"பழைய பஞ்சாங்கத்தை" தூக்கி எறிந்த மனோபாலாவின் மனைவி.. கணவர் இறந்த ஒரே வாரத்தில் நெகிழ வைத்த உஷா!
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உயிரிழந்த ஒரே வாரத்தில் குடும்ப வழக்கத்தை தகர்த்தெறிந்து அவருடைய மனைவி செய்த செயல் நெகிழ வைக்கிறது. மனோபாலாவின் மனைவி உஷா மகாதேவனை பாராட்டி வருகிறார்கள்.
மனோபாலா கோவை சூலூரை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே சினிமா மீது தீராத காதலால் பெற்றோரிடம் படிப்பதாக கூறிவிட்டு சென்னைக்கு வந்திருந்தார். இவருக்கு பெற்றோர் அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு படிக்காமல் படம் பார்த்தார்.

சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகிலும் பல படத்தை பார்த்த அவர் தானும் இயக்குநராக வேண்டும் என விரும்பினார். இதையடுத்து மனோபாலாவுக்கு ஒரு முறை கமல்ஹாசனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சில நிமிடங்கள் பேசிய நிலையில் நண்பர்களாகிவிட்டனர்.
பின்னர் மனோபாலாவின் இயக்குநர் கனவுக்கு உயிர் கொடுக்க விரும்பிய கமல்ஹாசன் அவரை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தி உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள சொன்னார். புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமாகிய மனோபாலா தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஆகாய கங்கை எனும் படத்தை இயக்கினார். இந்த படம் பொருளாதார ரீதியில் தோல்வியை தந்தது.
இதையடுத்து 3 ஆண்டுகள் கழித்து பிள்ளை நிலா படத்தை எடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். அது போல் சீரியல்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் காமெடி, குணசித்திர நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்தார்.

நெருங்கிய நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பதில் மனோபாலா வல்லவராம். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஞ்சியோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் மனோபாலா. இந்த நிலையில் 15 நாட்களாக மனோபாலா கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.
இதனால் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் கடந்த 3 ஆம் தேதி காலமானார். அவருக்கு 69 வயது. இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெரிய அளவில் பாதித்தது. இவருக்கு பலர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். அவருக்கு ஹரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.
தனது தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஹரீஷ் தனது மனைவி பிரியாவுடன் சென்னை வந்தார். அவர்தான் கடைசி வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். மனோபாலாவின் இறப்பால் ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராதிகாவும் மனோபாலாவும் நண்பர்கள். இறப்பதற்கு முன்பு கூட மனோபாலாவுடன் போனில் பேசியதாக ராதிகா கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
மனோபாலாவின் குடும்ப வழக்கபடி காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த ஒரு விஷயத்தை மாற்றியுள்ளார் அவருடைய மனைவி உஷா. பொதுவாக மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர்களுடைய உடைகள், உடைமைகளை தீயிட்டு கொளுத்திவிடுவார்களாம். ஆனால் தனது கணவரின் உடைகளை தீயிட்டு கொளுத்த விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா மகாதேவன் அவற்றை ஆதரவற்றோர் இல்லத்திறகு கொடுத்து அனுப்பிவிட்டாராம். கணவரின் நினைவாக ஒரேஒரு வாட்ச்சை மட்டும் உஷா வைத்துள்ளாராம். இவரது செயலை பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications