Barathi kannamma serial; கருப்பு கண்ணம்மா தங்கச்சி கல்யாணத்துக்கு வரக்கூடாதாம்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், பெண்களை பெருமைப் படுத்தும் விதத்தில் ஒரு வகையில் இருந்தாலும், கறுப்பே பிடிக்காது என்கிற ஒரு மாமியாரும் இருப்பதாக கதை நகருது.
கண்ணம்மாவின் சித்தி பெண்ணுக்கும் ,கண்ணம்மாவின் புருஷன் பாரதியின் தம்பி அகிலனுக்கும் கல்யாணம் நடக்க இருக்குது. இதற்கான நலுங்கு இன்ன பிற சம்பிரதாயங்கள் நடந்து கொண்டு இருக்க, கண்ணம்மாவை . எங்கும் போக கூடாது என்று கண்டிஷன் போடறாங்க பிடிக்காத மாமியார்.
சவுந்தர்யா அம்மாதான் கண்ணம்மாவின் மாமியார்.இவங்களுக்கு கருப்பு என்றாலே அலர்ஜி. கருப்பு நிறத்திலிருக்கும் தனது பேத்தியை இன்னும் தொட்டது கூட இல்லை.

அகிலன் அஞ்சலை
அகிலன் அஞ்சலி கல்யாணம் முடிவு செய்ய போனபோதுதான்,அஞ்சலியின் அக்கா கருப்பு கண்ணம்மாவை பார்க்கிறான் பாரதி.பார்த்த மாத்திரத்தில் அவளை பிடித்துப்போகிறது பாரதிக்கு. ஆனால், பெண் பார்க்க வந்த அஞ்சலிக்கு, தன்னைப் பார்க்க வந்த அகிலனை விட பாரதியைப் பிடித்துப் போகிறது. ஆனால், ஏழைப் பெண்ணானஅஞ்சலி குடும்பத்தை ஏத்துக்கறாங்க சவுந்தர்யா அம்மா.காரணம் அஞ்சலி மிஸ் சென்னை, அவ்வளவு அழகாம். அழகுதான் பிடிக்கும், சவுந்தர்யா அம்மாவுக்கு.

பாரதியைத் துரத்தி
அகிலனை விட்டு, பாரதியை துரத்தி துரத்தி காதலிப்பதாக அஞ்சலி சொல்ல, கொதித்துப் போகிறான் பாரதி.தம்பிக்கு பார்த்த பெண் தன்னிடம் காதல் வசனம் பேசுவதா என்று கொந்தளிச்சு பாரதி, திடீரென்று யாருக்கும் தெரியாமல் கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துகிட்டு வர்றான்.

சவுந்தர்யாவுக்கு பிடிக்கலை
சவுந்தர்யா அம்மாவுக்கு கண்ணம்மாவை கருப்பு என்று ஏற்கனவே பிடிக்காது.இந்த லட்சணத்தில் தனக்கே மருமகளா கருப்பு கண்ணம்மா வந்துட்டா எப்படி இருக்கும்.? சுத்தமாக கண்ண்ணம்மாவை வேலைக்காரி போல மதிக்கும் சவுந்தர்யா அம்மா,அகிலனுக்கு பார்த்த கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியை அழகு மருமகள் என்று அலட்டிக்கறாங்க.

கண்ணம்மா அஞ்சலி
அழகு அஞ்சலியை தனது மருமகள் என்று எல்லாரிடமும் பீற்றிக் கொள்ள நினைக்கும் சவுந்தர்யா அம்மா, கண்ணம்மாவை தனது மருமகளென்று கல்யாண நேரத்தில் யாரும் பார்த்து விடக் கூடாது என்றும், அவளை கல்யாணத்துக்கு வராமல் நிறுத்த பாரதியை வைத்துத்தான் ஏதாவது திட்டம் போட வனேடும் என்றும் நினைச்சுக்கறாங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications