பேச காத்திருந்த ஆர்த்தி.. ஜெயம் ரவியுடன் இணைவாரா? ஒரே நாளில் 3 ஹீரோக்கள் வாழ்க்கையில் திருப்பங்கள்
சென்னை: தமிழ்த்திரையுலகில் நேற்றைய தினம் 3 பிரபலங்களின் வாழ்க்கையில், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.. ஒரே நாளில் நடந்த இந்த நிகழ்வுகள், கோடம்பாக்கத்தின் கவனத்தை பெற்றுள்ளதுடன், தமிழ் சினிமா ரசிகர்களையும் கவனிக்க செய்து வருகிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி இருவருமே விவாகரத்து கோரியிருந்தனர்.. கடந்த 2022ம் ஆண்டு, இவர்கள் இருவருமே பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சோஷியல் மீடியா மூலம் அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தனர்.

விவாகரத்து: எனவே, இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, இரு வீட்டு பெற்றோர்களும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது.. எனினும், தம்பதி இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்துள்ளனர்.. அதேசமயம், இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவருமே, தங்கள் விவாகரத்து பற்றின பேச்சை எங்குமே பேசவில்லை..
கடந்த வாரம், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகியிருந்தனர்.. "இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா" என்று, நீதிபதி கேட்டார். அதற்கு 2 பேருமே "எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்கள்..
தம்பதி ஆஜர்: இதையடுத்து, நேற்றைய தினம் நவம்பர் 27ம் தேதி, தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகியிருந்த நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டது.. இதையடுத்து, இருவருமே அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர்.
அதேபோல, நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடந்தது.. ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஆர்த்தி, "விவாகரத்து செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை, தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்" என்றும் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
விசாரணை: இந்த வழக்கு, சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பாக, ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. சமாதான பேச்சுவார்த்தை பேச, ஆர்த்தி ஏற்கனவே தயாரான நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து: நேற்றைய தினம் இந்த 2 விவாகரத்து வழக்குகளுக்கு நடுவில், பிரபல நடிகர் சித்தார்த்தின் 2வது திருமணம் நடந்துள்ளது.. சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது.. இதற்கு பிறகு சமந்தாவுடன் காதல் ஏற்பட்டு, அவரை விட்டு பிரிந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகு, நடிகை அதிதி ராவை காதலிக்க துவங்கினார்.. அதிதியுடன் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்திலுள்ள பழமையான கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது.
இப்போது, சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் மறுபடியும் ராஜஸ்தானில் திருமணம் நடந்திருக்கிறது. ராஜஸ்தானிலுள்ள பிஷன்கார்க்கில் இருக்கும் அலியா கோட்டையில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. இந்த கோட்டையில்தான், தங்களது திருமணம் நடக்க வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டார்களாம். எனவே, 2வது முறையாக, இவர்கள் திருமணம் செய்துள்ளனர். அந்த போட்டோக்களை அதிதி ராவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அடுத்தடுத்த பரபரப்பு: நேற்றைய தினம், ஒரே நாளில் 3 பிரபல நடிகர்களின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த திருப்பங்களும், பரபரப்பு நிகழ்வுகளும்தான், ரசிகர்களின் கவனத்தை சோஷியல் மீடியாவில் பெற்று வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications