Barathi Kannamma Serial: இப்போ நீ பேசு கண்ணம்மா.. உனக்கும் உரிமை இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கதை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். கருப்பு கண்ணம்மா வெறுத்து ஒதுக்கப்படும் பெண்ணாகத்தான் வளர்ந்திருக்கிறாள். இதில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆனால் ,இன்னும் கொஞ்சம் பாரதி தனது மனைவி கண்ணம்மாவுக்கு பரிந்து பேசும் வசனங்கள் ஆழமானதாக அழுத்தமானதாக இருக்கலாம். பொண்டாட்டியின் நிலை இப்படி எனும்போது, புருஷன் எப்படி கொந்தளிக்கணும்.. அப்படி இல்லை என்றால்கூட வசனத்தில் கவனத்தை செலுத்தி இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் எல்லோரின் மனதிலும் இந்த சீரியல் இடம் பிடித்து, மக்களை பார்க்க தூண்டுவதாக இருக்கிறது.

ஜூஸில் விஷம்

ஜூஸில் விஷம்

அஞ்சலி கண்ணம்மாவுக்கு ஜூஸில் விஷத்தை கலந்து வைக்க,அந்த ஜூஸ் சந்தேகம் கொள்ளத்தவாறு , அஞ்சலிக்கே வந்து சேருகிறது. கடைசியில் பழி கண்ணம்மா மீது விழுகிறது.தான் கலந்த விஷம் தனக்கே வந்துருச்சுன்னு அஞ்சலி நினைத்தாலும், அகிலனுடன் நடக்க இருந்த முதலிரவு நின்றதில், இதை அவள் பெரிதாக எடுத்துக்கவில்லை.

பொளேர் கண்ணம்மாவுக்கு

பொளேர் கண்ணம்மாவுக்கு

கண்ணம்மாதான் விஷம் கலந்து கொடுத்தாள், அவள் ஜூஸில் எதோ கலந்ததை நானே பார்த்தேன்னு சவுந்தர்யா அம்மா,கண்ணம்மாவை அடித்து விடுகிறார்கள்.போதா குறைக்கு சித்தியும் அடிக்கறாங்க. பாரதி, விலக்குகிறான் தவிர, அந்த இடத்தில் கடுமையான கோபம் காண்பிக்கவில்லை. பேச்சும் பேசவில்லை.

டாக்டர் தோழி

டாக்டர் தோழி

பாரதியின் டாக்டர் தோழிதான், சாப்பிட்ட உணவில் ஏதாவது பாய்சனாக மாறி இருக்கலாம். கண்ணம்மா மேல யாரும் சந்தேகப்படாதீங்க. எல்லாருமே அவள் மேல் இப்படி குத்தம் சொல்லாதீங்கன்னு டாகடர் தோழி வெண்பா சொன்னதும் அமைதியாகிடறாங்க. சவுந்தர்யா அம்மா,கண்ணம்மாவின் சித்தி இருவரும் இன்னும் நம்பவில்லை

நீ பேசு

நீ பேசு

அனைவரும் அமைதியாகிவிட, இப்போதான் பாரதி தனக்கான புருஷன் கடமையை .சரியா செய்யறான்.அதாவது , எல்லாரும் பேசிட்டாங்க. இப்போ நீ பேசு கண்ணம்மா . நான் உன் புருஷன் சொல்றேன்.. உனக்கும் இந்த வீட்டில் பேச உரிமை இருக்குன்னு. கண்ணம்மா, எனக்கு அஞ்சலியை ரொம்ப பிடிக்கும், அவள் கேட்டால் நான் எதையும் விட்டு குடுத்துருவேன்.சின்ன பிள்ளையில் இருந்து அவளுக்கு நான் எத்தனையோ செய்திருக்கேன். அவளை எதுக்கு நான் கொள்ள நினைக்க போறேன்.

சுத்தம் அன்பு

சுத்தம் அன்பு

என்னை தாய் மாதிரி பார்க்கறதா சொன்னீங்க அகிலன் தம்பி..அதே மாதிரி தாய்ப் பால் போல சுத்தமானது அஞ்சலி மேல நான் வச்சிருக்கும் அன்புன்னு சொல்றா. தனது அத்தையைப் பார்த்து, எனக்கு உங்களை எப்படி கூப்பிடறதுன்னு கூட தெரியலை. அத்தைன்னு கூப்பிட்டா உங்களுக்கு கோவம் வரும்.. எனக்கு இந்த மாதிரி கெட்ட புத்தி எல்லாம் இல்லைம்மா. என்னை உங்களுக்கு பிடிக்காது. அதனால சுலபமா குத்தம் சுமத்தறீங்கன்னு சொல்றா.

இந்த லூசு பொண்ணு சர்க்கரையைத்தான்நான் ஜூஸில் கலந்தேன்னு சொல்ல மறந்துடறா .இதை மட்டுமே பார்த்த சவுந்தர்யா அம்மா, கண்ணம்மாதான் விஷத்தை கலந்தான்னு சொல்லி சாதிக்கறாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+