மாமியார் மாதிரியா இருக்காங்க.. அடேங்கப்பா.. கலக்கறீங்களே கவிதா!
சென்னை: இப்பல்லாம் சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அம்மா கேரக்டரில் இளம் நடிகைகளை தேர்வு செய்கிறார்கள். அப்போதான் ரசிகர்களும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதுவும் சீரியலில் தான் படுபயங்கரமாக யோசிக்கிறார்கள்.கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர்களை. இப்போது சீரியலில் அசால்டாக தூக்கி அம்மாவாகவும் மாமியாராக போட்டுவிட்டார்கள்.
அதுவும் ஒரு சீரியலில் கதாநாயகியை விடவும் இளமையிலும் அழகிலும் ஜொலிக்கும் ஒரு நடிகை தான் அவரது மாமியாராக போட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி பலர் ரசிகர்கள் கருத்துகளை போட்டு வந்தாலும் இது தான் கதைக்களம் என்று சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ராஜகுமாரி
அந்த மாதிரி சீரியல் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த சீரியல் உடல் ஷேமிங்கிற்கு எதிராக போராடும் ராசாத்தி என்னும் கேரக்டரை மையமாக கொண்டது. இதற்கு உறுதுணையாக சீரியலில் மங்கை எனும் கேரக்டரில் கவிதா நடித்திருக்கிறார். அதுவும் அவருடைய மாமியாராக இதனை பல ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளாமல் தான் முதலில் கமெண்டுகளை போட்டு வந்தனர்.

களம் அப்படி
ஆனாலும் கதையின் களம் அப்படி இருப்பதால் கேரக்டரை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறி வருகிறார்கள் . இவரை பற்றி தெரியாத சிலர் கூட ராசாத்திக்கு இவ்வளவு அழகான மாமியார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் .அதிலயும் இவருடைய தற்போதைய போட்டோவைப் பார்த்ததும் ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

ஆனந்தம் கவிதா
இவர் ஆனந்தம் சீரியலில் தொடங்கி பல சீரியலில் நடித்து இருந்தாலும் இவருக்கு முதல் முதலில் அறிமுகமான ஆனந்தம் சீரியலில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த சீரியலில் இவர் இரண்டாம் தாரமாக நடித்து இருப்பார். அதுவும் அப்போது அவர் இந்த கதை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று அழவும் செய்திருக்கிறாராம். ஆனால் அந்த கதையின் தாக்கம் இன்ப வரையிலும் இந்த அளவிற்கு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

கல்யாணம் முதல் காதல் வரை
பலரும் இவரை அந்த சீரியலில் நடித்தவர் தானே என்று தான் இப்ப வரைக்கும் ஞாபகம் வைத்திருக்கிறார்களாம். முதலிலே இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்ததால் தான் இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து உறவுகள் சங்கமம் ,நீலி கல்யாணம் முதல் காதல் வரை என பல சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர்.

குடும்பத்துக்கும் போதிய டைம்
தற்போது ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் .இவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் தவறாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி இவரும் இவரது மகளும் சேர்ந்து டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வீடியோக்களில் இவருடைய மகளை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பொண்ணு உங்களுக்கு இருக்கிறதா நம்ப முடியவில்லை என்று ஆச்சரியத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

முடி அழகி
இவருக்கு அழகே அவருடைய நீண்ட தலைமுடி தான் அதற்கான காரணத்தை கேட்டு எப்போதும் இவருடைய ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள். இவரும் இது எனக்கு என் அம்மாவிடம் இருந்து வந்தது தான் என்று சொல்லி சிரித்தாலும் ரசிகர்களை இதோ தான் கேட்டு வருகிறார்கள். இவருக்கு மட்டுமல்ல இவருடைய மகளுக்கும் அதே நீளமான முடியோடும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கலக்கும் மகள்
ரசிகர்கள் சீக்கிரத்தில் அடுத்த கதாநாயகியாக உங்கள் மகளை இறக்கி விடுவீர்களா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். எப்போதுமே இணையதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது ஃபோட்டோஷூட்டை நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவரது போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சூப்பர் பெர்பார்மன்ஸ்
அந்த அளவிற்கு ஹெவியாக பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். அதுவும் மாடல் உடையில் இவரை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி இறங்கி இருக்கீங்க என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். சிலர் இவருடைய அழகை புகழ்ந்து கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். கவிதாவுக்கும் இது ரொம்பப் பிடித்திருக்கிறதாம்.. திறமை, அழகும் ஒருங்கிணைந்த இவர் மேலும் உயரட்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications