இங்க ஒரு பொண்ணு காத்திருக்கு... அங்க ஒரு பொண்ணு காத்திருக்கு.. கோபிக்கு மச்சம்ய்ய்யா!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் பரபரப்பா இருந்தாலும், ஆள் கடத்தல், வீண் பழி, பழிக்கு பழி காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இதனாலதான் சீரியல் பரபரப்பா இருக்கு.
மெட்டி ஒலி கோபியை இதுல பார்க்க முடியலை...எளிமையான குடும்பத்துல என்ன நடக்குமோ அதை எல்லாம் தாண்டி எங்கோ போயிகிட்டு இருக்கார் திருமுருகன்.
இருந்தாலும் கல்யாணவீடு சீரியலின் ரேட்டிங் கொஞ்சமும் குறையவில்லை. அதனால திருமுருகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் கதையை அவர் ஜோரா நடத்திக்கிட்டு இருக்கார்.

மியூசிக் ட்ரூப்
டெல்லியில இருந்தப்போ, ஸ்வேதா குடும்பத்துடன் கோபி குடும்பமே நல்ல பழக்கத்தில் இருக்காங்க. கோபி, ஸ்வேதா, ஸ்வேதா அண்ணன் மூணு பேருமே மியூசிக் ட்ரூப் நடத்தறவங்க. இதனால்தான் இரு குடும்பங்களுக்கும் நல்ல பழக்கம்.

காதல்
கோபி குடும்பம் திடீர்னு திருவையாறில் செட்டில் ஆகறாங்க.. அங்க சூர்யா மேல கோபிக்கும், கோபி மேல சூர்யாவுக்கும் காதல் வருது. அதை சொல்றதுக்குள்ள சூர்யாவுக்கு வேற மாப்பிள்ளை, அதான் ரோஜா விரும்பின ராஜாவை மாப்பிள்ளை பார்த்துடறார் சூர்யாவின் அப்பா.

கோபிகிட்ட தன் காதலை
இதுல மனசு கஷ்டமான கோபி, அப்போ வெளிநாடு போயிடறார். அங்க மறுபடியும் ஸ்வேதாவை சந்திக்க, ஸ்வேதா கோபிகிட்ட தன் காதலை சொல்றா. இதுல ஸ்வேதா ஏற்கனவே கல்யாணமாகி கணவனால் கைவிடப்பட்டவ.

கோபியிடம் காதலை
இங்க வந்தா, சூர்யா மறுபடியும் கோபிகிட்ட தன் காதலை சொல்லும் வாய்ப்பு கிடைக்குது. கோபி தவிக்கற நேரத்துலதான் ஸ்வேதா கோபி சூர்யா மேல வச்சிருக்கும் காதலை பார்த்துட்டு, கணவர் கிடைச்சுட்டதா பொய் சொல்றா.

அண்ணன் சத்தியம்
இப்போ கோபி சூர்யாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டு, பாண்டிச்சேரி போறார். அங்க ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்கணும்னு அவள் அண்ணன் சத்தியம் வாங்கிக்கறான்.

கோபி காணாம போயிட்டார்.
இப்போதான் மெயின் மேட்டரே... கோபி காணாம போயிட்டார்... திருவையாறு போலீஸ் பாண்டிச்சேரிக்கு வந்து விசாரிக்கறாங்க. அப்போ ஸ்வேதாவின் அண்ணன் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறவரை நான் ஏன் சார் கடத்தணும்னு கேட்கறார்.

இங்க என்னடான்னா
என்ன சார் சொல்றீங்க.. அங்க என்னடான்னா சூரியான்னு ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்க போறதா அவங்க வீட்டுல சொல்றாங்க. அந்த பொண்ணு கோபி கோபின்னு அழுது.. இங்க என்னடான்னா உங்க தங்கச்சியை கல்யாணம் செய்துக்க கோபி சத்தியம் செய்து குடுத்து இருக்கார்னு சொல்றீங்க.. குழப்பமா இருக்கேன்னு போலீஸ் கிளம்பறாங்க.

சரியாத்தான் பேர்
அப்போதான் இன்ஸ்பெக்டர் சொல்றா.. என்ன சார் கோபி கோபின்னு அங்க ஒரு பொண்ணு அழுவுது.. இங்க ஒரு பொண்ணு கோபிக்காக காத்திருக்கேன்னு சொல்லுது. அந்த கோபிக்கு மச்சம் சார்.. சரியாத்தான் அவனுக்கு பேர் வச்சிருக்காங்க.. கோபி கிருஷ்ணன்னு சொல்லி கிண்டலடிச்சு சிரிக்கறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications