சில்லு சில்லாய் போகுதா சிவாஜி குடும்பம்? விக்ரம் பிரபு எடுத்த முடிவு.. மனமிறங்கும் பிரபு.. இது நிஜமா
சென்னை: அன்னை இல்லம் ஜப்தி தொடர்பான வழக்கு கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதி, "நீங்கள் கடனை செலுத்திவிட்டு, அந்த பணத்தை உங்கள் அண்ணனிடம் வாங்கி கொள்ளலாமே" என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதற்கு பிரபு, "அன்னை இல்லம் கடன் மட்டுமேயில்லை, இதுபோல பல இடங்களில் அண்ணன் ராம்குமார் கடன் வாங்கியிருக்கிறார். யார் யாருக்கு அவர் கடன் தர வேண்டும் என்று தெரியாது. அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பேற்பது?" என பதிலளித்திருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கருத்து கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "அன்னை இல்லம் ஜப்தி விவகாரம் கோர்ட் வரை விவகாரம் சென்றதையடுத்து, சிவாஜி குடும்பத்தின் மீது அன்பும், மரியாதையும், பாசமும் உள்ளவர்கள், பிரபு, ராம்குமாரிடம் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

3 கோடி கடனை அடைக்க முயற்சி
"அண்ணன் - தம்பிக்கு நடுவே வாதம் வேண்டாம், அப்பா காலத்தில் இருந்ததுபோலவே, இப்போதும் "ஒற்றுமையாக வாழ வேண்டும், ஆளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் போட்டு, அந்த ரூ.3 கோடி கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள்" என்றெல்லாம் ஆலோசனை சொல்லி வருகிறார்கள்.. இதையடுத்து, அண்ணனுக்காக உதவி செய்யலாம் என்ற ரீதியில் பிரபுவின் மனம் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.
விக்ரம் பிரபு கருத்து
இதற்கு நடுவில் விக்ரம் பிரபு, இதை ஏற்பதாக தெரிவதில்லை. எத்தனை காலத்துக்குதான், அவர்களுக்கு உதவி கொண்டிருப்பது? பணம் தரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்..
ஆனாலும், தன்னுடைய அண்ணனை கைவிட முடியாது என்று பிரபு சொல்லிவிட்டாராம்... "சொத்து பிரச்சனை கோர்ட்டில் நடக்கிறது... சொத்துக்களிலிருந்து எதுவுமே நான் அவர்களுக்கு தரவில்லை. தன்னுடைய சம்பாதியத்திலிருந்து மட்டுமே தருகிறேன்" என்று மகனுக்கு விளக்கம் தந்திருக்கிறார்.. இதனால் கோபித்து கொண்டு, விக்ரம் பிரபு அடையாறில் தனிக்குடித்தனமே சென்றுவிட்டார். இப்படி சொத்து விவகாரம், அடுத்த தலைமுறை பிரச்சனையாய் இது வெடித்துள்ளது..
பிரபுவின் சகோதரிகள் ஏற்கனவே கேஸ் போட்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கும் சொத்துக்களை தர வேண்டியிருக்கிறது.. பேரன் என்பதால் அதற்கான உரிமையும் தனக்குள்ளதாகவும் விக்ரம் பிரபு நினைக்கிறார்.
145 கோடி சொத்து
சிவாஜி கணேசனின் சொத்து, 270 கோடி ரூபாய் என்கிறார்கள்.. அதில் 145 கோடி தங்களுக்கு வரவேண்டும் என்று மகள்கள் உரிமை கோருகிறார்கள்.. இதற்கு நடுவில்தான் அன்னை இல்லம் ஜப்தி விவகாரம் வெடித்து விடவும், ஆளுக்கு ஒன்றரை கோடி போட்டு, படத்தை ரிரீஸ் செய்து, வழக்கையும் முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு வருகிறார்கள்.
ஆனால், வீடு பிரபு பெயரில்தான் உள்ளது.. எந்த சூழலிலும் வீட்டை பிரபு விட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கையில்தான், அவரது பெயரில் அன்னை இல்லம் வீட்டை சிவாஜி சார் எழுதி வைத்துள்ளார். எனினும் சூரக்கோட்டையில் 16 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பிற சொத்துக்கள் மீதான சலசலப்புகள் குடும்பத்தில் நிலவி கொண்டிருக்கிறது.
ராம்குமாரின் மகன்கள்
தோல்விகள் அடைந்த நிலையிலும், ராம்குமாரின் 2 பிள்ளைகளும், சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார்கள்.. ஏற்கனவே திரையில் இறங்கி அந்த படங்கள் சரியாக போகவில்லை. இதில் விக்ரம் பிரபு ஓரளவு நிரூபித்துள்ளார்.. தென்மாநில முகத்தை சேர்ந்தவராக இருப்பதால், ஓரளவு வரவேற்பு விக்ரம் பிரபுவுக்கு கிடைத்திருக்கிறது.. ஆனால், ராம்குமாரின் மகன்களும் பெரிதாக படங்களில் சோபிக்கவில்லை.. அவர்களது காமெடி படங்களும் எடுபடவில்லை.
எனவேதான் அமெரிக்காவில் உள்ள சிவாஜியின் சித்தப்பா பிள்ளைகள், ராம்குமாரின் மகன்களை அமெரிக்காவுக்கே அழைக்கிறார்கள்.. அங்கு வந்து ஏதாவது பிசினஸ் செய்யும்படியும், சினிமாவை தவிர்த்துவிடும்படியும் அழைக்கிறார்கள்.. ஆனால், சினிமாவைவிட்டு செல்ல ராம்குமாரின் பிள்ளைகளுக்கு மனசில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications