாக வீடு காலி பண்ணி தான் ஆகணுமா? என்று சொன்னதும் ராதிகா எதுவும் பேசாமல் போனை எடுத்து காட்ட அதில் ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு ஊட்டும் போட்டோ இருக்கிறது.
அதை பார்த்ததும் கமலா கோவப்படுகிறார். அதற்கு ராதிகா நான் இதுவரைக்கும் அவருடைய இந்த சிரிப்பை பார்த்ததே இல்லை. இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க அம்மா தான் என்னுடைய எதிரி என்று சொல்லிட்டு இருந்தாரு. எங்க அப்பாவுக்கு கொல்லி போட விடலன்னு கதறிக்கிட்டே இருந்தாரு.
ஆனா இப்போ அவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்காங்க என்று சொல்லும்போது கூட கமலா இப்ப கூட நீ வீட்டை விட்டு போகக்கூடாது ராதிகா, நாம எதுக்கு மாப்பிள்ளையை விட்டுக் கொடுத்துட்டு போகணும்? இங்கேயோ இருக்கணும் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி நம்ம மாப்பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்துடலாம் என்று சொல்ல, ராதிகா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
மறுநாள் காலையில் கோவிலில் கோபியின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு ஈஸ்வரி கோபியிடம் உனக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாமல் ஆனதும் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. கோபி நீயும் என்னை விட்டுட்டு போயிடுவேன்னு நான் பயந்துட்டேன் என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.
அதோடு நீ என் கூட தான் இருக்கணும் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது, நான் உங்க அப்பா கிட்ட போய் சேர்ர வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும் என்று சென்டிமெண்டாக பேசுகிறார். அதற்கு கோபி நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று சொல்ல இப்படி வாய் வார்த்தையா சொன்னா நல்லா இருக்காது நீ எனக்கு சத்தியம் பண்ணி கொடு என்று கேட்க கோபி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இனியாவும் செழியனும் நீங்க சத்தியம் பண்ணி கொடுங்கப்பா. நீங்க எங்க கூடவே இருப்பது தான் நல்லா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி யோசிக்கிறார். பிறகு ஈஸ்வரிக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications