Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா போன சப்போர்ட்? சின்மயிக்காக ஓடிவந்த கங்கை அமரன்.. எம்ஆர் ராதா சொல்றதுதான் சரி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சின்மயிக்கு, கங்கை அமரன் ஆதரவு தெரிவித்து கருத்து கூறியிருந்ததன் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. அந்தவகையில், பல மூத்த பத்திரிகையாளர், கங்கை அமரன் குறித்த கருத்துக்கு தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, கங்கை அமரன், சின்மயி குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டிதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "அந்த பாடலாசிரியர் நல்ல கவிஞர், ஆனால் நல்ல மனிதர் கிடையாது" என்று எப்படி கங்கை அமரன் சொல்லலாம்?

Television Chinmayi Gangai Amaran

இன்னொரு கவிஞரை எப்படி "பிளேபாய்" என்று சொல்லலாம்? அதுவும் இத்தனை வருட கால நட்பில் இருந்துவிட்டு, இப்போது வந்து ஏன் சொல்ல வேண்டும்? கங்கை அமரன் பேசியதை பெரிதாக யாரும் எடுக்க தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

ஆரிய-திராவிட யுத்தம்

அதேபோல மற்றொரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த தமிழா தமிழா பாண்டியன், கங்கை அமரனை இப்படி சொல்ல வைத்ததே பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம்தான்.. அந்த பாடலாசிரியர் திமுகவுக்கு அதாவது கலைஞர் கருணாநிதிக்கு நெருங்கியவர்.. எனவே இந்த சண்டையே ஆரிய - திராவிட யுத்தமாகும்," என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், Jambavan TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "முதல்ல கங்கை அமரன் நல்ல மனிதரா தெரியவில்லை.. ஏழை எளியோருக்கு பணத்தை அள்ளி இறைத்தாரா என்றால், கிடையாது.. அண்ணன் தம்பி ஒருத்தருக்கும் உதவியதில்லை.. எனினும் இது அவர்களது தனிப்பட்ட விஷயம். அதை நாம் கேள்வி கேட்க முடியாது.

எப்ஐஆர் ஏன் லேட்டானது

சின்மயி விவகாரத்தை பொறுத்தவரை, ஒரு சம்பவம் நடந்தால், அதற்கு உடனேயே அப்போதே ரியாக்ட் செய்திருக்க வேண்டும்.. 10 வருடம் கழித்து, பாலியல் புகார்களை சொல்லி கொண்டிருந்தால் எப்படி? சம்பவம் நடந்து 8 வருடம் எப்ஐஆர் பதியப்பட்டால், அதனை நீதிமன்றமே அனுமதிக்காது.. இத்தனை காலம் என்ன செய்தீங்க? எப்ஐஆர் தாமதமாக காரணம் என்ன? என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பும்..

யார் பாதிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் சென்றிருக்க வேண்டிய இடம் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன்தான்.. அங்கிருந்துதான் சட்ட நகர்வுகள் நகரவேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

ராதாரவி மீதும் புகார்

சின்மயி பொறுத்தவரை, பாடலாசிரியர், ராதாரவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே 8 வருடம் முன்பே புகார்களை தந்துவிட்டார். அதற்கு பிறகு 8 வருடமாக அவர் சினிமாவில் பாடவும் இல்லை.. இப்போது தக் லைஃப் பாடலை மேடையில் பாடியிருப்பது, உண்மையிலேயே சிறப்பாக இருந்தது.. லதா மங்கேஷ்கர் மாதிரி பாடியிருக்கிறார்..

8 வருடம் கழித்து பாடி, மீணடும் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.. எனவே அதை நோக்கியே அவரது பேச்சும் இருந்திருக்க வேண்டுமே தவிர, மறுபடியும் ஒரு காலத்தில் தனக்கு அநீதி நடந்துவிட்டது என்று பழைய கதையையே பேசுகிறார். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறார்..

திருமணத்துக்கு முன்பு பாடலாசிரியர் சின்மயிடம் தவறாக நடந்து கொண்டால், திருமணத்துக்கு அழைத்து, அவர் காலில் விழுந்து எதற்காக நமஸ்காரம் வாங்க வேண்டும்? பாடலாசிரியர் திமுக அபிமானி என்பதால், இந்த குற்றச்சாட்டில் அரசியலும் உள்ளது..

எம்ஆர் ராதா நறுக்

கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ இப்படித்தான் ஒருமுறை பாலியல் வழக்கில் சிக்கினார்.. அதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை மட்டும் பார், என் பர்சனல் லைஃப்பை எட்டிப்பார்க்காதே என்றார்..

இதைத்தான் எம்ஆர் ராதாவும் சொல்வார், "கருத்து சொல்றவனின் சொந்த வாழ்க்கையை பார்க்காதே.. அவன் சொல்ற கருத்து, உனக்கு பொருந்தினால் எடுத்துக்கோ, இல்லாவிட்டால் அதை கடந்து போய்ட்டே இரு" என்பார்.. இப்படி ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது.. அதை ஆராய்வது பிறரின் வேலை கிடையாது.

வருத்தப்படுகிறேன்

கலாச்சேத்ராவில் இன்று வரை அனைத்து தரப்பினருமே உள்ளே நுழைந்து நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்துக்கு மேல் அனைத்து தரப்பினராலுமே நுழைய முடியவில்லை.. பிபிசி போர்டில் உள்ளவர்கள் யார்? கம்யூனிஸ்ட் மேலிட தலைவர்கள் எல்லாம் யார்? இங்கு அனைத்திலும் ஒரு அரசியல் உள்ளது..

சின்மயிக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு வருத்தப்படுகிறேன்.. அப்படி நடந்திருந்தால் அது தவறுதான்.. ஆனால், அந்த குற்றச்சாட்டை முழுமையாகவும் சொல்வதில்லை, தன்னுடைய கருத்தை முழுமையாகவும் வெளிப்படுத்துவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+