"டீசர்" ஓகே.. "ஃபுல்" வீடியோ எப்போ.. சைத்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இந்த லாக்டோன் நேரத்திற்கு பிறகு இப்போதுதான் பல திரை நட்சத்திரங்களும் திருமணங்களை முடித்து வருகிறார்கள்.
பலர் ரொம்ப நாள் காத்திருந்து திருமணத்தை இப்போது முடித்து இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் அவர்களை விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அந்த அளவிற்கு இருக்கிறது. திருமணத்தில் புகைப்படம் எடுப்பது சாதாரணம்தான் ஆனால் அதை இப்போது ப்ரீ வெட்டிங் சூட் என்னும் பெயரில் விதவிதமாக எடுத்து குவித்து வருகிறார்கள்.

புதுக் கல்யாணம்
அந்த மாதிரிதான் யாரடி நீ மோகினி ஸ்வேதா வாக நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கும் இப்போதுதான் வெட்டிங் நடைபெற்றது. அதன் பிறகு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். சைத்ரா ரெட்டி திருமணம் போன வருடமே நடைபெற இருந்தது.

சிம்பிள் மேரேஜ்
ஆனால் குடும்ப பிரச்சினையால் கொஞ்சம் தள்ளி வைத்து கடந்த மே மாதத்தில் வைத்துக்கொள்ள முடிவு எடுத்து இருந்தனர் .ஆனால் அந்த நேரத்தில் லாக் டவுன் என்பதால் தற்போது திருமணத்தை வெகு சிறப்பாக மற்றும் எளிமையாக நடத்தி முடித்திருந்தார்கள் .அதுவும் இவருக்கு திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்தது.

பாரம்பரிய முறை
எவ்வளவுதான் வசதிகள் வந்தாலும் பலர் மேற்கத்திய மோகத்தில் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள் .ஆனால் இவருக்கு திருமணத்தில் பாரம்பரிய முறைப்படி பல நிகழ்ச்சிகளை வைத்து நடத்தி இருந்தார்கள். திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

தோழிகள் விட மாட்டேங்கிறாங்களே
திருமண போட்டோஸ்கள் மட்டுமல்லாமல் இவரும் இவரது தோழிகளும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வைரலாகி வந்தது. போட்டோ ஷூட் மோகம் அனைத்து மக்களையும் ஆட்டி வைத்து வருகிறது. அது திரைப்பட துறையினரையும் விட்டு வைக்க இல்லை. அதுமாதிரிதான் சைத்ரா ரெட்டியும் திருமணம் முடிந்த பிறகு ப்ரீ வெட்டிங் போட்டோஸ் களாக எடுத்து வருகிறார்.

பார்ட் பார்ட்டாக போட்டோ
ஆனால் புகைப்படங்களை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வருகிறார் .இவர் தனியாக எடுத்த புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலாய்க்கவும் செய்கிறார்கள். இதற்கு முன்பு இவர் எத்தனையோ போட்ட சூடு நடத்தினாலும் அதில் கலக்கலாக தான் இருப்பார். ஆனால் இப்போது திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ஹிந்தி நடிகைகள் போல இருக்கிறார்கள் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

ஒன்சைட் சாரி கட்டி
அந்த அளவிற்கு சிவப்பு கலர் புடவையில் அதுவும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுக்கொண்டு ஒன் சைடு சாரி இரக்கம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். அதைப்பார்த்து என்ன ஆச்சு திடீரென்று திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சி கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது. கல்யாணம் முடிந்து ஒரு வாரத்துக்குள் இப்படியா என்றும் கலாய்க்கிறார்கள்.

காதல் வரை
இவர் முதன்முதலில் அறிமுகமான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்திருந்தார். இதற்கு முன்பு அந்த கேரக்டரில் பவானிசங்கர் நடித்திருந்தாலும் அவரது இடத்தில் அவருக்கு பதிலாக நன்றாகவே அவரது இடத்தையும் பிடித்து விட்டார். முதலில் இவரை பார்த்து பலர் ரசிகர்களும் விழுந்து விட்டனர் அந்த அளவிற்கு அழகால் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.

கலக்கல் வில்லி
அதற்கு அடுத்ததாக தான் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய உயரத்திற்கும் உடலுக்கும் தகுந்த மாதிரி கேரக்டர் அமைந்திருப்பதால் வில்லத்தனத்தை முகத்தில் காட்டி அவரது நெருங்கிய தோழியான நட்சத்திரா வை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார் .இவர் என்னதான் வில்லத்தனத்தை காட்டினாலும் இவரது ரசிகர்கள் இவரை கொஞ்சி தான் வருகிறார்கள்.

ரசிக்க வைக்கும் வில்லத்தனம்
பல பெண் ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரது ஆண் ரசிகர்கள் இவரது வில்லத்தனத்தையும் ரசிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவருக்கு ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு பெரிய வில்லியாக வரவேண்டும் என்றுதான் ஆசையாம். ஆனாலும் திருமணம் முடிந்த கையோடு இந்த மாதிரி இறங்கக் கூடாது என்று இவருக்கு பல ரசிகர்களும் அட்வைஸ் பண்ணி வருகிறார்கள்.

கண்ணுக்கு கவர்ச்சி
காஜல் அகர்வால் போன்ற பலருக்கும் திருமணம் முடிந்து இருந்தாலும் அவர்கள் ஹனிமூன் போட்டோக்களை போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி கொண்டிருக்கும் போது இவர் மட்டும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார் அதுவும் சிவப்பு கலர் சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வேற லெவல் தான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications