Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SC யை கண்டுபிடிச்சது யாருடா? விஜய் டிவி நீயா நானா கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் அடையுங்க: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களை இன்னும் ஏமாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர, அம்மக்களுக்கு அரசியல் சொல்லி தரவில்லை. அதனால்தான் நீயா நானா கோபிநாத், SC என்று சொல்கிறார். இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் பெரியார், அம்பேத்கர் போராடினார்கள்.. அப்படியிருக்கும்போது, ஏன் மீண்டும் மீண்டும் எஸ்சி என்று ஞாபகப்படுத்துகிறீர்கள்?" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மக்களை இன்னும் ஏமாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர, அம்மக்களுக்கு அரசியல் சொல்லி தரவில்லை என்றும் சாடியிருக்கிறார்.

விஜய் டிவியில் கடந்த 27ம் தேதி நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பு பெண்கள் மற்றும் கிராமத்து ஆண்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு உரையாடினார்கள்.

நகரத்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களிடம் ஒரு பட்டியலின ஆணை கல்யாணம் செய்துகொள்வேன் என்பவரை கோபிநாத் கை தூக்க சொன்னார். ஆனால், ஒருவர் கூட அப்போது கை தூக்காததை கண்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்தார்..

Television Gopinath Neeya Naana

விஜய் டிவி நீயா நானா

கிராமத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஜாதியை விட்டு வெளியே வருவதில்லை? ஒரு சமூகம் தான் உங்களை குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்துவதாக சொல்லும் நீங்களே, சமூகத்தையே காரணம் காட்டுகிறீர்களே? கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொல்லும் நீங்கள் யார்? இனிமேலும் நீங்கள் இப்படித்தான் இருக்க போகிறீர்கள் என்றால் நகரம், கிராமம் இரண்டுமே ஒன்றுதான்" என்று கோபிநாத் ஆவேசமாக அவர்களிடம் கூறியிருந்தார்.

இந்த விவாதம் சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்து வருகிறது.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "முதல்ல இந்த டைட்டில் வைத்த அத்தனை பேரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். காரணம், "பட்டியல் இன ஆண்கள் பெண்கள்" என்று பிரிக்கக்கூடிய உரிமையை கோபிநாத்துக்கு யார் கொடுத்தது?

பட்டியலினம் SC என்று சொல்வது ஏன்?

நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பெண்ணை பட்டியலினம் SC என்று சொல்வது ஏன்? எஸ்சி/எஸ்டி என்று இந்த பெயரை வைத்தவர்களை, குறைந்தபட்சம் தூக்குல போடணும். இப்படி பிரித்து பார்க்க யார் இவர்களுக்கு அதிகாரம் தந்தது? உழைக்கும் மக்கள் பூராவும் இவர்கள்தான். பட்டியலினம், SC என்ற இந்த 2 விஷயத்தையும் தூக்கி தூரப் போட்டுவிட்டால், இம்மக்களை யாராலுமே அடையாளம் காண முடியாது.

ஆனால், அடையாளம் காண்பதற்காகவே இரண்டு பெயர்களும் மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தப்படுகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய பெண்ணின் பெயரை சொல்லி பேச வைத்திருந்தால், அந்த பெண் பின்வாங்கியிருக்க மாட்டார். ஆனால் பட்டியலினம் என்று சொன்னபிறகுதான் நிகழ்ச்சியில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.. பட்டியலின பெண்களை யார் திருமணம் செய்து கொள்வது? என்ற விவாதத்தை கோபிநாத் எழுப்பியிருக்க தேவையேயில்லை..

தொட்டால் தீட்டு

அந்த சமூகத்துக்கு கல்வியை மட்டும் தந்துவிட்டால், அப்பெண்கள் ஐ.டி. துறைக்கு செல்வார்கள், அதிகாரிகளாக செல்வார்கள். ஆனால், அவர்களுடைய அடையாளம் எங்கே பார்க்கப்படுகிறதோ? அவர்களின் அடையாளம் எங்கே பராமரிக்கப்படுகிறதோ, அங்கேதான் அவர்கள் SC மக்கள், ST மக்கள் என்று இனம் காணப்படுகிறார்கள். நகரங்களில் அப்படி இனம் காண முடியாது.

