Kaatrin Mozhi Serial: எழுதும் ஸ்லேட்டை அடுப்பில் வச்சு எரிப்பதா?
சென்னை: நல்லா வாழ்ந்து முடித்தவங்க வீட்டுப் பெரியவங்களா மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது. இவர் பழங்கால பெண்ணாக இருந்து ஒரு மாமியாராகவும் கோலோச்சும் போதுதான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாகுது.
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் முதலில் ஒரு பெண் குழந்தை.இரண்டாவது ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று புருஷனும் மாமியாரும் ஆசைப்படுகிறார்கள். என்ன காரணமோ, இரண்டாவதாக வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று எப்படி தெரிந்ததோ அதை சீரியலில் காண்பிக்கவில்லை.
நிறைமாதமாக வயிற்றில் இருக்கும் அந்த குழந்தை செத்து பிறப்பது போல மருந்து கொடுத்து விடுகிறார் மாமியார். ஆனால், குழந்தை ஆரோக்கியத்துடன் பெண் குழந்தையாக பிறந்து விடுகிறது.

குழந்தையை குப்பைத் தொட்டியில்
பிரசவ வலி எடுத்தும், மாமியாரும், கணவரும் உதவாமல் போக, தானே பிரசவ ஆஸ்பத்திரிக்கு போயி குழந்தை பெத்து மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்கையில் குழந்தையை காணோம். அதற்குள் மாமியார் வந்து அடியேய் உன் குழந்தை செத்துப்போச்சு வீட்டுக்கு வான்னு அழைச்சுட்டு போறாங்க.

அந்த குழந்தையை
குப்பைத் தொட்டி அருகே இருந்த அந்த குழந்தையை ஒரு பணக்கார தம்பதி தூக்கிக் கொண்டு நிற்க, போலீஸ் வருகிறது. போலீசிடம் மாட்டிக்க கூடாதுன்னு இது எங்க குழந்தைதான்.. தேடிகிட்டு இருக்கோம்னு பொய் சொல்றாங்க மாமியார். பணக்கார பெண்ணின் கையில் குழந்தை இருக்கும் போதே அழுது ஆனால், சத்தம் வரலை.

டாக்டர் சர்வ சாதாரணமாக
குழந்தை அழுது ஆனால், சத்தம் வர மாட்டேங்குதேன்னு மற்றவர்கள் கேட்க, குழந்தையால பேச முடியாதுன்னு ஒரு டாக்டர் அசால்ட்டா சொல்லிட்டு போறாங்க.காது கேட்குதா, ஏன் அழுதா சத்தம் வரவில்லை என்று ஒரு பரிசோதனையும் செய்யாமல் சொல்லிடறாங்க. மருந்தை குடுத்து என் குழந்தையை பேச முடியாம செய்துட்டீங்கன்னு சொல்லி அழறா பெற்ற தாய்.

அப்பாவுக்கும் பாட்டிக்கும்
அப்பாவுக்கும் பாட்டிக்கும் பிடிக்காமலே,அதுவும் அந்த குழந்தை முகத்தில் விழிதால் நல்லது நடக்காது என்ற அப்பா பாட்டியின் எண்ணத்தோடும் வளர்கிறாள் வாய் பேச முடியாத கண்மணி. இவளுக்கும் முன் அக்காவாக பெண் குழந்தை, இவளுக்குப்பின்னால் தம்பியாக ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

சீராட்டி பாராட்டி
இரண்டு பெண் பிள்ளைகளில் பெரியவளை படிக்கவாவது பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பையனை சீராட்டி பாராட்டி வளர்த்து கான்வென்டில் படிக்க வைக்கிறார்கள்.ஒரு நாள் நானும் பள்ளிக் கூடம் போறேன்னு அக்காவோடு எழுதும் சிலேட்டுடன் கண்மணி கிளம்ப, நீயும் போயிட்டா வீட்டு வேலையை யாரடி பார்க்கறது.. உனக்கு படிப்பு ஒரு கேடான்னு பாட்டி சிலேட்டை அடுப்பில் வச்சு எரிக்கறாங்க.
பார்க்கவே கஷ்டமா இருக்கு.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications