எதிர்நீச்சல்: ஜனனியை பற்றி விசாரிக்கும் ஜீவானந்தம்.. அதிர்ச்சியில் கௌதம்.. பரபரப்பின் "உச்சம்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஐஸ்வர்யா வயதுக்கு வந்ததை ஃபங்ஷன் எடுத்து கொண்டாட வேண்டும் என்று குணசேகரன் கூறியிருக்கும் நிலையில், ரேணுகா துணிச்சலாக கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் கௌதம் ஜீவானந்தத்தை சந்தித்திருக்கும் நிலையில் ஜீவானந்தம் தன்னுடைய பிஏவிடம் ஜனனியை பற்றி விசாரிக்கிறார்.

Ethirneechal serial 2023 July 5th promo update Jeevanandam inquiring about Janani

பட்டம்மாள் பேத்தி ஜனனி என்று சொன்னதும் கௌதம் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடக்க தொடங்கியிருக்கிறது. ரேணுகாவின் மகள் ஐஸ்வர்யா வயதுக்கு வந்ததை மூன்று நாட்களாக வீட்டில் சொல்லாமல் இருந்த நிலையில் அதை குறித்து குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.

Ethirneechal serial 2023 July 5th promo update Jeevanandam inquiring about Janani

அதுபோல ஐஸ்வர்யாவிற்கு சடங்கு வைக்க வேண்டும் என்று குணசேகரன் கூறியதற்கு, அதுவெல்லாம் எனக்கு வேண்டாம் என்று ஐஸ்வர்யா கூறிவிட்டார். இதனால் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக ரேணுகா குணசேகரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு ஞானம் எந்த இடத்திலும் தைரியமாக பேசவில்லையே என்று தன்னுடைய ஆதங்கத்தையும் ரேணுகா கொட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு டிரஸ் வாங்கிட்டு வரேன் என்று போன ஜனனியை குணசேகரன் வழக்கம்போல அவமானப்படுத்தினாலும், அதை கண்டு கொள்ளாமல் ஜனனி கடைக்குப் போயிருந்தார். அங்கு வந்த கெளதம் தன்னால் ஆதிரை கல்யாணத்தில் அருணுக்கு உதவ முடியாமல் போய்விட்டது. நான் அருணை தனியாக விட்டது தப்பு என்று ஜனனியிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

Ethirneechal serial 2023 July 5th promo update Jeevanandam inquiring about Janani

அதுபோல ஜனனியும் நானும் உண்மை என்ன நடந்தது என்று தெரியாமல் உன்னை திட்டிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் ஜனனியும் சக்தியும் அந்த இடத்தை விட்டு போன பிறகு கௌதம்க்கு ஜீவானந்தத்தின் பிஏவிடமிருந்து போன் வந்திருக்கிறது. அப்போது அவர் நீங்க இனி ஜீவானந்தத்தை பார்க்கலாம் வாங்க. அதே நேரத்தில் நீங்கள் கவனமாக வரணும் என்றும் சொல்ல அதற்கு கௌதம் சரி என்று கிளம்புகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தம் தன்னுடைய பிஏவிடம் கௌதம் இருக்கும்போதே அந்த பட்டமால் ஓட பேத்தி னு ஒரு பொண்ணு போன் பண்ணுமே அவங்க பெயர் என்ன என்று விசாரிக்கிறார். அதற்கு பிஏ அது ஜனனி என்று சொல்ல கௌதம் அதிர்ச்சி அடைகிறார்.

Ethirneechal serial 2023 July 5th promo update Jeevanandam inquiring about Janani

இந்த நிலையில் அதை தொடர்ந்து மறு வீட்டிற்கு வந்த கரிகாலன் நானும் மாமியார் வீட்டுக்கு மறுவீட்டுக்கு போறோமே என்று சொல்லி காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டேன். ஆனால் இங்க சாப்பாடு தராமல் பசியில உயிர் போகுது என்று கரிகாலன் புலம்பி கொண்டு இருக்க சமையலறையில் இருக்கும நந்தினி எல்லா பொம்பளைகளையும் அழ விட்டுட்டு இங்க விருந்தா கேக்குது விருந்து என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் வெளியில் குணசேகரன் தனது தம்பிகளோடு சேர் போட்டு கரிகாலனோடு பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு வெளியே போன ஜனனியும் சக்தியும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது குணசேகரன் வந்துட்டாங்கப்பா ராஜாவும், ராணியும் பேசாம நாம நாலு பேரும் இந்த வீட்டை காலி பண்ணிட்டு போயிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்தினி தான் சாதித்து விட்டதாக "எஸ்" என்று சந்தோஷம் அடைகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+