சந்திராவுக்கு கை நீளமாத்தான் போச்சு...வயசு வந்த பொண்ணை இப்படியா....?
சென்னை: சன் டியின் சந்திரகுமாரி சீரியல் நேரத்தில்தான் தமிழ்செல்வி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆனா,அதுக்குள்ளே சந்திரகுமாரி சீரியல் முடிஞ்சுருமா இல்லை நேரம் மாற்றமான்னு ஒரு அறிவிப்பும் இல்லை.
இந்த நேரத்தில்தான் சந்திராவின் பொண்ணு அஞ்சலிக்கு கல்யாணம் முடிவாகுது. சொந்தத்துல அண்ணன் பையன் ஆதவன் இருக்க, அதே போல இன்னொரு சொந்தமான சத்யாவை பேசி முடிக்கறாங்க.

ருத்ராவும்
அஞ்சலியின் தாய் மாமா பையன் ஆதவனும், அஞ்சலியின் அப்பாவுடன் குடும்பம் நடத்தும் ருத்ராவும் கல்யாணத்தை கெடுக்க நினைக்கறாங்க. ஆதவன்,கடைசி நேரத்தில் அஞ்சலி கழுத்தில் எப்படியாவது தாலிகட்டிடணும்னு கணக்கு போடறான்.

அப்பாவுக்கு
அஞ்சலி தன் அப்பா நீலகண்டனுக்குதான் முதல் பத்திரிகையை வைக்கணும்னு சீதா,அஞ்சலிக்கு சொல்லித் தர்றா.முதல் பத்திரிகையை கோயிலில் வச்சு பூஜை செய்யும்போது,அஞ்சலியின் அப்பா மறைஞ்சு நின்னு பார்க்கறார்.

அஞ்சலியும் சத்யாவும்
அம்மா வருவதற்குள் அப்பாவின் கையில் முதல் பத்திரிகையயை கொடுத்து ஆசிர்வாதம் வாங்க,சந்திரா அதைப்பார்த்து பத்திரிகையை வெடுக்கென்று நீலகண்டன் கையில் இருந்து பிடுங்கிடறா.

பொளேர் சீதாவுக்கு
அஞ்சலியை சந்திரா திட்டிக்கொண்டே இருக்க,அஞ்சலியும் அம்மாவை எதிர்த்து பேசறா. இதை எல்லாம் பார்த்த, அந்த வீட்டுக்கு அடைக்கலமா வந்திருந்த சீதா,அ ம்மா என்னை மன்னிச்சுருங்க..அஞ்சலிக்கு முதல் பத்திரிகையை அப்பாவுக்கு கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தது நான்தான்னு சொல்றா.பளார் பளார்னு அறை கொடுக்கறாங்க சந்திரா சீதாவின் கன்னத்தில்.

அம்மா இல்லாத பொண்ணு
சத்யாவின் பாட்டி சொல்றாங்க...சந்திரா..நீ வயசு பெண்ணை கை நீட்டி அடிச்சது தப்பு. அம்மா இல்லாத பொண்ணு..அதை நினைச்சு பார்க்காம தப்பு பண்றே.. உனக்கு இவ்ளோ கோவம் ஆகாதுன்னு பாட்டி சொல்றாங்க.

அஞ்சலியை அடிப்பீங்களா?
தனது உயிரை காப்பாத்தினவரோட பெண்ணை அடைக்கலம் தர்றேன்னு அழைச்சுட்டு வந்து இதோட ரெண்டு முறை இப்படி சந்திரா அடிச்சுட்டாங்க... இதே அவங்க பெண்ணை அடிக்க வேண்டியதுதானே...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications