பிக்பாஸ் 2 : கட்டிப்பிடிக்கத் தெரியாமல் திணறிய செண்டு... ஈஸியாக தலைவியான வைஷூ!
பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக வைஷ்ணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : கட்டிப்பிடி டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டின் இவ்வாரத்திற்கான தலைவியாகி இருக்கிறார் வைஷ்ணவி.
பிக்பாஸ் வீட்டில் வாரந்தோறும் போட்டியாளர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களது தலைமையின் கீழ் மற்ற போட்டியாளர்கள் குழுக்களாகப் பிரிந்து வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொண்டு, செயல்படுவர்.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்த மூன்று வாரங்களில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் வீட்டின் தலைவி தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.

முதல் தலைவி:
முதல்வாரம் வீட்டின் தலைவியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டார். அப்போது டாஸ்க் ஒன்றின் மூலம் அவர் வேட்பாளராகி, பின்னர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பிரச்சாரம் செய்து தலைவியானார்.

இரண்டாவது தலைவி:
இரண்டாவது வாரம் வீட்டின் தலைவியாக நித்யா தேர்வு செய்யப்பட்டார். இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் சரியாக இருக்கும் என சக போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் நித்யா எனப் பதிலளிக்க, அவரையே அவ்வார வீட்டின் தலைவியாக்கி அழகு பார்த்தார் பிக்பாஸ்.

புதிய தலைவி:
இந்நிலையில், மூன்றாவது வாரமான இவ்வாரம், கன்பெக்சன் அறையில் இருக்கும் நாற்காலியில் முதலில் அமரும் நபர் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவர் என அறிவித்தார் பிக்பாஸ். இதனால் அனைவரும் அடித்துப் பிடித்து ஓட, முதலில் சேரை ஆக்கிரமித்தது வைஷ்ணவியும், சென்றாயனும்.

கட்டிப்பிடி வைத்தியம்:
எனவே, அவர்களுக்கு இடையே சிறிய போட்டி வைத்து, அவர்களில் ஒருவரை தலைவராக்குவது என பிக்பாஸ் முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் யார் கட்டிப்பிடி வைத்தியம் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

சென்றாயன் தோல்வி:
எப்படி கட்டிப்பிடி வைத்தியம் பெறுவது எனத் தெரியாமல் சென்றாயன், தத்துபித்தென விழிக்க, வைஷ்ணவி அழுது நடித்து வெற்றி பெற்றார். இதனால் இந்த வார தலைவியானார் அவர். எனவே, அவரை இந்த வாரம் யாரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பதே சக போட்டியாளர்களுக்கு கவலையாக மாறியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications