கனகா போட்டோ கசிந்தது எப்படி? போஸ் தந்தாரா நடிகை கனகா? பார்த்ததுமே உருகிய ரசிகர்கள்.. அன்பு கோரிக்கை
சென்னை: கனகா குறித்த தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், அந்த போட்டோ எப்படி வெளியானது என்பது குறித்த தகவல் ஒன்றும் தற்போது கசிந்துள்ளது.. இதையடுத்து, நெட்டிசன்கள் உரிமையுடன், கனகாவுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்து வருகிறார்கள்,. அது என்ன?
"கனகாவுக்கு எல்லாமே அவங்கம்மாதான்.. அப்பா விட்டுட்டு போயிட்டார்... அம்மா போனதுக்கப்புறம், இனி நமக்கு என்ன இருக்குன்னு நினைச்சாங்க.. ஒருநாள் டப்பிங் எலக்ஷன் நடந்தது.. அதுக்காக போயிருந்தேன். அப்போ ஒருத்தர் வந்து, "சார் உங்கள கனகா மேடம் கூப்பிடுறாங்க" ன்னு சொன்னார்.

ராமராஜன்: கனகாவா? எங்கே எங்கேன்னு நான் கேட்டேன்.. அதை கனகா கிட்டயே போய் கேட்டுட்டு இருக்கேன்..சார்.. நான் தான் கனகான்னு சொல்லுச்சு.. என்னம்மா வெள்ளைக்கார பொண்ணு மாதிரி இருக்கேன்னு கேட்டேன்... சிவப்பா, கொஞ்சம் எடை போட்டு, முடியெல்லாம் பார்க்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு..
பாரதிராஜாவின் சொந்த படம் மருதாணியில் கனகா நடிக்க வேண்டியது.. ஆனால், கனகா மறுத்துட்டார்.. அதுக்கப்புறம்தான் தான் கங்கை அமரன் பார்த்தார்.. கரகாட்டக்காரன் படத்தில் அவரை புக் பண்ணோம்.. அப்போ அவர் பேரு "கனகமகாலட்சுமி"..
பேர் வெச்சேன்: நான் அமர் அண்ணன்கிட்ட கேட்டேன், என்னன்னே, இவ்வளவு பெரிசா பேரு இருக்கேன்னு.. அப்பறம்தான் கனகான்னு பேர் வெச்சிடுங்கன்னு நான்தான் சொன்னேன். அவங்கம்மா இறந்தப்புறம், அதுக்கு ஒரு மாதிரி இருந்தது.. ஏதோ படத்தில நடிச்சுட்டு போயிட்டு இருந்துச்சு. அதுக்கு அப்புறம் நானும் பார்க்கல" என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி கடந்த மாதம் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இந்த ராமராஜனின் பேட்டி வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேபோல, குட்டி பத்மினி சில மாதங்களுக்கு முன்பு கனகாவை நேரில் சந்தித்து பேசியதும், அந்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.. இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பை தந்திருந்தார்கள். காரணம், கனகா யாரையுமே சந்திக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில், குட்டி பத்மினி மட்டும்தான் கனகாவை சந்தித்து பேசியிருந்தார்.
நெட்டிசன்கள்: அதுகூட பேட்டி மாதிரி இல்லாமல், டீ சாப்பிட்டுக் கொண்டே இருவரும் கேஷூவலாக சந்தித்து பேசியிருந்தார்.. அதை இப்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
காதல் தோல்வியா? நம்பியவர்கள் செய்த துரோகமா? சுற்றி இருந்தவர்களால் கிடைத்த ஏமாற்றமா? வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களா? என்று தெரியவில்லை.. கனகா ஒதுங்கியே வாழ்ந்து வருகிறார்.
கோரிக்கை: இப்போது திடீரென கனகாவின் தற்போதைய போட்டோ வெளியாகியிருக்கிறது.. சமீபத்தில் மால் ஒன்றுக்கு சென்றிருந்த ரசிகர் ஒருவர், கனகாவை அங்கு பார்த்திருக்கிறார்.. நீண்ட நேரத்துக்கு பிறகு, கனகாவின் அனுமதியை கஷ்டப்பட்டு வாங்கி, அதற்கு பிறகே இந்த போட்டோவையும் எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டாராம். கெஞ்சி கூத்தாடி கனகாவின்அனுமதியை பெற்று போட்டோ பதிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், குட்டி பத்மினி, கனகாவை சந்தித்து இந்த குறுகிய மாதங்களுக்குள் இவ்வளவு வித்தியாசமா? என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், மீண்டும் கனகா சினிமாவில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், இனியும் ரசிகர்களை விட்டு ஒதுங்கி இருக்கக்கூடாது என்றும் அன்பு கலந்த கோரிக்கைகளை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications