நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் அவர் தனது சினிமா வாழ்க்கை, திருமணம், தனிப்பட்ட அனுபவங்கள், சமூக கருத்துகள் என பல விஷயங்களை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

kasthuri Tamil Actress Kollywood Tamil Cinema

கஸ்தூரியின் அனுபவம்

நடிகை கஸ்தூரி பேசும்போது, "பொதுவா சினிமா நடிகைகளுக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்காது, நல்ல மாப்பிள்ளை கிடைக்காது என்று சொல்வாங்க. அது என்னோட வாழ்க்கையிலேயே நடந்தது. எனக்காக பல வருடங்கள் மாப்பிள்ளை பார்த்தாங்க. அதுக்கப்புறம்தான் கலப்பு திருமணம் நடந்தது.

நடிகைகள் என்றாலே இப்படித்தான் இருப்பாங்கன்னு ஒரு முத்திரை எல்லாருக்கும் இருக்கு. ஆனா நிஜத்துல அப்படி கிடையாது. நான் சினிமாவில் கவர்ச்சி டான்ஸ் ஆடியிருக்கேன், சத்யராஜிடம் அல்வா வாங்குவது போல நடித்திருக்கேன். ஆனா அது சினிமா... நிஜ வாழ்க்கை வேறுதான்.

எல்லாருக்கும் மாதிரி எனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த கனவு நிறைவேற கொஞ்சம் காலம் ஆனது. ஆனா இப்போ நான் சந்தோஷமா இருக்கேன்" என்று கூறினார்.

ஒரே ஒரு தடவை தான் குடிச்சேன்

அவர் தொடர்ந்து பேசும்போது, "மது குடிப்பது உடல்நலத்துக்கு கேடு. அதை யாரும் குடிக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை தான் குடிச்சிருக்கேன். அதுவும் நண்பர்கள் வற்புறுத்தி, ஒரு சபதத்துக்காக. அதன் பேஸ்ட் எனக்கு பிடிக்கல. அதுக்கப்புறம் குடிக்கணும்னு எனக்கு தோணவே இல்லை.

நான் ஏன் குடிக்காதீங்கன்னு சொல்றேன்னா, குடிக்கிறவங்க தங்களோட சுயமரியாதையை இழக்கிறாங்க. குடிக்க பணம் இல்லாம பிச்சை எடுக்குற அளவுக்கு போயிடுறாங்க. நேற்று முன்தினம் நான் கார்ல போயிட்டு இருந்தேன். சிக்னலில் நின்றபோது ஒருவர் வந்து கதவை தட்டினார். நான் செல்ஃபி கேட்பார்னு நினைச்சேன். ஆனா அவர் 'ஒரு நூறு ரூபாய் கொடுங்க என்று கேட்டார். பார்த்த உடனே தெரியும்... குடிக்கத்தான் கேக்குறார்னு. இதெல்லாம் தேவையா? குடும்பத்தையும் கவனிக்க மாட்டாங்க" என்று தனது அனுபவத்தையும் பகிர்ந்தார்.

ஐஏஎஸ் ஆகணும்னு தான் ஆசை

அவர் மேலும், "சினிமாவுக்கு வரவில்லை என் என்றால் நான் வேற மாதிரி இருந்திருப்பேன் என்று சிலர் சொல்வாங்க. அது பெருமைக்காக சொல்லறது இல்லை, உண்மையிலேயே அவர்களோட கனவு. என் வீட்டிலும் என்னை ஐ ஏ எஸ் (Indian Administrative Service) அதிகாரியாக பார்க்கணும்னு தான் நினைச்சாங்க. அதுக்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனா எதிர்பார்க்காத சூழ்நிலையில் தான் சினிமாவுக்கு வந்துட்டேன். எனக்கு எந்த பின்புலமும் இல்லாம தான் வந்தேன். இப்போ கூட பலர் 'நீ ஐஏஎஸ் ஆகணும் இருந்த பொண்ணு'ன்னு சொல்வாங்க. நான் இப்போ அரசியல் விஷயங்கள் பேசுறத பார்த்து தான் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கஸ்தூரி யார்?

நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலம் ஆனார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குடும்ப கதைகளிலும், கவர்ச்சி வேடங்களிலும் நடித்தவர். சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்தவர். சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் இப்போது மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் சினிமாவைத் தாண்டி, சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் திறந்தவெளியாக பேசும் ஒருவராக மாறினார். சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துகளை நேராக சொல்லும் நடிகையாகவும் அவர் பெயர் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+