தொட்டால் தீட்டு என்பதை யார் முடிவு செய்வது? இந்து மதம்தான் முடிவு செய்கிறது.. கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மதத்திலும் இப்படியொரு பிரிவினை கிடையாது.. இப்படி உலகத்திலேயே கிடையாது. இந்து மதம் மட்டுமே இப்படி மனிதனை முடிவு செய்கிறது. காரணம், இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதமாகும்.

பிசிஆர் சட்டம் பாயும்

விஜய் டிவி நிகழ்ச்சியில், SC என்று சொல்லியிருக்கவேகூடாது. அப்படி சொன்னால், பிசிஆர் சட்டம் உங்கள் மீது பாயும்.. நீங்கள் சிறைக்கு தள்ளப்படுவீர்கள். சாதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் பெரியார், அம்பேத்கர் போராடினார்கள்..

அப்படியிருக்கும்போது, ஏன் மீண்டும் மீண்டும் எஸ்சி என்று ஞாபகப்படுத்துகிறீர்கள்?" என்னை இழிவுபடுத்திய இந்து மதத்திலிருந்து நான் வெளியேறுகிறேன்" என்று சொல்லி 2 லட்சம் பேரை அழைத்துக் கொண்டு, புத்த மதத்துக்கு சென்றுவிட்டார் அம்பேத்கர்.. இந்து மதத்திலிருந்து புத்த மத்துக்கு சென்றுவிட்டால், அவர்களை இனி எஸ்.சி. என்று சொல்ல முடியாதுதானே?

குண்டர் சட்டம்

மனித சமூகத்தை, ஒடுக்கப்பட்ட ஜாதியாக பிரித்தவனை குண்டர் சட்டத்தில் போட வேண்டும். கோபிநாத்தின் தந்தை இறந்தபோது, அவரது சாதி பெயரை குறிப்பிட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டரை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து, "சாதி பற்றி பேசும் கோபிநாத் அவர்களே, உங்கள் தந்தைக்கு இப்படி சாதி பெயரிட்டு போஸ்டர் ஒட்டலாமா" என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கோபிநாத் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்றாலோ, தேவேந்திர குல வேளாளர் என்றாலோ அப்படி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்க மாட்டார்கள்.. மேட்டுக்குடி என்பதால் அப்படி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சுவர்

பெரும்பாலும், சாதி என்பதே தங்களுடைய திமிரை, ஆணவத்தை காண்பித்து கொள்வதற்காகத்தான்.. ஊட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் அருந்ததியர்கள் அனைவரும் ஒரு காலனியில் குடியிருந்தனர். (இப்போதுதான் காலனி என்ற வார்த்தையையே நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்) தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் இந்த காலனி இருப்பதை விரும்பாத பண்ணையார், ஒரு பெரிய சுவர் வைத்து மறைத்துவிட்டார்..

மழையில் இந்த சுவர் இடிந்து விழுந்து, உழைக்கும் மக்கள் 10க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மக்கள், 1000-க்கும் மேற்பட்டோர், இஸ்லாத்துக்கு மாறுவதாக அறிவித்தனர். உடனே மத்திய அமைச்சராக்கப்பட்டார் முருகன். அந்த மக்களின் சாவுதான், சாதாரண முருகனை, மத்திய அமைச்சராக்கியது.

SCயை கண்டுபிடிச்சது யாருடா ?

60 வருட அரசியல் செய்யும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் விஜய்யை கண்டு பயப்படுகிறார்கள். மக்களை இன்னும் ஏமாற்ற முயற்சி செய்கிறார்களே தவிர, அம்மக்களுக்கு அரசியல் சொல்லி தரவில்லை. அதனால்தான் நீயா நானா கோபிநாத், SC என்று சொல்கிறார்.

இந்த SCயை கண்டுபிடிச்சது யாருடா ? எங்களை தலித் என்பதை எடுத்துவிடுங்க., மக்களோடு மக்களாக நாங்களும் வாழ்ந்து கொள்கிறோம் என்று உரிமை கேட்கிறார்கள். இதை மத்திய , மாநில அரசுகள் இனியும் செய்ய மறுத்தால், அடுத்து வரக்கூடிய சந்ததிகள், அதை உடைத்து எடுப்பார்கள் என்பதுதான் வரலாறு" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+