இயக்குனர் பாக்யராஜ் மகள் இருக்க மகன் கல்யாணத்தை முடித்தது ஏன்? பரவும் அவரே கைப்பட எழுதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் பாக்யராஜ் அவருடைய மகன் சாந்தனு திருமணத்தின்போது தன்னுடைய மகன் காதலிக்கும் விஷயத்தை தானே கைப்பட எழுதி அனைவருக்கும் அறிவித்து இருந்த நிலையில் அந்த அறிவிப்பு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்யராஜ் செய்த செயலை பாராட்டி பாக்யராஜ் கைப்பட எழுதிய கடிதத்தை நடிகர் கயல் தேவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Director bhagyaraj announcement about son wedding letter

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகருமான பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இவர்களுடைய மகன் தான் சாந்தனு. இவர் 1998 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு விளக்கு, கண்டேன், அம்மாவின் கைபேசி, சித்து பிளஸ் 2, கதை, திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக என்று பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் சாந்தனுவின் திறமைக்கு ஏற்ப பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தன்னுடைய வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் சாந்தனு சமீபத்தில் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதோடு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் சாந்தனு நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சாந்தனு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி டிவி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் கீர்த்தியை அனைவரும் கீகீ என்று தான் செல்லமாக கூப்பிடுவார்கள். சாந்தனு மற்றும் கீகீ இருவரும் காதலித்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

பெரும்பாலும் நடிகர்கள் அல்லது பிரபலங்கள் காதலித்தாலே அவர்களுடைய காதல் விஷயங்கள் கிசுகிசுப்பாக முதலில் பேசப்பட்டு பிறகு தான் வெளியே தெரிய வரும். ஆனால் சாந்தனு காதலை வெளி உலகத்திற்கு அறிவித்தது அவருடைய அப்பா பாக்யராஜ் தான். அதுவும் தன்னுடைய மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய விஷயத்தை கைப்பட எழுதி அறிவித்திருந்தார்.

அதாவது 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் தான் பாக்கியராஜ் தன்னுடைய மகனின் காதல் குறித்து கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதனை அனைத்து மீடியாக்களுக்கும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்தப் பதிவை இப்போது பகிர்ந்துள்ள நடிகர் "கயல் தேவராஜ்", இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தம்பதிகளில் மகன் சாந்தனு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கீர்த்தி என்பவரை உயிருக்கு உயிராக காதலித்தார்.

Director bhagyaraj announcement about son wedding letter

இந்த விஷயம் பாக்யராஜுக்கு தெரிந்ததும் அவர் காதல் திருமணம் செய்தவர் என்பதால் மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டார். அதை கைப்பட ஒரு கடிதத்தில் எழுதி மீடியாவுக்கு அனுப்பி வைத்தார். பாக்கியராஜ் "பாக்யா" பத்திரிகையின் ஆசிரியர் என்பதால் மீடியாவுக்கு ஒரு செய்தியை எப்படி தெரிவிக்க வேண்டும் என்ற பண்பு தெரிந்து இருந்தது என்று பாக்யராஜுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் என்று நடிகர் கயல் தேவராஜ் பகிர்ந்திருக்கிறார்.

இந்த பதிவு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இயக்குனர் பாக்கியராஜ் அவருடைய மகள் இருக்கும்போது மகனுக்கு திருமணம் செய்து வைத்து இருந்தாரே ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பலர் பாக்யராஜின் செயல் குறித்து பாராட்டியும் பெறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+