அதை பண்ண போய்.. தர்ஷாவுக்கு இப்படி ஒரு பேரு வந்துடுச்சே !

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன நம்புனவங்களுக்கு நான் நல்லதுதான் பண்ணுனேன். ஆனா எனக்கு இப்படி ஒரு பேரு கிடைத்துவிட்டது என கதறி அழுதபடி தர்ஷா குப்தா வெளியிட்ட லைவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் உலுக்கொ உடலுக்கு என உலுக்கி வருகிறது.

எப்போதுமே சிரித்த முகமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

தற்போது கண்ணீரும் கம்பலையுமாக வெளியிட்ட வீடியோஸ்கள் வைரலாகி வந்த நிலையில் அழுகைக்கான காரணத்தை நான் அப்படி பண்ணி இருக்க கூடாது என விளக்கியுள்ளார்.

அழுகை வீடியோ

அழுகை வீடியோ

அடுத்த நாள் அவர் பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதுவரைக்கும் இப்படி ஒரு நிலையில் இவரைப் பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக இவர் கண்ணீரோடு வெளியிட்ட வீடியோவைப் பார்த்ததும் பதறிப் போய் அவருக்கு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர் . சீரியலில் பலரை கண்களாலே மிரட்டி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் தர்ஷா வா இப்படி அழுகிறார் என சில நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

ரியல்

ரியல்

இவரை கலாய்த்தாலும் அது நடிப்பு இது ரியல் என இவருடைய உண்மையான மனதினை பற்றி இவருடைய ரசிகர்களும் பதிலுக்கு கமெண்ட்களை போட்டு வருகின்றனர். தற்போது செந்தூரப்பூவே சீரியலில் வில்லத்தனத்தால் மிரட்டி கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இந்த சமூக வலைத்தளங்களில் வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருக்கிறார் .

சொக்கிப் போயிட்டாங்களே

சொக்கிப் போயிட்டாங்களே

தர்ஷா எனும் பெயரைக் கேட்டதுமே ரசிகர்கள் சொக்கிப் போகும் அளவில்தான் இவர் இருந்து வருகிறார் .இவருடைய பெயரை பெயரினால் இவருக்கு தற்போது கூட பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகிக்கொண்டே இருக்கிறது .இருந்தாலும் தன்னுடைய பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு சிரித்த முகத்தையும் தான் இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.

ஒரே அழுகை

ஒரே அழுகை

ஆனாலும் இவரைப்பற்றிய மீம்ஸ்களை இவர் கேள்விப்பட்டதும் கதறி அழுதபடி நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல என விளக்கம் கொடுத்திருக்கிறார். சினிமா துறையாக இருந்தாலும் சரி எந்த துறையாக இருந்தாலும் சரி சில நேரங்களில் சிலரை பற்றி வதந்திகள் பரவி கொண்டுதான் இருக்கும். அந்த மாதிரிதான் லேட்டஸ்டாக தர்ஷாவைப்பற்றி வதந்திகள் கிளம்பி வருகிறது .

விளம்பரம்

விளம்பரம்

அதுவும் அவர் சிறு வனிகர்களிடம் பொருள்களை இலவசமாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு விளம்பரம் செய்யாமல் இருந்து வருகிறார் என பல பேர் குற்றம் சாட்டி இருக்கின்றனர். அதனை தெரிந்து கொள்வதற்குத்தான் அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் .அதில் நான் சிறிய வனிகர்களிடம் எந்த பொருளுக்கும் தரச்சொல்லி கேட்டதே கிடையாது .அவர்கள் தான் தங்களுடைய பொருள்களுக்கு விளம்பர மாடலாக என்னை அணுகி இருக்கிறார்கள் .

அவர்கள் கேட்பதில்லை

அவர்கள் கேட்பதில்லை

அதுவும் எந்த பணமும் இல்லாமல் நானாகத்தான் அவர்களுக்கு இலவசமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் .ஆனால் தற்போது என்னிடம் நேரம் கிடைக்கவில்லை அதனால் தான் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கூட என்னால் தொடர்ந்து போஸ்ட் போட முடியவில்லை. இதற்கு முன்பாக நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன் .அப்போது கூட இந்த மாதிரி ஒரு நிலை வந்தது இல்லை .ஆனால் தற்போது நான் ரொம்பவே பிஸியாக இருப்பதால் என்னால் இது மாதிரி பண்ண முடியவில்லை .

கட்டாயப்படுத்துகின்றனர்

கட்டாயப்படுத்துகின்றனர்

ஆனாலும் சில சிறு நிறுவனங்கள் பொருட்களை எனக்கு அனுப்பிவிட்டு பேமெண்ட் வாங்காமல் நான் நடித்தாலும் இந்த நேரத்தில் கண்டிப்பாக போஸ்ட் போட்டு விடுங்கள் என என்னை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இது எனக்கு செட்டாகாது இந்த மாதிரி நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக நான் இலவசமாகவே செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் .ஆனால் என்னைப் பற்றி பொருளை வாங்கிக்கொண்டு விளம்பர படுத்தாமல் ஏமாற்றும் ஏமாற்று பேர்வழி என கமெண்ட் போட்டிருக்கிறார்கள் .

மனசு கஷ்டப்படுது

மனசு கஷ்டப்படுது

இதனை கேள்விப்பட்டதும் மனசு ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டது என கண்ணீரோடு கூறியிருந்தார் .அதனை பார்த்து பலர் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் .அதனால் மீண்டும் அவர் லைவில் வீடியோவில் தான் அழக்கூடாது என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அன்றைக்கு அழுது விட்டேன் என அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் . இந்த வீடியோக்களை பார்த்தது காண்டான தர்ஷாவின் ரசிகர்கள் கமெண்டுகளால் ஆறுதல் கூறி வருகின்றனர் .

எப்பவும் சிரிச்ச முகமாச்சே

எப்பவும் சிரிச்ச முகமாச்சே

இதுவரைக்கும் எப்போதுமே சிரித்த முகமாக லைவில் பார்த்து ரசித்த ரசிகர்கள் முதல் முறையாக கண்ணீரோடு பார்த்ததும் கண் கலங்கி போய் கமெண்ட்களை போட்டு வருகின்றனர் .அதுவுமில்லாமல் உங்களுக்கு இந்த மாதிரி அழுதால் செட்டாகாது என கூறியும் வருகின்றனர் .அதற்கும் இனி இந்த மாதிரி நான் பண்ணமாட்டேன் எப்போதுமே நான் ஸ்டாங்காக தான் இருக்கிறேன் கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது பண்ண போறேன் என்னை கேவலப்படுத்தி விட்டார்கள் என விரக்தியோடு கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+