சத்யா நான் என் கையால..... சாப்பிடல.. இதுதாங்க நேற்றைய சந்திரகுமாரியின் 'சப்' கதை!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் கதை வேற வேற திசை நோக்கி பயணிக்குது. அஞ்சலியா நடிச்சுருக்கும் நடிகை பானு சூப்பரா இருக்காங்க.
சத்யா..சத்யான்னு கூப்பிட்டு கிட்டே அஞ்சலி வர்றா. சத்யா என்னங்க அஞ்சலின்னு கேட்க, சாப்பிடலாம் வாங்கன்னு கூப்பிட தென்னந்தோப்பில் டிராக்டர் வேலை செய்த கணக்கு, தேங்காய் புடுங்கின கணக்குன்னு எல்லாத்தையும் அஞ்சலி கிட்ட சொல்றான் சத்யா

சரி சாப்பிட வாங்க சத்யான்னு கூப்பிடறா அஞ்சலி. இந்த வீட்டுல எது கிடைக்குதோ இல்லையோ நேர நேரத்துக்கு சாப்பாடு கிடைச்சுடுதுங்க அஞ்சலின்னு சொல்றான்.
அது சரிதான்.. உழைக்கறவங்களுக்கு சாப்பாடு இல்லேன்னா எப்படி...நானே என் கையால உங்களுக்காக சமைச்சது.. சாப்பிட வாங்கன்னு சொல்றா. அஞ்சலி நீங்க சமைச்சீங்களா... நான் இன்னிக்கு மவுன விரம்தம்ங்க...என்னை விட்டுடுங்கன்னு சொல்றான்.

மவுன விரதம்னு பொய் சொல்லி, சாப்பிடாம உங்களால இருக்க முடியும்.. பேசாம இருப்பீங்களான்னு கேட்கறா.. உங்க சமையல் சாப்பிடறதுக்கு அப்படியே இருக்கலாங்கன்னு சொல்றான் சத்யா.
இப்போ நீங்க சாப்பிடலே.. கத்தியால குத்திருவேன்னு மிரட்டறா. என்னங்க இது வன்முறையில் இறங்கிட்டீங்க. சரி வாங்க.. நீங்க சமைச்சதை இந்த எலி கிலின்னு குடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களே அதை செய்திருக்க கூடாதான்னு கேட்கறான்...சத்யா.. சத்தியமா உங்களுக்காக நானே சமைச்சேன்.. நான் சாப்பிட்டு டெஸ்ட் பன்னிட்டுத்தான் உங்களை சாப்பிட சொல்றேன்னு சொல்றா.
அவன் சாப்பிட ஆரம்பிக்க, அம்மா சந்திராகிட்டேருந்து போன் வருது. அம்மா அம்மான்னு அஞ்சலி பேச, அப்பா வந்து அதை கேட்டுடறார்.அப்போ அம்மா இருக்க இடம் உனக்கும் இந்த வெட்டி பயலுக்கும் தெரியும். என்னையும் ருத்ராவையும் பிரிக்கத்தான் அம்மாவை காணோம்னு சதி செய்யறீங்களான்னு அப்பா கேட்க, போங்க போயி ருத்ராகிட்ட அம்மா உயிரோட இருக்காங்கன்னு சொல்லுங்க. அவ, அம்மாவை கொல்ல சதி செய்யட்டும்னு அஞ்சலி அழுதுகிட்டே சொல்றா.
சந்திராவின் புருஷன் தனது இரண்டாவது மனைவியாகத் துடிக்கும் ருத்ராவிடம் சாரி, உன்னை தப்பா நினைச்சுட்டேன்னு சொல்றான்.
இதுதான் நேத்தைய சந்திரகுமாரியின் 'சப்' கதை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications