வின்னர் இவங்கதான்.. உள்ளே நடக்கிறது உங்களுக்கு தெரியாது? முதல் முறை பல ரகசியத்தை உடைத்த விசித்திரா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் விசித்திரா எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருந்தார். அதற்கு பிறகு முதல் முறையாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்பது பற்றியும் ரன்னராக யார் வருவார்கள் என்பது பற்றியும் விசித்திரா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் 95 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் பலவற்றையும் தன்னுடைய முதல் வீடியோவில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தனக்கு வாக்களித்து சப்போர்ட் செய்த ரசிகர்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் தான் அதிகமாக தினேஷோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் வெளியே வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தன்னுடைய கருத்தை சொல்லி இருப்பதால் அதற்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் அதை மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்ன பேசி இருக்கிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இதுவரைக்கும் எந்த சீசனிலும் யாரும் செய்யாத சாதனையை பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா செய்து காட்டி இருந்தார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து எல்லா சீசனிலும் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் முதல் ஆளாக வெளியேற்றப்படுவார்கள்.
முதல் வாரத்தில் தப்பினாலும் கூட ஒரு சில வாரங்களில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் 50 வயதை கடந்த விசித்திரா 95 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் டப் போட்டியாளராக இருந்திருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ஆதரவு விசித்திராவிற்கு மக்கள் மத்தியில் காணப்பட்டது. இறுதிவரை சென்று அவர் டைட்டில் வின் பண்ணுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் விசித்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பேன் என்று எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.
ஆனா நான் இத்தனை நாட்களாக உள்ளே இருந்ததே பெரிய வெற்றி என்றுதான் நினைக்கிறேன். அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதுபோல நான் வெளியே வந்ததுக்கு அப்புறம் கூட பல பேர் பிக் பாஸ் என்னை வெளியே அனுப்பியது unfair என்றெல்லாம் சொன்னீங்க. அந்த அளவுக்கு நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அதுவே எனக்கு போதுமானது.
ஆனாலும் வெளியே வந்ததுக்கு பிறகு எல்லாரும் என்கிட்ட கேக்குற கேள்வி யாரு டைட்டில் வின் பண்ணுவாங்க என்றுதான் அதற்கு எல்லாரும் சொல்கிறது அர்ச்சனா என்று தான். ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் மாயா வின் பண்ணுனா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எல்லாம் கிடையாது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் இதை சொல்றேன்.
பிக்பாஸ் வீட்டில மாயா வெளியே கேட்ட பேரு வாங்கினாலும் பரவால்லைன்னு மக்களை சந்தோசம் படுத்தினா போதும்னு தான் ஒவ்வொரு முறையும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அர்ச்சனா உள்ளே வரும்போது நல்ல ஒர்க் அவுட்டு பண்ணிட்டு தான் பிக் பாஸ் குள்ள வந்திருக்காங்க. பிரதீப் விஷயத்தில் உரிமை குரல் தூக்கினதனாலதான் அர்ச்சனாவுக்கு நிறைய சப்போர்ட் கிடைச்சது.
அதுபோல பிரதீப் விஷயத்துல நான் கூட சொன்னது அவனை உள்ள வச்சு திருத்தி இருக்கலாம் என்றுதான். ஒருவேளை பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால் இந்த முறை டைட்டில் வின்னர்க்கான போட்டியில் பெரிய மாற்றம் இருந்திருக்கும். அதுபோல இந்த சீசனையும் டைட்டில் வின்னர் ஆகுவதற்குரிய வாய்ப்பு அர்ச்சனா மற்றும் ஆயாவுக்கு தான் இருக்கிறது.

மாயாவை எடுத்துக்கொண்டா மாயா நெகட்டிவா காட்டி பிக்பாஸை நல்லபடியா கொண்டு போறாங்க. அதுபோல அர்ச்சனையாவை எடுத்துக்கொண்டு வெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டுக்கு வரும்போது நல்லா ரெடியாகி வந்திருக்காங்க. அதற்கு ஏற்ற மாதிரி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவங்க கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது எப்படின்னு என்னால இப்போ சொல்ல முடியாது. அதை நான் சொல்லவும் விரும்பல... என்றாலும் மாயா அல்லது அர்ச்சனா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தங்க தான் வின்னர், ரன்னரா வர போறாங்க என்று விசித்திரா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications