இதற்கெல்லாமா விளம்பரம் கொடுப்பாங்க? அதுவும் போட்டோவுடன்! என்ன மம்முட்டி சார் நீங்க?
சென்னை: மம்முட்டி வக்கீலுக்கு படித்தவர், ஆனாலும் சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலால் அவர் நடிக்க வந்தார். தன் போட்டோவை போட்டு பத்திரிகைகளில் விளம்பரம் என்ன செய்திருக்கிறார் பாருங்க. எத்தனை சுவாரஸ்யம்?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: மம்முட்டி என்கிற மகா கலைஞன்....
மம்முட்டி ஒரு ஆள் மட்டுமே இந்த கேரக்டரையெல்லாம் செய்ய முடியும். கேரியரின் தொடக்க காலத்தில் பாபு நம்பூதிரி என்கிற நடிகனை புறந்தள்ளி மம்முட்டி அந்தப்படத்தில் நாயகனானார்.

மம்முட்டியின் ஸ்பெஷல் என்னவென்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு உயிரைக்கொடுப்பது. அவரின் சினிமா பக்தி ஆழமானது. வக்கீலுக்கு படித்தாலும் சினிமா ஆசை அவரை விடவில்லை. தன் போட்டோ போட்டு பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து வாய்ப்பு தேடியவர் மம்முட்டி. எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும் மம்முட்டியின் கேரக்டர்கள்.
அடியொழுக்குகள் என்கிற படத்தில் மம்முட்டி ஒரு ரௌடி. சிறையிலிருந்து திரும்பி வரும் ரௌடி. இந்த கதாப்பாத்திரம் எப்போதும் கண்கள் சிவந்தே இருக்க வேண்டும். மம்முட்டி ஏதேதோ இலைகளை பறித்து அறைத்து தினமும் கண்களில் ஊற்றிக்கொள்வாராம் உடனே கண்கள் சிவப்பாகி விடும். பர்ஃபெக்ஷனுக்காக கண் உறுத்தல்களை, எரிச்சல்களை பொறுத்துக் கொண்டு அடியொழுக்குகளில் நடித்தார். படம் செம ஹிட்.
தமிழில் வண்ணக் கனவுகள் என பாலச்சந்தரே ரீமேக் செய்தார். அடியொழுக்குகள் திரையில் தனித்துவத்தை மம்முட்டிக்கு விதைத்தது. முதல் கேரள மாநில விருதும். பாலுமகேந்திராவின் யாத்ரா படத்துக்காக தன் முடியை தியாகம் செய்த மம்முட்டிக்கு பின் அமைந்த படங்களெல்லாம் வெற்றி தான். நிறக்கூட்டு பெரிய வெற்றியை பெற்று தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டது.
போலீஸ் ஆபிசராக நடித்த 'ஆவநாழி' ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. இந்தப்படத்தை தொடர்ந்தே போலீஸ் படங்களின் கதைகள் ஒரே ஸ்டைலில் அமைக்கப்பட்டன. ஆவநாழியின் இன்ஸ்பெக்டர் பல்ராம் கேரக்டரின் வீச்சு தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் சத்யராஜிடம் இல்லை.
மீண்டும் தொய்வடைந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது நியூடெல்லி. நியூடெல்லி தமிழ்நாட்டில் மலையாளமொழியிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு சென்னை சஃபையர் தியேட்டரில் ஒரு வருடம் ஓடியது. ஊரே மனநோயாளி என நினைக்கும் 'தனியாவர்த்தனம்' மம்முட்டியின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது.
பின் அவரது 'சாம்ராஜ்ஜியம்' தான். சிபிஜ டைரிக்குறிப்பு சேதுராமஅய்யர் ஒரு ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் போல புகழடைந்தது. 1921 படத்தில் கிலாபத் இயக்க கலவரம் பற்றி எரியும் போது காதர் என்கிற மம்முட்டி பாத்திரம், சங்கம் படத்தில் சிறிய பையன்களின் காசுள்ள தலைவன், ஆகஸ்ட் 1 படத்தின் டி.எஸ்.பி பெருமாள், மிருகயா படத்தின் புலி வேட்டைக்கு வரும் வாருண்ணி, நாயர் ஸாப் படத்தில் வரும் கேப்டன் ரவீந்திரன் நாயர் என ஆக்ஷனில் கலக்கிய பாத்திரங்கள்.
ஆக்ஷன் மட்டுமல்ல தனக்கு காமெடியும் வருமென லவ்வர் பாயாக உள்ள சரிதாவின் கணவன் குட்டேட்டன், போலீசுக்கு சவால் விடும் திருடன் களிக்களம் படத்தில், இரட்டை வேடத்தில் பரம்பர, பின் வருவதை முன்பே சொல்லும் சூரிய நாராயண அய்யராக அய்யர் தி கிரேட், தாதா ரோலில் சாம்ராஜ்ஜியம், அரசியல்வாதியாக நயம் வ்யத்தமாக்குன்னு, குடும்ப தலைவனாக வாத்சல்யம்..இப்படி எல்லா கேரக்டர்களிலும் வெளுத்து வாங்கினார் மம்முட்டி.
கமர்சியல் படங்களல்லாது ஆர்ட் படங்களில் காலடி எடுத்து வைத்து மதிலுகள், விதேயன், பொந்தன் மாடா என பாத்திரப்படைப்புகளில் வித்தியாசத்தை தந்தவர். மம்முட்டியிடம் என்ன ஸ்பெஷல்னா அறிவில்லாத வேலைக்காரன் மாடாவாகவும் நடிப்பார், அடுத்தவர் மனைவியை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ளும் ஊர்த்தலைவன் பட்டேலராகவும் வருவார், மூன்று குழந்தைகளின் தந்தையாகவும் வருவார், கலெக்டராகவும் வருவார். எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத நடிகன்.
வடக்கன்வீர கதா, படயோட்டம், பழஸ்ஸி ராஜா என ராஜா கதாபாத்திரங்களிலும் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மலையாளம் அல்லாது ஹிந்தி, தெலுங்கில் நடித்தாலும் தமிழில் நல்ல பாத்திரங்கள் அவருக்கு கிடைத்தன. மறுமலர்ச்சி ராசுப்படையாட்ச்சி பாத்திரம் வேறு நடிகரை கற்பனையே செய்ய முடியாது. வரலாற்று படங்களான அம்பேத்கர், ஓய்.எஸ்.ஆர் போன்ற பாத்திரங்களிலும் இணங்கிப்போவது அழகு.
ராஜமாணிக்யம் படத்தில் திருவனந்தபுரம் ஸ்லாங் சொல்லிக்கொடுக்க வந்த சுராஜ் வெஞ்ஞாரமூடுவின் திறமை அறிந்து காமெடி பாத்திரங்கள் கொடுத்தும், மறுமலர்ச்சி படத்தில் மணிக்கு தமிழில் சிறிய பாத்திரம் வாங்கிக்கொடுத்து கலாபவன் மணியை வளர்த்து விட்டதும் மம்முட்டியின் மன அழகு. சக போட்டியாளர் மோகன்லால் வளர்ந்து எதிரே நிற்கும் போது அவருடைய படங்களான காந்தி நகர் 2nd ஸ்ட்ரீட், No20 மதராஸ் மெயில் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்ததில் காட்டிய தைரியம்...
எத்தனை நடிகைகளோடு நடித்தாலும் காஸிப்புகளில் சிக்காது தான் உண்டு, தன் வேலை உண்டு என இலக்கியம் சார்ந்து வாசிப்பு பழக்கத்தை வைத்திருக்கும், வாசித்ததை விவாதிக்கும் பழக்கமுள்ள நடிகர். மகனே மம்முட்டிக்கு போட்டியாளனாக வரும் போது மம்முட்டி போட்டிக்கு நிற்பார் போல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications